Thursday, April 9, 2009

பெயர் சூட்டுங்கள்

அன்று இரவு 9.00 மணி. வலியின் அளவு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. காரில் அவளை அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்றனர். இந்தத் தருணத்தில்தான் நான் தொலைபேசியில் தற்செயலாக தொடர்பு கொண்டிருக்கிறேன். பொறுமையாகச் செல்லுங்கள்; நான் சிறிது நேரம் கழித்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு, ஒருவிதத் தவிப்போடு நான் தனியாக வீட்டில் இருக்கிறேன்.

என்னாச்சோ ஏதாச்சோ என்கிற தவிப்பு ஒவ்வொரு வினாடியும். பார்சல் வாங்கி வந்த சப்பாத்திப் பொட்டலம் பிரிக்காமல் அப்படியே பரிதாபமாய்க் கிடக்கிறது. அரைமணிக் கொருமுறை தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருந்த நான், எப்படி கண்ணயர்ந்தேன் என தெரியவில்லை. 12 மணிக்கு மேல் என்னையறியாது அமர்ந்தவாறே உறங்கியிருக்கிறேன்.

மொபைல் அலறுகிறது. ஹலோ..

பெண் குழந்தை பிறந்திருக்கிறது. சுகப் பிரசவம். தாயும் சேயும் நலம். எதிர்முனையில் இந்த வார்த்தைகளைக் கேட்டபின்புதான், என் தவிப்பு, படபடப்பு.... எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை; எல்லாம் அடங்கி, நெஞ்சுக்குள் ஒரு இதமான உணர்வு ஏற்பட்டது. நிம்மதி பெருமூச்சு விட்டவாறே என்னைப் பார்த்து நானே சிரிக்கிறேன். 03.04.2009 அதிகாலை 1.06க்கு தந்தையான மகிழ்ச்சியில் தூங்காமல் படுத்தே கிடந்தேன்.

தமிழ்மணத்தில் உலவும் தமிழறிஞர்களே.. என் செல்ல மகளுக்கு பெயர் சூட்டுவதற்காக தங்களின் ஆலோசனைகளைப் பெறலாம் என எண்ணுகிறேன். கீழ்க்கண்ட பெயர்களில் உங்களுக்குப் பிடித்த பெயர்களைத் தெரிவியுங்கள். அதுமட்டுமல்லாது தமிழின் முதல் எழுத்தாம் '' எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் உங்களுக்குப் பிடித்த நல்ல பல பெயர்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. அகமதி வெண்பா
2. அமோதினி தூரிகா
3. அருந்ததி வெண்ணிலா
4. அமிர்தவர்ஷினி
5. அமராவதி


அன்புடன்,
உழவன்

17 comments:

DHANS said...

வாழ்த்துக்கள்
என்னாலான சில பெயர்கள்

அகல்யா
அருந்ததி
அகிலா
அமுதா

DHANS said...

அபர்னா
ஆதிரை
ஆனந்தி
ஆராதனா
அருணா
ஆர்த்தி
அவந்தி
ஆவர்த்தனா
அபிநயா
அபிராமி
அம்பிகா
அபூர்வா
ஆதவி
அகல்யா
அக்னி
அழகி
அமிர்தா
அம்ருதா

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உழவன்

மழலையோடு மகிழுங்கள்.

எனக்கு உங்களின் இந்தப் பெயர் மிகவும் பிடித்தமாய்- அகமதி வெண்பா.
நல்ல தமிழ் பெயர்

(எனக்கு இன்னமும் வருத்தமுண்டு - என் மகளுக்கு நல்ல தமிழ் பெயர் வைக்கமுடியவில்லையே என்று, ஆனால் அமிர்தம் என்பது என் அப்பாவின் பாட்டி பெயர், என் அப்பாவின் நினைவாக நான் இந்தப்பெயரை வைத்தேன்.)

" உழவன் " " Uzhavan " said...

உங்கள் வாழ்த்துக்களுக்கும், பெயர்களுக்கும் மிக்க நன்றி DHANS

**********

//வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உழவன்//

நன்றி அமி.அம்மா

//எனக்கு உங்களின் இந்தப் பெயர் மிகவும் பிடித்தமாய்- அகமதி வெண்பா.
நல்ல தமிழ் பெயர் //

எனக்கும்தான். அதனால்தான் இப்பெயரை முதலிடத்தில் வைத்துள்ளேன். தங்களுக்கும் பிடித்துப் போனது. மிக்க மகிழ்ச்சி

/(எனக்கு இன்னமும் வருத்தமுண்டு - என் மகளுக்கு நல்ல தமிழ் பெயர் வைக்கமுடியவில்லையே என்று, ஆனால் அமிர்தம் என்பது என் அப்பாவின் பாட்டி பெயர், என் அப்பாவின் நினைவாக நான் இந்தப்பெயரை வைத்தேன்.) //

அழகான பெயர்தான். இதிலென்ன வருத்தம். சமஸ்கிருதம் சேர்ந்திருக்கிறது. உங்களைப் பார்த்துதான் அமிர்தவர்ஷினி என்ற பெயரையும் என்னோட லிஸ்ட்ல வைத்தேன். பெயர் வைத்த காரணத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி; மகிழ்ச்சி :-)

மாதங்கி said...

அகமதி
வெண்பா
அகமதி தூரிகா
இவை இரண்டும் என்
தேர்வு.
அ வில் இன்னும் சில

அமுதசுரபி,
அநங்கமாலா/மாலை
ஆண்டாள்
அருண்மொழி நங்கை
அமுதவல்லி
அங்கையற்கண்ணி
ஆனந்தவல்லி

" உழவன் " " Uzhavan " said...

மிக்க நன்றி மாதங்கி.

சொல்லரசன் said...

வாழ்த்துகள் நண்பரே.

அருள்மொழிதேவி
அருட்பெரும்தேவி
அமிழ்தமொழி

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்!

குழந்தைக்கு என் ஆசிகள்!

" உழவன் " " Uzhavan " said...

//@ராமலக்ஷ்மி
வாழ்த்துக்கள்!
குழந்தைக்கு என் ஆசிகள்! //

மிக்க மகிழ்ச்சி. தங்களின் ஆசிகளுக்கு கோடி நமஸ்காரங்கள் :-))

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்.... குழந்தைக்கும் அன்பு முத்தங்கள்..

நண்பர் சொல்லரசன் மூலம் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.....

குழந்தைக்கு பெயர் வைதாகிவிட்டதா? என்ன பெயர்?

SUMAZLA said...

பேனா பிடித்திருக்கும் உங்களின் மகளுக்கு தூரிகா என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். அதிலும் அட்சய தூரிகா - அள்ள அள்ள குறையாத தூரிகை(எழுத்து) பெயர் ரொம்ப பொருத்தம்.
உங்கள் மகளுக்கு என் வாழ்த்துக்கள்.
பெயர் வைத்துவிட்டு சொல்லுங்கள்.
-சுமஜ்லா

" உழவன் " " Uzhavan " said...

@சுமஜ்லா
அட்சய திருதியை ஸ்பெசலாக அருமையான பெயரைச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள் சுமஜ்லா.
பெயர் வைத்தபின்பு என் செல்ல மகளின் நிழற்படத்தோடும் அவளுக்காக நான் எழுதிய கவிதையோடும் உங்களையெல்லாம் சந்திக்கிறேன்.
வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்!

அன்புடன்
உழவன்

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

நண்பரே
இன்று தங்களின் இடுகையைப் பார்க்க முடிந்தது
தாமதத்திற்கு மன்னிக்கவும்

" உழவன் " " Uzhavan " said...

@திகழ்மிளிர்
மகிழ்ச்சி நண்பரே. மன்னிப்பா? என்ன பெரிய வார்த்தையெல்லாம்??? என் வலைக்கு வந்ததே பெரும் மகிழ்ச்சி.
தங்களின் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

Ilamparithi said...

Aathirai

dap said...

anna lakshmi

dap said...

anna lakshmi