கண்ணாடி முன்னால் நிற்கும்போதே
கவனிக்கத் தொடங்கிவிடுகிறாள்
பேண்ட் சர்ட் அணியும்போது
உறுதிப்படுத்தி விடுகிறாள்
வண்டிச் சாவியை எடுத்தவுடன்
தவழ்ந்தோடி வந்து
காலைக் கட்டிக்கொண்டு
அண்ணாந்து பார்த்து
அழுது அடம்பிடிக்கிறாள்.
என்ன கூறி சமாதானம் செய்வது
என்பது தெரியாமல்
அவளோடு விளையாட ஆரம்பித்துவிட்டேன்
மன்னிக்கவும்
இன்றைய என் வருகை
தாமதமும் ஆகலாம்
இல்லாமலும் போகலாம்!
உழவன்
Tuesday, April 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
37 comments:
நல்ல அப்பா:)!
ஆகா குழந்தை ஆரம்பித்து விட்டாளா? இனி நல்ல பொழுது போகும். சந்தேசம் அத்தனையும் அனுபவிங்க சார்.
நல்ல ஆபீசு...:))
சின்னச் சின்ன ரசிக்கிற விஷயத்தையெல்லாம் கவிதையாகிவிட உங்களால்
மட்டுமே முடிகிறது.அருமை.
சின்னச் சின்ன ரசிக்கிற விஷயத்தையெல்லாம் கவிதையாகிவிட
எல்லோராலும் முடியாது. அழகான, அர்த்தமுள்ள கவிதை.
வருகை இல்லாமல் போனால் இன்னும் மகிழ்வாள் அக்குழந்தை....
நல்ல கவிதை...
mmm , nalla appa, nalla ponnu
ஆமாம். அதவிட வேறெது முக்கியம்:)
செம ஸ்டைல் தல , சூபர்
அருமையான கவிதை உழவன் சார், வாழ்த்துக்கள்!
. .
குழந்தைகளின் இது போன்ற ஓவ்வொரு லீலைகளை இப்ப ரசிக்க வேண்டிய நேரம்,ரொம்ப நல்ல இருக்கும்.அத கவிதையா வே எழுதிட்டீஙக் மழலை கவிதை ரொம்ப நல்ல இருக்கு.ரொம்ப நல்ல அப்பா
வேல கிடக்குது சார் .. எது முக்கியமோ அதுதான் முக்கியம் ;-)
மிக அருமையான கவிதை ..
தொழில் ரப்பர் பந்து , குடும்பம் கண்ணாடி பந்து ;-)
அட! கண்டிப்பா மன்னிச்சுட்டோம்!
Happy fatherhood:)
நல்லா இருக்குங்க
கவிதையால் ஒரு கவிதை .ரொம்ப நல்லாஇருக்கு
உங்கள் வருகையை விட விலை மதிப்பிலாத செல்வம் .குழந்தையின் அன்புக்கு ..ஏங்குவோர் பலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். ...கிடைக்கும்போது அனுபவியுங்கள்.
தாமதத்திற்காண காரணம் சரியாக இருந்ததால் உங்களுக்கு மன்னிப்பு உண்டு. கவிதை அருமை.
அருமையான கவிதை உழவன்.... வாழ்த்துக்கள்!
Cherish each and every moment....... it is a blessing!
இனி நிறைய வித்தைகள் படிக்க வேண்டியிருக்கும்!! :-)))
அகமதி ஆட்டம் தொடங்கியாச்சா?
//ராமலக்ஷ்மி
நல்ல அப்பா:)! //
பின்னே.. அவ கூட அப்பாதான விளையாடனும் :-)
*
/பித்தனின் வாக்கு
ஆகா குழந்தை ஆரம்பித்து விட்டாளா? இனி நல்ல பொழுது போகும். சந்தேசம் அத்தனையும் அனுபவிங்க சார். //
அனுபவிச்சுருவோம்... வேற என்ன வேலை நமக்கு :-)
*
//Vidhoosh(விதூஷ்)
நல்ல ஆபீசு...:)) //
:-))) உங்க ஆபீசு இப்படி இல்லேனு தெரியுது :-)
*
//ஹேமா
சின்னச் சின்ன ரசிக்கிற விஷயத்தையெல்லாம் கவிதையாகிவிட உங்களால்
மட்டுமே முடிகிறது.அருமை.//
நன்றி ஹேமா :-)
*
//தமிழ் உதயம்
சின்னச் சின்ன ரசிக்கிற விஷயத்தையெல்லாம் கவிதையாகிவிட
எல்லோராலும் முடியாது. அழகான, அர்த்தமுள்ள கவிதை. //
நன்றி தமிழ் உதயம்
//க.பாலாசி
வருகை இல்லாமல் போனால் இன்னும் மகிழ்வாள் அக்குழந்தை....
நல்ல கவிதை... //
அவ மகிழ்வாள்.. ஆனா ஆபீசுல யாரு வாங்கிக் கட்டுறது :-)
*
//ரோகிணிசிவா
mmm , nalla appa, nalla ponnu //
நன்றி டாக்டர் :-)
*
//வானம்பாடிகள்
ஆமாம். அதவிட வேறெது முக்கியம்:) //
அதான சார்..
*
//மங்குனி அமைச்சர்
செம ஸ்டைல் தல , சூபர் //
நன்றி அமைச்சரே
*
//abarasithan
அருமையான கவிதை உழவன் சார், வாழ்த்துக்கள்! //
மிக்க நன்றி.. சார் எல்லாம் வேணாம் ப்ளீஸ்.. நான் சின்ன பையனாக்கும் :-)
//Jaleela
. .
குழந்தைகளின் இது போன்ற ஓவ்வொரு லீலைகளை இப்ப ரசிக்க வேண்டிய நேரம்,ரொம்ப நல்ல இருக்கும்.அத கவிதையா வே எழுதிட்டீஙக் மழலை கவிதை ரொம்ப நல்ல இருக்கு.ரொம்ப நல்ல அப்பா //
மிக்க மகிழ்ச்சி.. நன்றி ஜலீலா மேடம்
*
//ஜெனோவா
வேல கிடக்குது சார் .. எது முக்கியமோ அதுதான் முக்கியம் ;-)
மிக அருமையான கவிதை ..
தொழில் ரப்பர் பந்து , குடும்பம் கண்ணாடி பந்து ;-) //
நன்றி ஜெனோ.. உங்களுக்கு மெயில் பண்ணுனேன்.. ரிப்ளை பண்ணுங்க.
நீங்க அனுப்பிச்ச மெசேஜ் எனக்கு வரல.
*
//அன்புடன் அருணா
அட! கண்டிப்பா மன்னிச்சுட்டோம்! //
ரொம்ப பெரிய மனசுங்க உங்களுக்கு :-) நீங்கதான் எனக்கு பாஸா வரனும் ஆபீசுல :-)
*
//வித்யா
Happy fatherhood:) //
:-))
*
//VELU.G
நல்லா இருக்குங்க //
நன்றி வேலுஜி
//padma
கவிதையால் ஒரு கவிதை .ரொம்ப நல்லாஇருக்கு //
நன்றிங்க
*
//நிலாமதி
உங்கள் வருகையை விட விலை மதிப்பிலாத செல்வம் .குழந்தையின் அன்புக்கு ..ஏங்குவோர் பலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். ...கிடைக்கும்போது அனுபவியுங்கள்.//
கண்டிப்பா.. ரொம்ப நன்றி
*
//சே.குமார்
அருமையான கவிதை உழவன்.... வாழ்த்துக்கள்! //
நன்றி குமார்
*
//Chitra
Cherish each and every moment....... it is a blessing! //
அருமையா சொன்னீங்க.. நன்றி சித்ராஜி
*
//ஹுஸைனம்மா
இனி நிறைய வித்தைகள் படிக்க வேண்டியிருக்கும்!! :-))) //
ஓ.. இதுவேறயா.. வித்தைகள் தெரிஞ்சவங்க யாராவது சொல்லிக்குடுங்கப்பா :-)
//தமிழரசி
அகமதி ஆட்டம் தொடங்கியாச்சா? //
ஆமா.. தொடங்க்கியாச்சு :-)
*
நன்றி அரசூரான்
பர்மிஷன் ஸ்லிப்புக்கு பதிலா ஆபிஸ்ல இந்த கவிதைய கொடுத்துடுங்க உழவன்.
பனிஷ்மெண்ட்டுக்கு பதிலா பாராட்டு கிடைக்கும் :))
அனுபவம் கவிதையா வந்தா அதுல இருக்க அழகே தனிதான்.
nalla appa:)
//பர்மிஷன் ஸ்லிப்புக்கு பதிலா ஆபிஸ்ல இந்த கவிதைய கொடுத்துடுங்க உழவன்.//
கரெக்ட்தான்.. ஆனா ஏன் லேட்டுனு என் பாஸ் கேட்கமாட்டாரே (ரொம்ப நல்லவரு) :-)))
நன்றி அமித்துமா.
*
//இரசிகை
nalla appa:) //
நீங்க சொன்னா சரிதான் :-)
நன்றி ரசிகை
அருமை நண்பரே வாழ்த்துகள்
Dr. Srjith.
அருமை நண்பரே வாழ்த்துகள் //
நன்றி டாக்டர் :-)
அருமை . பாசம் இல்லையெனில் வாழ்வு ரசிக்குமா !
தமிழ்மணவிருதுக்கு இப்பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அழகான கவிதை..குழந்தையைப் போல்..
அழகான கவிதை :) முதல் கட்ட சுற்றில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!
@ செந்தழல் ரவி
தகவலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாஸ் :-)
@ கவிநயா
மிக்க நன்றி :-)
Post a Comment