பூக்களால் சூழப்பட்ட நிலத்தில்
மல்லாந்து படுத்திருக்கும் அவளின்
திரைச்சீலை திறந்து
முன்வாசல் வழியாய்
விரல் நுனியால் ஊர்ந்து
சிலிர்ப்பு மூட்டி
வரவேற்பறையில் விளையாடி
பலவகைப் பழச்சாற்றைப் பருகி
உண்டு களித்து
உள்ளும் புறமுமாய்
எதையெதையோ தேடி
எதையுமே எடுக்காது
ஒவ்வோர் அறையிலும் தன்னைப் புதைத்து
பின் வாசல் வழியாய்
வெளியேற முயற்சித்து
தோற்று
அவள் மேலேயே கவிழ்ந்து படுத்து
சிறிது உறங்கிப் பின் செல்கிறான்
கிழக்கிலிருந்து வந்த வெயிலன்!
உழவன்
நன்றி உயிரோசை
Wednesday, July 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நல்லாருக்கு உழவரே!
தலைப்பு, மிக அருமை!
நல்லாருக்கு உழவன்.
நல்லாருக்குங்க கவிதை.
ஆஹாஹா! அருமை
நல்லாருக்குங்க கவிதை.
அருமை...
கவிதை நல்லாருக்குங்க .
தலைப்பு, மிக அருமை!
ungal rasanai suvaiai prathipalichi eruku uzhavan,,,,,
நல்ல கற்பனை, கவிதை நயம், தலைப்புக்கேற்ற படம். அசத்திட்டிங்க. உங்க பாசையில சொன்னா, நல்லாத்தான் உழுதுட்டிங்க போங்க..!
நல்ல கற்பனை,
Post a Comment