Thursday, March 19, 2009

என் மனையாளே..

நீ
எந்த மாதிரியான
பொட்டுகளை
வைக்கிறாய் என்று
ஒருநாளும் நான்
கவனித்ததில்லை.
முகம் பார்க்கும்
கண்ணாடியில்
நீ வைத்து விட்டுச் சென்ற
ஸ்டிக்கர் பொட்டையே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இப்போது
ஏனென்று தெரியாமல்!
 
வழக்கம்போல்
எல்லா விளக்குகளும்
எரியத்தான் செய்கின்றன
ஆனாலும் என்னவோ
வீடு இன்னமும்
முழுமையான வெளிச்சம்
அடையாததுபோல்தான் உள்ளது!
 
உதிர்ந்து கிடக்கும்
உன் கூந்தலேறிய
மல்லிகைகளில்லாமல்
தலையணை
பூக்காத செடிபோல
பொலிவற்றுக் கிடக்கின்றன!
 
உன்னோடு பேசிப் பழகிய
பாத்திரங்கள் எல்லாம்
உன் குரல் கேட்காததால்
ஊமையாகிப் போனதோ?
கீழே விழுந்தாலும்
இப்போதெல்லாம்
சத்தம் எழுப்புவதில்லை!
 
வீட்டில் இப்போது
கொசுக்களே இல்லை
உன்னைக் கடித்து
மகிழத்தான் வந்திருக்குமோ!
 
உனக்கு நான்
ஊட்டி விடுகையில்
உன் இதழ்தொட்டு
மகிழ்வதற்காய்
விறுவிறுவென வளர்ந்த
நகங்கள்
வளராமல் அப்படியே
இருக்கின்றன - உன்
இதழ் சுவை காணாததால்!
 
என் வாழ்வில்
முதல் முறையாக
காதல் பூத்திருக்கிறது
உன் பிரிவால்!
 
தாய் வீட்டிற்குச்
சென்றிருக்கும்
என் மனையாளே..
உன்னைப்
பார்க்கவேண்டும் போலிருக்கிறது.
எப்போது வருவாய்?
 
 

13 comments:

Unknown said...

தவிப்பை உணர்த்தும் கவிதை அழகு.. :)) வலி.. :((

நையாண்டி நைனா said...

இப்படியும் பீல் பண்ணுற ஆளுங்க இருக்காங்களா?
ஹி.... ஹி.... ஹி......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொட்டு விசயமும்.. அந்த பாத்திரம் விழுந்து சத்தம்போடுதலும் அருமைங்க.. :))
நல்லா ஃபீல் செய்யறீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வழக்கம்போல் எல்லா விளக்குகளும் எரியத்தான் செய்கின்றன ஆனாலும் என்னவோ வீடு இன்னமும் முழுமையான வெளிச்சம் அடையாததுபோல்தான் உள்ளது!

உன்னோடு பேசிப் பழகிய பாத்திரங்கள் எல்லாம் உன் குரல் கேட்காததால் ஊமையாகிப் போனதோ? கீழே விழுந்தாலும் இப்போதெல்லாம் சத்தம் எழுப்புவதில்லை! //

ரொம்ப நல்லா இருக்கு நண்பா.. பிரிவின் வலி.. வாழ்த்துக்கள்..

அமுதா said...

நல்லா இருக்குங்க... முத்துலெட்சுமி சொன்ன மாதிரி பொட்டும், பாத்திரமும் அருமை

Maddy said...

காதலின் இன்பமும் துன்பமும் ஏங்க வைக்கும் பிரிவில்......கொஞ்சம் நாட்களுக்கு முன்னே நான் எழுதியது இங்கே

http://vannavaarthaigal.blogspot.com/2009_01_01_archive.html

குடந்தை அன்புமணி said...

அனைவரும் பிரிந்து சென்ற காதலியைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கையில் பிறந்த வீட்டுக்குச் சென்ற மனைவியின் பிரிவை வடித்திறுக்கிறீர்கள். நன்றாக உள்ளது. வாழ்த்துகள். (பாலோவர் போடலாமே!)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பொட்டுன்னு ஆரம்பிச்சு, சட்டுன்னு போட்டு உடைச்சி, கடைசியில படிக்கிற நாங்க உடைஞ்சிட்டோம்.

உங்க மனையாளுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல கவி சொல்லும் கணவன் வாய்த்தமைக்காக.

"உழவன்" "Uzhavan" said...

பாராட்டிய
ஸ்ரீமதி, நையாண்டி நைனா, முத்துலட்சுமி-கயல்விழி, கார்த்திகை பாண்டியன், அமுதா, Maddy, அன்புமணி, அ.அம்மா
அனைவருக்கும் நன்றி.

குறிப்பாக என் மனையாளுக்கும் வாழ்த்து சொன்ன அ.அம்மாவிற்கு கூடுதல் நன்றிகள் :-)

"உழவன்" "Uzhavan" said...

// (பாலோவர் போடலாமே!) //

குடந்தை அன்புமணி அவர்களே.. பாலோவர் போடுதல் பற்றி சற்று விளக்கினால் எனக்கு எளிதாக இருக்கும்.

சொல்லரசன் said...

நல்ல கவிதை நண்பரே,வாழ்த்துகள்

பிரிவெல்லாம் பிரிப்பது இல்லை
பிரிப்பது எல்லாம் பிரிவுயில்லை

குடந்தை அன்புமணி said...

//" உழவன் " " Uzhavan " said...
// (பாலோவர் போடலாமே!) //

குடந்தை அன்புமணி அவர்களே.. பாலோவர் போடுதல் பற்றி சற்று விளக்கினால் எனக்கு எளிதாக இருக்கும்.//

இந்தப்பிரச்சனை பற்றி வேத்தியன் எழுதியிருக்கிறார். சென்று பார்க்கவும்.
http://jsprasu.blogspot.com/

Anonymous said...

beempsymn [url=http://wiki.openqa.org/display/~buy-bactrim-without-no-prescription-online]Buy Bactrim without no prescription online[/url] [url=http://wiki.openqa.org/display/~buy-flomax-without-no-prescription-online]Buy Flomax without no prescription online[/url]