Thursday, April 18, 2013

அம்மாவுக்கு நன்றி


நேற்று இரவு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கரண்ட் போய்விட்டது. வேறு ஏதாவது லைட் போடுவாரு இல்லேனா மெழுகுவர்த்தியாவது எத்துவார்னு வெயிட் பண்ணுனா அவர் ஏதும் பண்ணுற மாதிரி தெரியல. சாமி படத்துக்கு முன்னால ஏத்தி வைத்திருந்த விளக்கு வெளிச்சத்துலையே எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் சாப்பிடாமல் சப்லையரையே பார்த்துக் கொண்டிருந்தேன். உடனே அவர் அவருடைய செல்போன் டார்ச் லைட்ட ஆன் பண்ணி என் பக்கத்தில் வைத்தார். பின்புதான் நான் சாப்பிட ஆரம்பித்தேன்.

விளக்கு இருந்தாலும் இல்லையென்றாலும் நம் மக்கள் சாப்பிட பழகி விடார்கள் போல என்று நினைத்துக் கொண்டு வெளியே பார்த்தால், பரோட்டா மாஸ்டர் பரோட்டா போட்டுக் கொண்டிருக்கிறார்; இன்னொருவர் தன் வாயில் மொபைலை கவ்விக்கொண்டு ஆப்பம் சுட்டுக் கொண்டிருக்கிறார்.

அட தேவுடா.. நான் மட்டும் தான் மின்தடையில் வாழ பழகவில்லையோ என என்னை நானே கடிந்து கொண்டு, எப்படியாவது இந்த வாழ்க்கைக்கு பழகிக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்தில் ஹெட் லைட் போடாமல் வீடு வரை வந்து சேர்ந்தேன்.

***

நான் முகப்புத்தகத்தில் நிலைத்தகவல் இடுவதற்குக் காரணமாக இருக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி. என்னடா இது.. பேஸ்புக்குக்கும் அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு நினைக்குறீங்க்களா? சொல்றேன் கேளுங்க.
விதி எண் 110 வதின் கீழ் தமிழகத்தில் இன்று முதல் பேஸ்புக் தடை செய்யபபடுகிறதுனு ஒருவேளை அறிவித்திருந்தால்... அப்படி அறிவிக்காமல் இருந்ததிற்குத் தான் நன்றி சொன்னேன்.

க்ர்ர்ர்ர்.. கடுப்பாகுதா வெயிட் ப்ளீஸ்..

சமீபத்தில் என் மகள் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு கோவையின் எதோ ஒரு தொகுதியைச் சார்ந்த அதிமுக MLA சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.  அவர் பேசும் போது, "நான் இங்கு வருவதற்குக் காரணமாக இருந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசினார்.

இப்ப எதற்கு அம்மாவுக்கு நன்றி சொல்றாருன்னு நானும் முன் மண்டையை சொறிந்து யோசித்தேன்; ம்ஹூம்… பின் மண்டையைச் சொறிந்து யோசித்தேன்.. ம்ஹூம்.. ஒன்னும் புலப்படல.

கொஞ்ச நேரம் எந்த மண்டையையும் சொறியாமல் யோசித்தபோதுதான் "இவர் MLA என்கிற காரணத்தினால்தான் இங்கு அழைக்கப்பட்டிருக்கிறார்; MLA ஆவதற்குக் காரணம் அம்மாதானே. அதனால் தான் நன்றி சொல்லியிருக்கிறார்" என்று  புரிந்தது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை மதியம் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது "அம்மா நீர் மோர் பந்தல்" கண்ணில் படவே, இரண்டு டம்ளர் மோர் குடித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. குடித்து முடித்துவிட்டுக் கிளம்பும்போது “ரெம்ப நன்றிங்க” என்றேன். அதற்கு அவர், "எனக்கெதுக்குங்க நன்றி, அம்மாவுக்கு சொல்லுங்க" என்றார். கண்டிப்பா இவர் அந்த MLA  வோட சொந்தக்காரரா இருப்பார்னு முடிவு  பண்ணிக்கிட்டேன்.
இப்படி அம்மாவோட விசுவாசிகள் ஒவ்வொருவரும், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நன்றி சொல்லும்போது, அதிமுகவின் அடிமட்டத் தொண்டன் நான் நன்றி சொல்லக்கூடதா. அதான் நன்றி சொன்னேன்.

4 comments:

ராமலக்ஷ்மி said...

அம்மாவுக்கு நன்றி, உங்களை மீண்டும் பதிவெழுத வைத்ததற்கு:)!

/ஹெட் லைட் போடாமல் வீடு வரை வந்து சேர்ந்தேன்./

இனி செய்யாதீர்கள்.

Prabu Krishna said...

:-)))

சே. குமார் said...

நடக்கட்டும்... நடக்கட்டும்...

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...