Wednesday, February 25, 2009

மாநரக வாழ்க்கை

ஏழு மாதமல்ல
ஏழு ஆண்டுகள் ஆனாலும்
எதிர் வீட்டில் இருப்பது
யாரென்று தெரிந்துகொள்வதில்லை!
 
எத்தனை மாதங்களோ
இதே பேருந்து நிறுத்தத்தில்தான்
ஏறுகிறேன் இறங்குகிறேன்
என்னோடு பயணிப்பவர்களிடம்
இதுவரை அறிமுகம்
ஆனதே இல்லை!
 
கோவில்
சந்தை
பேருந்து நிலையம்
கடைத்தெரு.. இப்படி
நாள்முழுக்க
எங்கெங்கு சுற்றினாலும்
உறவு சொல்லி அழைக்க
இங்கு யாருமில்லை - அட
எவரையேனும் எவராவது
அழைக்கும் குரல் கூட
காதில் விழுந்ததில்லை!
 
பட்டப் பகலில்
தெருமுனை வீட்டின்
பூட்டை உடைப்பதைப்
பார்க்கும் நாம்
ஐயோ பாவம்
சாவியைத் தொலைத்துவிட்டான் போலும்
என பரிதாபப் பட்டுக்கொண்டே
அவசரமாய் எங்கோ செல்கிறோம்
வீடு திரும்பும்போதுதான் தெரிகிறது
அந்த வீட்டில்
அத்தனையும் திருடு போனது!
 
கோலி, பம்பரம்
கில்லி, கிளித்தட்டு
கபடி, பாண்டி
எங்கே?
தியேட்டரும், பீச்சும் தான்
பொழுது போக்கு இங்கே!
 
இரவில் கூட வீட்டைப் பூட்டாத
என் கிராமத்து வாழ்க்கை - இங்கு
நாள் முழுக்க பூட்டிய வீட்டினுள்
புழுங்கியே கிடக்கிறது!
 
வெள்ளத்தில் வீடுகள் மிதந்தாலும்
குளிக்க ஒரு குளம் கூட இல்லையடா
குடிக்கும் ஒரு செம்பு தண்ணீரும்
இங்கு பணம் தானடா!
 
வாசல் தாண்டி வந்துவிட்டால்
எல்லோரும் இங்கு அநாதையடா!
செயற்கை சிரிப்பினில்தான்
நகருது நகர வாழ்க்கையடா!
 

7 comments:

தமிழ் said...

ஒவ்வொரு வரியும் உண்மை

நையாண்டி நைனா said...

super sir. (It is also from 'citi'son)

மிக அருமையாக சொன்னீர்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இரவில் கூட வீட்டைப் பூட்டாத என் கிராமத்து வாழ்க்கை - இங்கு நாள் முழுக்க பூட்டிய வீட்டினுள் புழுங்கியே கிடக்கிறது!

எதார்த்தத்தை விழுங்கிய வரிகள் அத்தனையும். மேற்கூரியதை சற்று அதிகமாகவே இரசித்தேன்.

பழமை விரும்பியோ நீங்கள்.

அமுதா said...

உண்மை...

ராமலக்ஷ்மி said...

அத்தனை வரிகளும் மாநகர வாழ்வின் அவலங்களைப் புட்டு புட்டு வைக்கின்றன!

"உழவன்" "Uzhavan" said...

@அமுதா
வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

//@ராமலக்ஷ்மி
அத்தனை வரிகளும் மாநகர வாழ்வின் அவலங்களைப் புட்டு புட்டு வைக்கின்றன! //

:-))