Tuesday, June 22, 2010

உழவனின் “நெல்மணிகள்" - 3

'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்' சார்பில் பதிவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் என்னுடைய "மியாவ்" என்ற கவிதைக்குப் பரிசு கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. உரையாடல் அமைப்பினருக்கும், என்னை எப்போதும் ஊக்கப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பரிசு பெற்ற மற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

oOo
 
இந்த வார (21.06.2010) உயிரோசையில் எனது "வெயில் புணரும் வீடு" எனும் கவிதை இடம்பெற்றுள்ளது. என் பல கவிதைகளை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தும் உயிரோசைக்கு எனது நன்றிகள்.

oOo
 
இம்மாத அகநாழிகை இதழில் (ஜூன் 2010) "கடைசி பென்ச் மாடசாமி" என்ற என் கவிதையை வெளியிட்ட இதழின் ஆசிரியர் அவர்களுக்கு என் நன்றிகள்.

oOo
 
உயர்கல்வி 2010-11ம் கல்வியாண்டு முதல் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வின் மூலம் சேர்க்கை பெறும் குடும்பத்தின் "முதல் பட்டதாரி" மாணவ மாணவியர்களின் கல்விக்கட்டணம் (Tuition fee) முழுவதையும் சில நிபந்தனைகளுக்குட்பட்டு அரசே ஏற்றுக்கொள்கிறது. ஒரு குடும்பத்தில் முதல் பட்டதாரியாகவிருக்கும் மாணவ மாணவியர்கள் இச்சலுகைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேற்படியான விபரங்களுக்கு, உங்களுக்கான தாலுகா அலுவலகத்தைத் தொடர்புகொள்ளவும்.
 
தொழிற்கல்வி படிக்கும் அளவிற்கு வசதி இல்லையே என ஏங்கும் ஏழை மாணவர்களுக்கு (அக் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக இருப்பின்) இது ஒரு வரப்பிரசாதமாகும். அரசுக்கு நன்றி.
 
இதற்கான அரசு ஆணையைப் படிக்க, அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்தச் சுட்டிக்குச் செல்லவும்.

உழவன்

8 comments:

Chitra said...

WOW! Congratulations! :-)

க.பாலாசி said...

மொத்தத்துக்கும் வாழ்த்துக்கள் கவிஞரே...

கடைசிப்பகிர்வுக்கும் நன்றிகள்...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Congrats.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்தும் சந்தர்ப்பங்களைத் தொடர்ந்து எங்களுக்குத் தர வாழ்த்துக்கிறேன்:)!

பகிர்ந்திருக்கும் தகவல் நன்று.

கமலேஷ் said...

congrats nanbare..

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள்!! இனி உங்க ஆக்கம் எந்தெந்தப் பத்திரிகைகள்ல வந்துருக்குன்னு தனியா ஒரு பதிவு வாரா வாரம் போடுங்க!!

“நெல்மணிகள்”ல பல ரகம் கொடுங்க பாஸ்!! :-)))

"உழவன்" "Uzhavan" said...

Chitra
க.பாலாசி
ஜெஸ்வந்தி
ராமலக்ஷ்மி
கமலேஷ்
அமிர்தவர்ஷினி அம்மா
ஹுஸைனம்மா
 
அனைவருக்கும் நன்றி