அதிசயங்கள் அதிசயங்கள்
இவைகள்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அதிசயங்கள்!
இரவிலும் 'சூரியன்' உதிக்கும்
'இலை'களும் பல வண்ணங்களில் தளிர்க்கும்!
கொட்டையில்லா 'மாம்பழம்' கிடைக்கும்
சாட்டையில்லாமல் 'பம்பரம்' சுற்றும்!
பொட்டல் தரையிலும் 'தாமரை' மலரும்!
கொட்டாமலே 'முரசு' ஒலி எழுப்பும்!
கர்ணணின் 'கை'கள் வீட்டிற்குள் வந்துபோகும்
கதவிடுக்கிலும் காசு முளைக்கும்!
ஆள்காட்டி விரலில் மை வைக்கும்வரை
ஆளில்லா வீட்டிற்குள்ளும்
ஐநூறு ஆயிரம் கிடக்கும்!
அதிசயங்கள் அதிசயங்கள்
இவைகள்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அதிசயங்கள்!
உழவன்
இக்கவிதை யூத்ஃபுல் விகடனில் 01.04.2009 அன்று இடம்பெற்றுள்ளது.
9 comments:
aaama sarithaan.
நல்லா எழுதுறீங்க நண்பா.. வாழ்த்துக்கள்.. உங்களை பாலோ பண்ண வாய்ப்பு கொடுங்களேன்..
//கதவிடுக்கிலும் காசு முளைக்கும்!
ஆள்காட்டி விரலில் மை வைக்கும்வரை
ஆளில்லா வீட்டிற்குள்ளும்
ஐநூறு ஆயிரம் கிடக்கும்!//
அருமையான எளிமையான கவிதை.
கார்த்திகைப் பாண்டியன் said...
நல்லா எழுதுறீங்க நண்பா.. வாழ்த்துக்கள்.. உங்களை பாலோ பண்ண வாய்ப்பு கொடுங்களேன்..
எனது கருத்தும் அதே.
வாழ்த்துக்கள் நண்பரே.
இரவிலும் 'சூரியன்' உதிக்கும்'இலை'களும் பல வண்ணங்களில் தளிர்க்கும்!கொட்டையில்லா 'மாம்பழம்' கிடைக்கும்சாட்டையில்லாமல் 'பம்பரம்' சுற்றும்!பொட்டல் தரையிலும் 'தாமரை' மலரும்!கொட்டாமலே 'முரசு' ஒலி எழுப்பும்!கர்ணணின் 'கை'கள் வீட்டிற்குள் வந்துபோகும்//
சுயேட்சைகளின் சின்னங்களையெல்லாம் சொல்வதாய் இருந்தால் பதிவு பத்தாதுன்னு விட்டுட்டிங்க போல இருக்கு.
நல்லா இருந்துதுங்க கவிதை.
அப்புறம் உங்க பதிவில எழுத்துக்களின் பாண்ட் சைஸையோ, கலரையோ கொஞ்சம் மாற்றி அமையுங்களேன்.
படிப்பதற்கு கொஞ்சம் சிரமமா இருக்கு.
//சுயேட்சைகளின் சின்னங்களையெல்லாம் சொல்வதாய் இருந்தால் பதிவு பத்தாதுன்னு விட்டுட்டிங்க போல இருக்கு.//
:-)))
//நல்லா இருந்துதுங்க கவிதை.//
ரொம்ப நன்றி அமி.அம்மா உங்களின் தொடர் வருகைக்கும், பாராட்டுக்களுக்கும்.
@அமிமா
//அப்புறம் உங்க பதிவில எழுத்துக்களின் பாண்ட் சைஸையோ, கலரையோ கொஞ்சம் மாற்றி அமையுங்களேன்.
படிப்பதற்கு கொஞ்சம் சிரமமா இருக்கு. //
அலுவலகத்தில் வைத்துதான் இந்த வேலைகளையெல்லாம் செய்ய வேண்டியுள்ளதால் சற்று சிரமம் இருக்கும். நிச்சயம் மாற்றி அமைக்க முயலுகிறேன்.
@Naina, மண்குதிரை, சொல்லரசன், கார்த்திகைப்பாண்டியன்
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. தாராளமாக என்னைப் பின் தொடரலாம் :-)
Post a Comment