Sunday, June 27, 2010

வலமும் இடமும்

கடவுளின் இடப் பக்கமாய்
கட்டணத் தரிசன வரிசை
 
கருவறைக்குள்
உற்றுப் பார்க்கிறேன்
கடவுள் சற்று
வலப்பக்கமாய்த் திரும்பி நிற்கிறார்!
 
உழவன்

12 comments:

SUFFIX said...

:)உழவரே!!

க.பாலாசி said...

நல்லாப்பாத்தீங்களா உழவரே... எனக்கு அப்படித்தெரியலையே...

அருமை...

'பரிவை' சே.குமார் said...

அருமை உழவரே.

Vidhya Chandrasekaran said...

ம்..

Katz said...

ரசித்தேன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமை. ரசித்தேன்
small poem but has deep meaning.

ஹுஸைனம்மா said...

அப்படியா? சில சமயம் ”கண்ணை நம்பாதே; உன்னை ஏமாற்றும்”!! :-))

பத்மா said...

ஹஹா! வலப்பக்கம் நானும் இருந்தேன் நீங்க பார்க்கலியா?
nice

vasu balaji said...

அப்புடிப் பார்த்தாதான் பரவால்லையே. ஒரு வேள அப்படி பார்த்துட்டா இடப்பக்கம் போயிருவானில்ல அடுத்த முறை:)

ஆ.ஞானசேகரன் said...

நீங்கள் எந்தப்பக்கம் நின்றீர்கள் நண்பா????

நல்லாயிருக்கு

ராமலக்ஷ்மி said...

திரும்பி நிற்கிறாரா வலப்பக்கமாய் பார்க்கிறாரா:)? நல்ல கவிதை.

"உழவன்" "Uzhavan" said...

நன்றி SUFFIX
 
நன்றி க.பாலாசி - உங்களுக்கு அப்படித் தெரியலயா.. ஒரிஜினல் சாமி இருக்குற கோயிலுக்குப் போங்க தெரியும் :-)
 
நன்றி சே.குமார்
 
நன்றி வித்யா
 
நன்றி வழிப்போக்கன்
 
மிக்க நன்றி ஜெஸ்வந்தி
 
நன்றி ஹுஸைனம்மா - ஆமாங்க.. சிலசமயம் கண்ணை நம்பக்கூடாது.. காசுனா கடவுளே வாயைப் பொளக்கிற நிலைமைதான இப்ப :-)
 
நன்றி பத்மா - பார்த்தேன் பார்த்தேன். உங்களுக்குப் பின்னாலதான நான் இருந்தேன் :-)
 
நன்றி வானம்பாடிகள் சார்
 
நன்றி ஆ.ஞானசேகரன் - நாம எந்தப் பக்கம் என்பது முக்கியமல்ல; கடவுள் எந்தப் பக்கம் என்பதுதான் முக்கியம் :-)
 
நன்றி Chitra ஜி
 
நன்றி ராமலக்ஷ்மி மேடம்