Sunday, May 23, 2010

வாடிக்கையாளர் திருப்தி

அன்று
 
பத்துப் பைசா கொடுத்து வாட்ச் கட்டச் சொல்வேன்.
நல்லா படிக்கனும் ராசா எனச் சொல்லிக்கொண்டே
சிறு மோதிரமொன்றும் போட்டுவிடுவார் செளமிட்டாய்க்காரர்.
 
நான்கு முழம் மல்லிகைப்பூ வாங்கும்போது
அம்மாவின் நலம் விசாரித்துக்கொண்டே
நான்கு கண்ணி விட்டு வெட்டுவாள்
பிள்ளையார்கோவில் தெருப் பூக்காரி.
 
உடைத்த தேங்காயை எடுத்துப் போகாது
அழுகிப்போயிருந்தது  எனச் சொன்னாலே
வேறொன்றை எடுத்துத் தருவார் மளிகைக் கடைக்காரர்.
 
என்ன மழையாயினும் புயலாயினும்
ஐந்தரைக்கெல்லாம் வந்திடும் பால்காரர்
அரை லிட்டர் பாலை
தழும்பத் தழும்ப ஊற்றிச்செல்வார்.
 
நூறு அல்வா வாங்கினாலும் கூட
கொஞ்சம் மிக்சரை அள்ளி
கையில் தந்திடுவார் லாலா கடை அண்ணாச்சி.
 
இன்று
 
செளமிட்டாய்க்காரரின் ஸ்வீட் ஸ்டாலிலும்
பூக்காரியின் பூங்கொத்து நிலையத்திலும்
மளிகைக்காரரின் பல்பொருள் அங்காடியிலும்
பால்காரரின் பால் பண்ணையிலும்
லாலா கடை அண்ணாச்சி ஆரம்பித்த பல கிளைகளிலும்
குவியும் எண்ணற்ற வாடிக்கையாளர்களில்
இப்போதும் நானும் ஒருவன்!


உழவன்
 
 
"வாடிக்கையாளர் திருப்தி" என்ற தலைப்பில் எனது கம்பெனியில் நடைபெற்ற கவிதைப் போட்டிக்காக எழுதி, பரிசு பெற்ற கவிதை.

16 comments:

ராமலக்ஷ்மி said...

//குவியும் எண்ணற்ற வாடிக்கையாளர்களில்
இப்போதும் நானும் ஒருவன்!//

எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள். நல்லா கிளப்பியிருக்கிறீர்கள் ஏக்கத்தை:)!

போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!

சௌந்தர் said...

"வாடிக்கையாளர் திருப்தி,அருமை பழைய நினவுகள்...

SUFFIX said...

அப்பொழுதிருந்த திருப்தியும், இயற்கையான மகிழ்ச்சியும் இப்போது புழக்கத்தில் இல்லை நண்பரே, I Missed those childhood days...

ஆ.ஞானசேகரன் said...

//"வாடிக்கையாளர் திருப்தி" என்ற தலைப்பில் எனது கம்பெனியில் நடைபெற்ற கவிதைப் போட்டிக்காக எழுதி, பரிசு பெற்ற கவிதை.//

வாழ்த்துகள் உழவன்

சந்தனமுல்லை said...

ஹஹ்ஹா..:-) உண்மைதான்!

vasu balaji said...

வாழ்த்துகள். நன்றாயிருக்கிறது.

Vidhoosh said...

வாழ்த்துக்கள் நவ்ஸ்.

ஐம்பது காசு பாக்கி தராரா இல்லை 'அல்பன்லீபே' தராரா... அதை சொல்லவேல்ல... :)

Chitra said...

கவிதையில் ..... வியாபாரங்கள் எப்படி மனித நேய ethics இல் இருந்து திரிந்து விட்டது என்பதை நல்லா சொல்லி இருக்கீங்க....


வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

பத்மா said...

அடிக்கடி போட்டிலாம் வைக்கிறாங்களே !சுப்பர் கம்பனிதான் போங்க ...
நல்ல கவிதை சார் .வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

கம்பெனியில கவிதைப்போட்டியா??!! நல்லாருங்க!! (புகையா வருது!!)

ஆனா, உண்மையிலேயே இன்னிக்கு தெருவில வரும் வியாபாரிகளிடம் துணிந்து வாங்குவோமா நாம்? முக்கியக் காரணம் சுகாதாரம்!!

//Vidhoosh(விதூஷ்) said...
ஐம்பது காசு பாக்கி தராரா இல்லை 'அல்பன்லீபே' தராரா...//

அல்பத்தனமா அம்பது பைசாவைக் கேக்கிறியேன்னு, ‘அல்பன்-லீபே’ தர்றாரோ?

க.பாலாசி said...

மிக..மிக..அழகாக வடித்துள்ளீர்கள்... எனக்கும் அதே ஏக்கம்தான்...

நளினி சங்கர் said...

நன்றி உழவன் உங்கள் வலைதளமும் அருமை

நளினி சங்கர் said...

உங்கள் கமெண்ட் என் மின் அஞ்சலுக்கு மட்டுமே வந்துள்ளது. என் வலைப்பக்கத்தில் இல்லை. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.ஏதெனும் தொழில்நுட்ப குறைபாடுகள் இருந்தால் தெரிவுபடுத்தவும். மீண்டும் நன்றி திரு உழவன்.

ஜெனோவா said...

வாழ்த்துக்கள் அண்ணே !! :)

பனித்துளி சங்கர் said...

அருமையாக சொல்லிஇருக்கிறீர்கள் இதுபோன்றும் பல எண்ணங்கள் எனக்குள்ளும் .

"உழவன்" "Uzhavan" said...

@ராமலக்ஷ்மி
@soundar
@SUFFIX
@ஆ.ஞானசேகரன்
@சந்தனமுல்லை
@வானம்பாடிகள்
@Vidhoosh(விதூஷ்)
@Chitra
@padma
 
@ஹுஸைனம்மா - புகை வருதா? :-)
//Vidhoosh(விதூஷ்) said...
ஐம்பது காசு பாக்கி தராரா இல்லை 'அல்பன்லீபே' தராரா...//

அல்பத்தனமா அம்பது பைசாவைக் கேக்கிறியேன்னு, ‘அல்பன்-லீபே’ தர்றாரோ? //
 
கேள்வி கேட்டவருக்கும் பதில் சொன்னவருக்கும் நன்றி :))
 
@க.பாலாசி
@நளினி சங்கர்
@CINEMA GALLARY
@ஜெனோவா
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
 
@ அப்புறமா.. தமிலிசுல ஓட்டு போட்டவங்க.
 
அனைவருக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து உங்க ஆதரவு தேவை :-)