Sunday, May 2, 2010
உழைப்பாளர் தினம்
எழுந்திருக்கும்போதே
மணி ஒன்பதுக்கு மேல்.
பல் தேய்த்துக் காபி குடித்து
செய்தித்தாள் புரட்டிவிட்டு
சிற்றுண்டிக்கு அமரும்போது
மணி பதினொன்றுக்கு மேல்.
எல்லா சேனல்களின்
சிறப்பு நிகழ்ச்சிகளிலும்
நடந்தும் ஓடியும் இளைப்பாறியும்
களைத்தபோது மதிய உணவு
வாய்பிளந்து பின் தூக்கம்.
கொட்டாவி விட்டுக்கொண்டே
இந்தியத் தொலைக்காட்சியில்
முதன்முறையாக ஒளிபரப்பிய
திரைப்படத்தைப் பார்த்து முடிக்கையில்
உழைப்பாளர் தின விடுமுறையைக் கழித்திருந்தேன்.
***
உழைப்பாளர் தின அறிவிப்பு
இன்றிலிருந்து ஒரு வாரகாலத்திற்கு
காலை 9 மணி முதல்
இரவு 11 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில்
ஏதேனும் ஒன்றிலிருந்து
தினந்தோறும் கேட்கப்படும் கேள்விகளுக்கு
சரியாக விடையளிப்பவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்
அதிர்ஷ்டசாலிகளுக்கு மெகா பரிசுகள்!
விளங்கிரும்...!!!
உழவன்
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
//விளங்கிரும்...!!//
இல்லையா பின்ன? :))
:)))
ஹஹ்ஹா!!!
ரசித்தேன்:)!
////விளங்கிரும்...!!//
சரியான பஞ்ச்!
மற்ற தினங்களில் உழைச்சுட்டு தானே அன்றைக்கு ஓய்வு எடுத்தீங்க..இட்ஸ் ஒகே..
//விளங்கிரும்...!!!//
ஹீ..ஹீ, அவங்க உழைக்கிறாங்க, இவிங்க பிழைக்கிறாங்க :)
அது வீட்டுல உழைக்கிறவங்களுக்கோ:))
இதுக்குதான் நாங்க விவரமா, "அந்த" டிவி connection cancel பண்ணிட்டோம்ல. ஹா,ஹா,ஹா,ஹா....
REALLY THEY CAN MAKE THEIR REST DAY AS JOLLY DAY AS ONLY WATCHING TV. REAL LIFE POEM. GOOD
அப்பிடியே உங்க அனுபவத்தைச் சொல்லிட்டு சொன்னீங்களே ஒண்ணு அதுவே போதும் !
//விளங்கிரும்...!!//
இல்லையா பின்ன???????????
//சரியாக விடையளிப்பவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்
அதிர்ஷ்டசாலிகளுக்கு மெகா பரிசுகள்!//
அப்படியாவது அவங்களை உழைக்க வைக்கிறாங்களே, அதுக்கு நன்றி சொல்லுங்க.
ரசித்தேன்:)ரொம்ப நல்லா இருக்கு...
பலாபட்டறை ஷங்கர்
T.V.ராதாகிருஷ்ணன்
ராமலக்ஷ்மி
SUFFIX
வானம்பாடிகள்
Chitra
மதுரை சரவணன்
ஹேமா
சே.குமார்
ஹுஸைனம்மா
கமலேஷ்
அனைவருக்கும் எனது நன்றிகள் :-)
விளங்கிரும் :)
//என்.விநாயகமுருகன்
விளங்கிரும் :) //
நன்றி விநய்..
*
//இரசிகை
:))//
நன்றி ரசிகை
Post a Comment