Sunday, September 18, 2011

வந்தான் வென்றான்


ஜீவா நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் "வந்தான் வென்றான்". படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை எப்படியெல்லாம் நம்மைச் சாகடிக்க முடியுமோ அப்படியெல்லாம் சாகடிக்கிறார்கள்.

இசை மகாகேவலம். இரண்டு பாடலை பொறுத்துக்கொண்டு கேட்கலாம்.

படத்தின் நாயகி தாப்ஸி ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருப்பதால் மட்டுமே படத்தின் ஹீரோவாக ஜீவாவைச் சொல்லலாம். மற்றபடி இவர் தான் ஹீரோ என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை.

படத்தின் பலமே சந்தானம்தான். நடிகர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் அதிகமான சம்பளம் சந்தானத்திற்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

படத்தின் கடைசியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜீவா பிழைத்து விடுகிறார். ஆனால் தியேட்டரில் இருப்பவர்கள் எல்லாம் செத்துவிடுகிறார்கள்.

இறுதிக்காட்சியில் இயக்குநர் வருகிறார். (அவர் வரும்போது இவர்தான் டைரக்டர் என, சிலர் சொன்னது காதில் விழுந்தது). அவர் வருவது வேறு எதற்காகவும் இல்லை; படம் பார்த்தவர்கள் எல்லாம் இருக்கிறார்களா இல்லை போய்ச் சேர்ந்துவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்தத்தான்.

இப்படத்தைப் பார்க்கவேண்டும் என ஆசையாக உள்ளதா? போங்க. விதி யாரைவிட்டது.

11 comments:

Prabu Krishna said...

ஹா ஹா ஹா.... என்னாச்சு ஸார் ?

CS. Mohan Kumar said...

சினிமா விமர்சனம் உங்களிடமிருந்தா என உள்ளே வந்தால், சிறு குறிப்பு எழுதிருக்கீங்க :)))

எங்கேயும் எப்போதுமாவது போயிருக்கலாம் என தோனிருக்குமே

குடிமகன் said...

இப்பத்தான் உண்மைத்தமிழனோட ‘எங்கேயும் எப்போதும்’ விமர்சனம் படிச்சிட்டு வந்தேன் பாராட்டி தள்ளிவிட்டார்.. ஆனா நீங்க முதல் வரியிலேயே வந்தான் வென்றானை – வந்தான் தோற்றான் அல்லது வந்தான் சென்றான் னு ஆக்கிடிங்க...

அப்போ இந்தவாரம் எங்கேயும் எப்போதும் தான் எனது சாய்ஸ்..

Anonymous said...

நான் படிக்கலை உழவன் சினிமா விமர்சனத்தில் எனக்கு பெரிதாய் விருப்பமில்லை. நான் மீண்டும் எழுத வந்தேன் அதான் அப்படியே ப்லாக் படிக்கும் போது உங்க பதிவையும்.. சரிங்க நலமா?

'பரிவை' சே.குமார் said...

உண்மைதான்... நான் பார்க்க ஆரம்பித்து தூங்கிவிட்டேன்.
எதார்த்தமான கதைக்களங்களில் கலக்கும் புதிய இயக்குனர்களுக்கு மத்தியில் இது போன்ற குப்பைகள்... வந்தான்... கொன்றான்...

ஹுஸைனம்மா said...

பாவம்.. எவ்வளவு நொந்து போயிருந்தா, பதிவே எழுதாத நீங்க இப்படியொரு பதிவு எழுதிருப்பீங்க... இருந்தாலும், நீங்க பட்ட கஷ்டம் நாங்களும் படவேணாம்னு நினைச்சு எச்சரிச்ச உங்க நல்ல மனசுக்கு நன்றிங்க.

vimalanperali said...

விதிவழிடே சென்று சினிமா பார்க்கச் சொல்கிறீர்கள்.சரி பார்க்கிறேன்.

Anonymous said...

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..

விச்சு said...

ஜீவா பிழைத்துவிடுகிறார். தியேட்டரில் எல்லோரும் செத்துவிடுகிறார்கள்.. போட்டுத் தாக்கிட்டீங்கண்ணே..

Prabu Krishna said...

வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

கவிதை பந்தலில் இளைப்பாறலாம்

lakshmi said...

excellent collection thanks for posting...


Hindi, English, Telugu, Tamil Sex Stories googlika