Sunday, September 5, 2010

பெயர்ந்த பொழுதில்...

மளிகைக் கடைக்குச் சென்றேன்
இருக்கன்குடி மாரியம்மன் படம்.
காய்கறிக் கடையில்
எஸ்விஎம்ஆர் ஜவுளி ஸ்டோர் காலண்டர்.
மழைநீர் மறித்ததால்
வேறுபாதையில் நுழைகையில்
சிந்தலக்கரை வெட்காளியம்மன் துணை
என்று எழுதப்பட்ட டீக்கடை.
காரா சேவு வாங்கச் செல்கையில்
கடை உரிமையாளர்
வந்திறங்கிய வாகனம் டிஎன் 69
 
ஒருபோதும்
விலையில் சலுகை பெற்றதேயில்லை.
இருப்பினும்
இன்னமும் இவர்களுக்கே
நான் வாடிக்கையாளன்
பிழைக்க வந்த இவ்வூரில்!
 
உழவன்

9 comments:

Anonymous said...

பொழுதில் புலர்ந்த உண்மை அருமை

sakthi said...

நிதர்சனமான கவிதை !!!!
நல்லாயிருக்குங்க உழவன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நிதர்சன கவிதை !!!!

'பரிவை' சே.குமார் said...

நிதர்சனமான கவிதை !!!!

ARUMAI.

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க உழவன்...

ராமலக்ஷ்மி said...

பெயர்ந்த பொழுதில்
எழுந்த சிந்தனையில்
விளைந்த கவிதை
அருமை உழவன்.

Chitra said...

nice. :-)

"உழவன்" "Uzhavan" said...

தமிழரசி
sakthi
வெறும்பய
சே.குமார்
க.பாலாசி
ராமலக்ஷ்மி
Chitra

இண்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

rvelkannan said...

முதலில் புலம்பல் மாதிரி தெரிந்தது. மறு வாசிப்பில் கவியை புரிந்து கொண்டேன்