சைலண்ட் மோடில்
மாற்ற மறந்த செல்போன்
அலறியதும்
அவசர அவசரமாய் எடுத்து
மெதுவாய் ஹாலோ என்றேன்.
"ஏன்டா.. அறிவில்ல உனக்கு
கோவிலுக்குள்ள கூட ஆஃப் பண்ணமாட்டியா?"
"ஹலோ.. யாருங்க நீங்க?"
"ம்ம்.. கடவுள்"
அர்ச்சகரின் செல்போன் எண் மட்டும்
உனக்கு எப்படித் தெரியாமல் போனது? என
சுரீரென கேட்டுவிட்டேன்.
கடவுள் இப்போது கோபமாய் இருக்கிறார்
சிறிது நேரத்திற்கு அவரிடம்
எதுவும் வேண்டாதீர்கள்.
உழவன்
Sunday, June 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
நெல் மணியாய்!
அர்ச்சகரின் செல்போன் எண் மட்டும்
உனக்கு எப்படித் தெரியாமல் போனது? என
சுரீரென கேட்டுவிட்டேன்.
////
நியாமான கேள்வி..
இதற்கு கடவுளின் பதில் என்ன ?
மிக ரசித்தேன் உழவன். :))
நல்ல வரிகள் ரசித்தேன்
அடடா... நல்லாருக்குங்க...உழவன்...
கேள்வி கேட்கிறது கடவுளுக்கு பிடிக்காதுன்னு தெரியாதா உங்களுக்கு..??
அர்ச்சகர் எப்போதாவது சாமி கும்பிட்டு பார்த்திருக்கீங்களா?
அவர் கோவிலுக்கு வர்றது வேலை பார்க்க மட்டும் தான்.
அதே மாதிரி நீங்க வேலை பாக்கற எடத்துல செல் போன் பேசறதில்லையா உழவன்?
‘கேள்வி கேட்டால் கடவுளுக்குக் கூட பிடிக்காதுன்னு சொல்லுங்க’ன்னு பின்னூட்டமிட வந்தால் பாலாசியும் அதையே சொல்லியிருக்கிறார்.
அடுத்து சுதாகர் சிந்திக்க வைக்கிறார்.
நல்ல பாயிண்ட். நல்ல கேள்வி.
ஆயினும் நீங்கள் சொல்ல வந்த கருத்து என்னவோ நானும் பாலாசியும் கேட்டதுவே என நினைக்கிறேன்.
பாராட்டுக்கள் உழவன். சுதாகர் உங்களுக்கும்தான்...
:-))
ரொம்ப நல்லாருக்கு உழவரே!
சுதாகர்,
:-) அதானே?
நல்லவேளை சொன்னீங்க!
அந்த கடவுளின் நம்பர் என்னனு சொல்ல முடியுமா?
@Chitra A
@முனைவர்.இரா.குணசீலன்
@ஷர்புதீன்
@வெறும்பய
@வானம்பாடிகள்
@VELU.G
@க.பாலாசி
@சுதாகர் - இதைத்தான் சுதாகர் நானும் கேட்கிறேன். அவனே வைத்திருக்கிறான். அப்படியிருக்க என்னிடம் மட்டும் ஏன் இப்படி கேட்கிறாய் என்பதுதான் என் கேள்வியும் :-)
@ராமலக்ஷ்மி - அதானே.. கேட்க எவ்வளவோ இருக்க, கடவுளிடம் போய் ஏன் கேள்வி கேட்கவேண்டும் :-)
@குடந்தை அன்புமணி
@பா.ராஜாராம்
@அன்புடன் அருணா - இப்போது கோபம் குறைந்திருக்கும் என எண்ணுகிறேன். இப்போ வேண்டிக்கோங்க :-)
@padma - ஓ.. உங்களுக்கு கடவுளின் நம்பர் வேணுமா? அவசர நேரத்துல 108 க்கு கால் பண்ணுங்க :-)
உங்கள் அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி..
தமிலிஸ் மற்றும் தமிழ்மணத்துல வாக்களித்தவர்களுக்கும் நன்றி
எதிலுமே வாக்களிக்காமலும், பின்னூட்டம் போடாமலும் வாசித்து மட்டும் சென்றவர்களுக்கும் என் நன்றிகள்.
நீண்ட நாட்களுக்கு உங்கள் பக்கத்திற்கு வருகிறேன். கடவுள வச்சு காமெடி கீமடி பண்ணலையே ? அ..ஆ...வ்
உழவன்...கடவுளையும் விட்டு வைக்கலியா இந்த போன் !
@Karthick Chidambaram
ரொம்ப நன்றி.. அடிக்கடி வாங்க :-)
ரொம்ப நன்றி ஹேமா
ரொம்ப நல்லாயிருக்குது. செமயா வந்துருக்கு, க்ரியேட்டிவிட்டி.
for follow up
@ச.முத்துவேல்
மிக்க நன்றி நண்பரே
Post a Comment