Monday, March 21, 2011

அம்மா… டம்மா…

அடைகோழியின் சிறகுகளுக்குள் அடைபட்டிருக்கும் முட்டைகள் போல, இரவின் சிறகுகளுக்குள் நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தோம். தனது நீண்ட குழலால் வண்ணத்துப்பூச்சி தேனை உறிஞ்சுவதுபோல, சிறு நீல நிற விளக்கொன்று இரவை உறிஞ்சிக்கொண்டிருந்தது.
"அப்பா.. அப்பா.." என அடித்து எழுப்பினாள் இரண்டாவது அகவையை நெருங்கிக்கொண்டிருக்கும் அகமதிவெண்பா. இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது எப்போது எழுந்தாலும் எல்லாவற்றுக்கும் அவள் என்னைத்தான் எழுப்புவாள். இந்த வகையில் அம்மாவுக்கு அவள் தொந்தரவு தருவதில்லை. எழுந்து "என்னடா.. என்ன வேணும்?" என்று கேட்டபோது, "அப்பா.. தண்ணி.. அப்பா.. தண்ணி" என்று அழுதுகொண்டே கேட்டாள். "அழாதம்மா.. வா அப்பாட்ட வா.. அப்பா தண்ணி தர்ரேன்" என அவளைத் தூக்கி தோளோடு சாய்த்துக்கொண்டு, அருகிலிருந்த செம்பை எடுத்துக் கொடுத்தேன். அழுகையை நிறுத்தாமல் தலையை ஆட்டிக்கொண்டே "அப்பா.. டம்மா, அப்பா.. டம்மா" என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.

"என்னம்மா.. டம்மா விழுந்திட்டயா. எங்க டம்மா விழுந்த?" என நான் கேட்கக்கேட்க, அவள் அதையே சொல்லிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அவள் பாஷையில் டம்மா என்றால், டம்முனு கீழே விழுந்திட்டேன் என்பதுதான் அர்த்தம். எப்போதாவது விழுந்துவிட்டால், விழுந்த இடத்தைக் காட்டிக்கொண்டே "அம்மா.. டம்மா" என சொல்வாள் அகமதி. டமால் என விழுந்துவிட்டாளாம். அழுதுகொண்டிருந்தவளை அணைத்துக்கொண்டு, தண்ணீரைக் கொடுத்துக் குடிக்கவைக்க எவ்வளவோ பிரயத்தனங்கள் செய்தும், அவள் அதையேதான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள். என்ன கேட்கிறாள் எனப் புரியாது நான் விழித்துக்கொண்டிருந்தபோது, "டம்ளர்ல தண்ணி கேட்குறா" என்று சொன்னாள் மனைவி.

"டம்ளர்ல தண்ணி வேணுமா?" என கேட்டவுடன், "ம்ம்ம்.. " என வேகமாகத் தலையை ஆட்டி அழுகையை நிறுத்தினாள். இப்போது அவள் கூறிய டம்மாவிற்கு டம்ளர் என்று பொருள் கொள்ளத் தெரியாதவனாகிப் போனேன். கதவைத் திறந்து சமயலறை சென்று டம்ளரை எடுத்துத் தண்ணீர் பிடித்துத் தந்தவுடன், கையில் வாங்கி மடக் மடக்கென அவ்வளவையும் குடித்து முடித்தாள். "ஃபுல்லா குடிச்சிட்டயாம்மா.. அவ்வளவு தாகமா?" அதற்கு அவள் "ம்ம்ம்ம்.."

குழந்தையோடு முடிந்த அளவு அதிக நேரம் செலவழித்தும் இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கிருந்தது. ஒரு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் புரிந்துகொள்ள தாயால் மட்டுமே முடிகிறது. அதற்காகத்தான் தாய் எப்போதும் குழந்தையுடனேயே இருக்கிறாள். காலச் சூழலால் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு தாய் தந்தை இருவருமே வேலைக்குச் செல்பவர்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே சங்கடமாக இருக்கிறது.

உழவன்

19 comments:

ராமலக்ஷ்மி said...

கவிதையாய் ஒரு பகிர்வு:)!

CS. Mohan Kumar said...

:))

:(((

Kavinaya said...

//கவிதையாய் ஒரு பகிர்வு:)!//

அதேதான்! :)

"உழவன்" "Uzhavan" said...

@ ராமலக்ஷ்மி
@ மோகன் குமார்
@ கவிநயா

மூவருக்கும் எனது நன்றிகள் :-)

ஷர்புதீன் said...

yes, i know what is the loss when both of people going for job!

'பரிவை' சே.குமார் said...

கவிதையைப் பற்றி கவிதையாய் ஒரு பகிர்வு... குட்டிக்கு வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

@ சே.குமார்
@ ஷர்புதீன்

இருவருக்கும் எனது நன்றிகள் :-)

ஹுஸைனம்மா said...

//இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது எப்போது எழுந்தாலும் எல்லாவற்றுக்கும் அவள் என்னைத்தான் எழுப்புவாள்//

இப்படியிருக்கையில்,

//இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் //

ஏன்?

:-))))

Thenammai Lakshmanan said...

அம்மாவாய் அப்பா ஆகமுடியாதுதான் உழவன்..:))

இராஜராஜேஸ்வரி said...

குழந்தையுடன் அருமையாய் ஒரு பகிர்வு. நல்லா இருக்கு.

நிலாமதி said...

தாய்மை உணரப்படுகிறது.
கிர்வுக்கு நன்றி

நிலாமதி said...

தாய்மை உணரப்படுகிறது.
கிர்வுக்கு நன்றி

Chitra said...

காலச் சூழலால் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு தாய் தந்தை இருவருமே வேலைக்குச் செல்பவர்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே சங்கடமாக இருக்கிறது.


..... மன வேதனையுடன், எத்தனை பேர் வேலைக்கு செல்கிறார்களோ?

Chitra said...

good post.

"உழவன்" "Uzhavan" said...

@ ஹுஸைனம்மா

டம்மா கேட்டது இதுதான் முதல்முறை:-)
நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@ தேனம்மை

அழகா சொல்லிட்டீங்க.. நன்றி
உங்க கவிதைகளை குமுதத்தில் பார்த்தேன்.. உப்புமூட்டை மிக அருமை. பாராட்டுகள்!

"உழவன்" "Uzhavan" said...

@இராஜராஜேஸ்வரி

மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@நிலாமதி

மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@ Chitra

ரொம்ப நன்றிங்க