Monday, June 14, 2010

கடைசி பெஞ்ச் மாடசாமி - அகநாழிகை

பத்து ஆண்டுகளுக்குப் பின்
நேற்றுதான் மாடசாமியைப் பார்த்தேன்
லிபர்டி தியேட்டர் வழியாகத்
தனக்குத்தானே பேசிக்கொண்டு வந்துகொண்டிருந்தான்.
 
அருகினில் சென்றவுடன்
அவனும் அடையாளம் கண்டுகொண்டான்
எப்படி இருக்க? என்ன பண்ணுற?
என்பன போன்ற விசாரிப்புகளின்போதுதான் பார்த்தேன்
காதில் அவன் ஏதோ ஒன்றை மாட்டியிருந்ததை.
 
கடைசி பெஞ்ச்
மாடசாமியும் சுதாகரும்
எப்போது பார்த்தாலும்
பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்.
ஒருநிலையில் கடுப்பான தமிழாசிரியர்
என்னைக்காவதொருநாள் பைத்தியம் பிடித்து
தனக்குத்தானே பேசிக்கொண்டு
ரோடுரோடாக அலையப் போகிறீர்கள்
என சாபம் விட்டது நினைவுக்கு வந்தது.
 
விடைபெற்று கோடம்பாக்கம் ரயில் நிலையம்
நோக்கிச் செல்கையில்
காதில் ஏதோ ஒன்றை மாட்டிக்கொண்டு
இவனைப் போலவே ஒருவன்
தனக்குத்தானே பேசிக்கொண்டு சென்றுகொண்டிருந்தான்
 
இவன் சுதாகராக இருப்பானோ
அவன் முகம் காண்பதற்காக
விரைந்து நடந்தேன்.
 
உழவன் 

நன்றி: அகநாழிகை (ஜூன் 2010)

11 comments:

Unknown said...

Nice one.

அன்புடன் நான் said...

சுதாகர்தானா?

SUFFIX said...

என்ன கொடுமை சார் இது...

ஹுஸைனம்மா said...

ஏறக்குறைய பத்து வருஷம் முன்னே, இங்கே ஒரு அழகான இளம்பெண் ரோட்டில் தனியாகச் சத்தமாகப் பேசிக்கொண்டு நடநததைப் பார்த்து மிரண்டு போய்விட்டேன், இவளுக்கு என்ன நோயோ என்று!!

பிறகுதான் என்னவர் அவளின் ஹெட்செட்டைக் காண்பித்தார்!!

:-))))

ராமலக்ஷ்மி said...

அகநாழிகையிலேயே ரசித்து வாசித்த ஒன்று! கருணாகரசுவின் கேள்விக்கு மறக்காமல் பதில் சொல்லுங்க உழவரே:))!

க.பாலாசி said...

கவிதை எளிமையாயும் அழகாகவும் இருக்கிறது. அவர்தானான்னு பார்த்தீங்களா இல்லையா.??

Chitra said...

விடைபெற்று கோடம்பாக்கம் ரயில் நிலையம்
நோக்கிச் செல்கையில்
காதில் ஏதோ ஒன்றை மாட்டிக்கொண்டு
இவனைப் போலவே ஒருவன்
தனக்குத்தானே பேசிக்கொண்டு சென்றுகொண்டிருந்தான்

..... ha,ha,ha,ha,ha,ha...

மதுரை சரவணன் said...

சுதாகர் மட்டும அல்ல நிறைய நபர்கள் இப்படி தான் தனக்கு தானே புலம்பிக்கொண்டு செல்கின்றனர். வாழ்த்துக்கள்

நளினி சங்கர் said...

அருமை...

"உழவன்" "Uzhavan" said...

@செல்வராஜ் ஜெகதீசன்
@சி. கருணாகரசு
@SUFFIX
@ஹுஸைனம்மா
@ராமலக்ஷ்மி
@க.பாலாசி
@Chitra
@நளினி சங்கர்
@மதுரை சரவணன்
 
வருகை புரிந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

கமலேஷ் said...

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது நண்பரே...
போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்...