Monday, February 16, 2009

சென்னை கிரிக்கெட்

ஆட்டம் பரபரப்பாகவும்
விறுவிறுப்பாகவும்
போய்க்கொண்டிருந்தது
 
பவுண்டரியில் பீல்டிங்
செய்த நான்
பறந்து வந்த பந்தை
வேகமாய் ஓடிச்சென்று பிடித்துவிட்டு
விக்கெட் விழுந்த
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்
 
என்னைப் போலவே
எனதருகில் நின்று
பீல்டிங் செய்த ஒருவர்
"பாஸ்.. அது எங்க பால்"
என்றபோதுதான்
எனக்குப் புரிந்தது
அவன் பிடிக்க வேண்டிய பந்தை
நான் பிடித்து
அவர்களுக்கு
பீல்டிங் செய்துள்ளேன் என்று !
 
தீப்பெட்டிக்குள்
அடைக்கப்பட்ட குச்சிகள் போன்று
இருந்த மைதானத்தைப் பார்த்தபோது
 
மிளகாய் மாரு பிடுங்கப்பட்ட
பல ஏக்கர் பொட்டல்காட்டில்
பதினோரு பேரு கூட இல்லாமல்
கிரிக்கெட் ஆடிய
அந்த நினைவுகள்
சச்சின் அடித்த பவுண்டரியாய்
விர்ரென்று ஒரு விநாடி வந்து போனது !
 

9 comments:

ஆதவா said...

பழைய நினைவுகளில் விளையாட்டுக்களில் முந்தி நிற்பது கிரிக்கெட்...

எத்தனை பல்லுடைப்புகள்!,
எத்தனை காயங்கள்!!
எத்தனை வெற்றிகள்!!!!

அதெல்லாம் ஒரு காலம்ங்க...

நல்ல நினைவுக் கவிதை!!!! தொடர்ந்து எழுதுங்க

என் தளத்திற்கும் உங்களின் வருகையை எதிர்பார்க்கிறேன்!!!!

நன்றீ!!!

ஆதவா said...

நீங்கள் தமிழ்மணத்தில் இணைந்து கொள்ளலாமே!!!

www.tamilmanam.net
www.tamilish.com

சேருங்க... நிறைய பேரோட பார்வை உங்க தளத்திற்கு வரும்

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்னைப் போலவே எனதருகில் நின்று ஃபீல்டிங் செய்த ஒருவர் "பாஸ்.. அது எங்க பால்" என்றபோதுதான் எனக்குப் புரிந்தது

காமெடிக் கதையை கவிதையாக அழகாக உருவாக்கம் செய்திருக்கிறீர்கள்

தமிழ் அமுதன் said...

ஹா ஹா .... சூப்பர்

இது சென்னை கிரிக்கெட்..... சரி !
எங்க ஊருல மேட்ச் நடக்குறப்போ
லெக் அம்பயரா நின்னவர் ''கேட்ச்''
புடிச்சுட்டு வழிஞ்சது நினைவுக்கு வருது!

ராமலக்ஷ்மி said...

சென்னை கிரிக்கெட் இங்கே ஒளிஞ்சுட்டு இருக்கா? இன்னும் பதிவேற்றக் காணுமேன்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன்:)!

கவிதை அருமை. அதுவும் என்ன லாவகமாய் பிடிச்சிருக்கீங்க பந்தை:))!

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
சென்னை கிரிக்கெட் இங்கே ஒளிஞ்சுட்டு இருக்கா? இன்னும் பதிவேற்றக் காணுமேன்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன்:)!
கவிதை அருமை. அதுவும் என்ன லாவகமாய் பிடிச்சிருக்கீங்க பந்தை:))!//

எல்லாம் அனுபவம்தான். தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை நன்றாக இருக்கிறது உழவரே.

ஆ.ஞானசேகரன் said...

கவிதை நன்றாக இருக்கு நண்பா,,,, வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

ஜெஸ்வந்தி ---> நன்றி தோழி
 
ஆ.ஞானசேகரன் ---> நன்றி நண்பா