Sunday, May 9, 2010

நானும் சிலந்திதான் - உயிரோசை

கோணியோடு காலையிலேயே
கிளம்பி விடுவேன்
 
காலி தண்ணீர் பாக்கெட்டுகளும், பாட்டில்களும்
வீதியெங்கும் விரவிக் கிடக்கும்
 
கிளறிக் கொண்டிருக்கும்
நாய்களைத் துரத்துவது
இயலாத ஒன்றுதான்
அப்படிக் கிளரும்போது
உடைந்த பொம்மைகள் கிடைக்கும்
தனியாய்ப் பத்திரப்படுத்திக் கொள்வேன்
 
வார இறுதிகளில்
காலி மதுபாட்டில்கள் கிடைப்பது
அதிகரித்திருப்பது மகிழ்ச்சிதான்
ஆனால் நான் குடிப்பதில்லை
 
இப்போதெல்லாம் மருந்துப் பொருட்கள்தான்
நிறையக் கொட்டிக் கிடக்கின்றன
எதை எந்த வியாதிக்குச் சாப்பிடுவது
என்பது தெரியாததால் எதையுமே எடுப்பதில்லை
 
குப்பையில்லா நகரம் உருவாக்குவோம்
என்று யாராவது சொல்லும்போது,
வேறென்ன தெரியும் என
சுயகேள்வி கேட்டுக்கொள்வேன்
 
உங்களுக்கு குப்பை
சிலந்திக்கு அதுதானே உலகம்!
 
உழவன்

உயிரோசைக்கு நன்றி

உயிரோசையில் படிக்க

20 comments:

ஜெனோவா said...

கவிதையின் பயணத்தோடு ஒன்றி செல்ல எத்தனிக்கையில் , நெற்றி பொட்டில் ஓர் அடி விழுகிறது ...

மிக எளிமையான வரிகளில் கனமான கவிதையின் பயணம் ..
அருமை சார் ! ;-)

மணிஜி said...

யதார்த்தம் நண்பா......

க.பாலாசி said...

நல்ல கவிதைங்க உழவன்...

குப்பைகள் நல்லதா கெட்டதா??

சந்தனமுல்லை said...

:-) ஹ்ம்ம்...

VELU.G said...

excellant

rvelkannan said...

யதார்த்ததை எளிமையான வரிகளில் கவிதையாக்கியது சிறப்பு நண்பா

ராமலக்ஷ்மி said...

கவிதைக் களம் அருமை. தலைப்பும் முடிவும் வழக்கம் போலவே சிறப்பு:)!

சீனிவாசன் said...

nice!!

மாதேவி said...

நல்ல கவிதை.

பத்மா said...

நல்ல கவிதை .குப்பைகள் நல்லவை தான் .அவை மாறும் என்ற உறுதி உள்ள வரை .மாறா குப்பைகள் தான் விஷம் .இல்லையா பாலா?

Chitra said...

குப்பையில்லா நகரம் உருவாக்குவோம்
என்று யாராவது சொல்லும்போது,
வேறென்ன தெரியும் என
சுயகேள்வி கேட்டுக்கொள்வேன்


..... நல்லா எழுதி இருக்கீங்க

பிரவின்ஸ்கா said...

அருமை

--பிரவின்ஸ்கா

ஹேமா said...

குப்பையில்லா நகரம் தேவை.
ஆனால் குப்பையும் தேவை !நல்லதொரு கவிதை உழவன்.

SUFFIX said...

எழுத்துக்களில் முதிர்ச்சி வலுவாகவே தென்படுகிறது உழவரே, Keep it up!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வேறுபட்ட ஒரு கண்ணோட்டம். நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை.

"உழவன்" "Uzhavan" said...

T.V.ராதாகிருஷ்ணன்
ஜெனோவா
மணிஜீ......
க.பாலாசி
சந்தனமுல்லை
VELU.G
velkannan
ராமலக்ஷ்மி
சீனிவாசன்
மாதேவி
padma - நண்பர் பாலாஜி கேட்ட கேள்விக்கு அளித்த பதிலுக்கும் நன்றி :-)
Chitra
பிரவின்ஸ்கா
ஹேமா
SUFFIX
ஜெஸ்வந்தி
சே.குமார்
 
உங்கள் அனைவருக்கும் நன்றி.

மங்குனி அமைச்சர் said...

அருமையான , டச்சிங்கான கவிதை சார்

ஹுஸைனம்மா said...

//உங்களுக்கு குப்பை
சிலந்திக்கு அதுதானே உலகம்//

ஒருவருக்கு குப்பை; அதுவே ஒருவருக்கு வாழ்க்கை!! உண்மைதான்.

Radhakrishnan said...

:) மிக அருமை