Tuesday, August 19, 2008

வாடகை வீடு !

தொப்பூழ் கொடி
அறுபடும் வரை
குழந்தைக்கு
கருவறை
வாடகை வீடு !
வெள்ளி முளைத்த
இரவு
சந்திரனுக்கு
வாடகை வீடு !
விளக்கு தூங்கும்
பகல்
சூரியனுக்கு
வாடகை வீடு !
சல்லிக்கட்டு காளையாய்
மிரட்டி வரும்
காட்டு வெள்ளத்திற்கு
ஓடை ஒரு
வாடகை வீடு !
வீட்டுக்கதவில்
தூக்கிலிடப்பட்ட
துணிப்பை
பால் பாக்கெட்டுக்கு
வாடகை வீடு !
மார்கழி
கோலத்துக்கு
பனி தெளித்த
முற்றம்
வாடகை வீடு !
வானவில்லாய்
வந்துபோகும்
வாலிபத்திற்கு
சதைக்கூடு
வாடகை வீடு !
மானுட இனத்தையே
இனம் பிரிக்கும்
பணத்திற்கு
சட்டைப்பை
வாடகை வீடு !
ஆட்டம் போடும்
தசையுள்ள எலும்புகளே ...
இப்பூமிப்பந்து
உங்களுக்கு
வாடகை வீடு !



http://vaarppu.com/poet/458/

8 comments:

Ramya Ramani said...

wow :))

"உழவன்" "Uzhavan" said...

Nanri Ramya ;-)

Darwinci said...

nalla kavidhai!!!
:)

Anonymous said...

தொப்பூழ் கொடி

அறுபடும் வரை

குழந்தைக்கு

கருவறை

வாடகை வீடு ! - vaadagaiya enna koduthathu kuzhanthai - "thaaimai" enum pero

ஆட்டம் போடும்

தசையுள்ள எலும்புகளே ...

இப்பூமிப்பந்து

உங்களுக்கு

வாடகை வீடு !

Intha kavithai nalla varunanai + karppanai + nalla santhangalodu...

kadaisi kavithai thaan ungal nokkamaga irunthirukkavendum... muthaaippaga.

atharkkaga ovvontaiyum touch pannee kavithai nayathududan koduthirukireerkal

nice to read ... this is the first time i have read your poem...yet, definitely i will keep reading.

Baskar
ponnakk@gmail.com

"உழவன்" "Uzhavan" said...

Nanri Darwinci

Uzhavan

"உழவன்" "Uzhavan" said...

தங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி Baskar
தொடர்ந்து படியுங்கள்..

நன்றி
உழவன்

பாலாஜி said...

தங்கள் கவிதை அருமையாக இருந்தது..
ஒரே ஒரு திருத்தம்.
தொப்பூழ் அல்ல அது தொப்புள்...

"உழவன்" "Uzhavan" said...

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி Bala!

எனக்கும் இதே ஐயம் இருந்தது. ஒருமுறை கவிஞர் வைரமுத்து அவர்களின் ஏதோ ஒரு நூலில் தொப்பூழ் என்று படித்த ஞாபகம்.

நன்றி
உழவன்