Sunday, September 19, 2010

சிறு துரும்பும்...

சமயலறையில் ஒரே சத்தம்
தக்காளி வெங்காயம் உருளை
அவரை பீன்ஸ் வாழைக்காய் என
எல்லோருக்குள்ளும் ஒரே சண்டை
 
என் கலருக்கு ஈடு யார்
எனத் தக்காளி கேட்டால்
கேரட் சும்மா விட்டுவிடுமா என்ன
 
அடி முட்டாளை
போடா வெங்காயம் என்றுதான்
திட்டுவார்களாம் என
உருளை வெங்காயத்தை
அழ வைத்துகொண்டிருந்தது
 
ஏய் இலவச இணைப்பு
உனக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கெடக்கு என
கறிவேப்பிலையை பச்சை மிளகாய் கிண்டலடிக்கவும்
எல்லோரும் ஏளனமாய்ச் சிரித்தார்கள்
கறிவேப்பிலையின் முகமோ வாடிவிட்டது
 
"அக்கா.. கறிவேப்பிலை கொஞ்சம் கொடுங்களேன்
என்னதான் காய்கறி போட்டு குழம்பு வைத்தாலும்
கறிவேப்பிலை இல்லாம தாளிச்சா நல்லாவா இருக்கும்"
 
எதிர் வீட்டுக்காரம்மா கேட்டபோது
நிலவிய நிசப்தத்தில்
கறிவேப்பிலையின் சிரிப்பு சத்தம்
வாசமாய் அறையெங்கும் நிறைந்திருந்தது.
 
உழவன்

27 comments:

Chitra said...

சிறு துரும்பும் பல்குத்த உதவும். அருமை.

ராமலக்ஷ்மி said...

//கறிவேப்பிலை இல்லாம தாளிச்சா நல்லாவா இருக்கும்//

அதானே:)?

//கறிவேப்பிலையின் சிரிப்பு சத்தம்
வாசமாய் அறையெங்கும் நிறைந்திருந்தது//

அருமை! ரசித்தேன்.

Vidhya Chandrasekaran said...

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு கறிவேப்பிலைக் கொத்தாட்டாம் இருக்கான்னு சொல்லக் கேட்டிருக்கேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட :)

'பரிவை' சே.குமார் said...

அருமை! ரசித்தேன்.

அன்பரசன் said...

வித்தியாசமான கவிதை.
ரசிக்கும்படி இருந்தது.

Anonymous said...

adadadaaaaaaaaaaa...ithaiyum vittu vaikalaiya enaku yen thonamal pochu nice one yar,,,

ஹுஸைனம்மா said...

கையும் வாயும் சண்டை போடுமே அந்தக் கதை போல!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை.

"உழவன்" "Uzhavan" said...

//Chitra
சிறு துரும்பும் பல்குத்த உதவும். அருமை. //
 
அடடே.. கண்டு பிடிச்சிட்டீங்களே :-)
ரொம்ப நன்றிங்க உங்க தொடர் வருகைக்கு.

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
//கறிவேப்பிலை இல்லாம தாளிச்சா நல்லாவா இருக்கும்//

அதானே:)?

//கறிவேப்பிலையின் சிரிப்பு சத்தம்
வாசமாய் அறையெங்கும் நிறைந்திருந்தது//

அருமை! ரசித்தேன். //
 
மிக்க நன்றி.. வாக்களித்தமைக்கும் :-)

"உழவன்" "Uzhavan" said...

//வித்யா
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு கறிவேப்பிலைக் கொத்தாட்டாம் இருக்கான்னு சொல்லக் கேட்டிருக்கேன். //
 
ஆமா.. கறிவேப்பிலைக்கு அப்படி இரு மவுசும் உண்டு.  நன்றி விதயாஜி.

"உழவன்" "Uzhavan" said...

//முத்துலெட்சுமி/muthuletchumi
அட :) //
 
தங்களின் முதல் வருகையென எண்ணுகிறேன்.. மகிழ்ச்சியும் நன்றியும்.

"உழவன்" "Uzhavan" said...

//சே.குமார்
அருமை! ரசித்தேன். //
 
ரொம்ப நன்றி நண்பா..

"உழவன்" "Uzhavan" said...

//D.R.Ashok
:) //
 
நன்றி அசோக்ஜி :-)

"உழவன்" "Uzhavan" said...

//அன்பரசன்
வித்தியாசமான கவிதை.
ரசிக்கும்படி இருந்தது. //
 
இதை வித்தியாசம் எனப் புகழந்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
ரசித்தமைக்கும் நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

//தமிழரசி
adadadaaaaaaaaaaa...ithaiyum vittu vaikalaiya enaku yen thonamal pochu nice one yar,,, //
 
கவியரசிக்கு காதல் வரிகள் தானே தோணும். இது எப்படி தோணும்? ;-))

"உழவன்" "Uzhavan" said...

//ஹுஸைனம்மா
கையும் வாயும் சண்டை போடுமே அந்தக் கதை போல!! //
 
அப்படியேதான்.. ரொம்ப நன்றிங்க

"உழவன்" "Uzhavan" said...

//வெறும்பய
அருமை. //
 
மிக்க நன்றி

அம்பிகா said...

உழவர் சந்தையா? காய்கறி கவிதை அருமை!

velji said...

கருவேப்பிலை மாதிரி தூக்கிப்போட்டுட்டாஙன்னு இனி யாரும் சொல்லமுடியாது!

தமிழ்க்காதலன் said...

மிக நாசுக்காய் வென்று விட்டீர்கள்....?! வாழ்க்கையின் சத்தியத்தை எவ்வளவு எளிமைபடுத்தி விட்டீர்கள்....! நல்லது உழவு தோழா....தொடருங்கள்...ம்ம்ம்ம்

"உழவன்" "Uzhavan" said...

//அம்பிகா
உழவர் சந்தையா? காய்கறி கவிதை அருமை! //
 
பாராட்டுக்க்கு மிக்க நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

//velji
கருவேப்பிலை மாதிரி தூக்கிப்போட்டுட்டாஙன்னு இனி யாரும் சொல்லமுடியாது! //
 
கண்டிப்பா.. இனி யாரும் அப்படி சொல்லமட்டாங்க :-) நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//தமிழ்க் காதலன்.
மிக நாசுக்காய் வென்று விட்டீர்கள்....?! வாழ்க்கையின் சத்தியத்தை எவ்வளவு எளிமைபடுத்தி விட்டீர்கள்....! நல்லது உழவு தோழா....தொடருங்கள்...ம்ம்ம்ம் //

ரொம்ப மகிழ்ச்சி தோழா :-)

"உழவன்" "Uzhavan" said...

இண்டி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
(இண்டியில ஓட்டு போடுறவங்க ஏன் தமிழ்மணத்துலயும் ஓட்டு போடுறது இல்ல: )

SUFFIX said...

ஹி..ஹி..சிம்ப்ளி சூப்பர் உழவரே