சீரியல் பல்புகளின்
சிமிட்டலுக்கு நடுவே
சிங்காரிச் சரக்கு நல்ல சரக்கு
எனும் பாடலுக்கு
மாராப்பில்லாது
குட்டைப் பாவாடையுடன்
குலுங்கிக் குலுங்கி ஆடினாள்
கரகாட்டக்காரி.
ஐந்தும் பத்துமாய்க் கோர்த்த
ஐம்பது ரூபாய் மாலையை
விசில் சத்தத்திற்கு நடுவே
அவளுக்குப் போட்டுவிட்டது
பெருமிதமாய் இருந்தது.
மின்விசிறிக் காற்றுக்கு
ஆணியில் ஆடிக்கொண்டிருந்த சட்டைப் பையில்
ஐம்பது ரூபாய் காணாமல் போன
கடுப்பிலிருந்த அப்பா
கரகாட்டம் முடிந்து நான் வீடு திரும்பியதும்
கன்னத்தில் பளார் என அறைந்து கேட்டார்
"என் காச எடுத்துட்டுப்போயி எவளுக்கோ மாலையா போடுறீயா?"
இப்போது என் ஆசையெல்லாம்
இந்தியாவுக்கு ஒரு அப்பா வேண்டும் என்பதுதான்!
உழவன்
Tuesday, April 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
''இந்தியாவுக்கு ஒரு அப்பா வேண்டும்'' எளிமையான வரிகள் - ஆழமான கருத்து!!
அப்பா வந்து சொன்னால் மட்டும் மதிப்பார்களா?
ஆதங்கம் புரிகிறது ..வார்த்தைகளில் வழிந்தோடுகிறது
ஆழமான கருத்து!!
ஆமாம் தாத்தா மாமா வாழ்ந்த நாடு இப்ப அப்பாவும் வேணும்...
அட!! சாதாரண் வரிகளா எழுதி கடைசி வரியில் அசத்திவிட்டீர்கள்!!
தேசப்பிதாவ கொன்னாச்சே! தத்தெடுக்க யாரு வருவாங்க:(
கவிதை நல்லா வந்திருக்கு. கடைசி வரிகள் நச். கிராமத்து திருவிழாக்களில் நடப்பதே. பிழைப்புக்கென வேறுவழியில்லாமல் இப்படி ஆட வருகிறவர்கள் ஒருவகையில் கருணைக்குரியவர்கள். ஆனால் அரசியல் ஆட்டம் போட்டு மாலை வாங்கி சூட்டிக் கொள்கிறவர்கள் கண்டனத்துக்குரியவர்கள். அஹிம்சை வழியில் தேசப்பிதா சொன்ன எதையும் கேட்கவில்லை யாரும். ஓங்கி அறைவிடுகிற அப்பா வரட்டும்.
பின்னிட்டீங்க.... ஆம் அப்பாவும் வேண்டும்...
கவிதை அருமை. ஆனால் கடைசி இரண்டு வரிகள் கருத்துச்சொல்வது போல இருப்பதாக படுகிறது. கடைசி இரண்டு வரிகளை எடுத்துவிட்டாலும் கவிதை இயல்பாய் இருக்குமே
ஆட்டோ??!!
அருமைங்க.
காந்தி தாத்தாவை தேச பிதா (தந்தை) என்று .......
நல்லா இருக்குங்க, உங்கள் கவிதை.
:))
நல்லாருக்கு.
//இப்போது என் ஆசையெல்லாம்
இந்தியாவுக்கு ஒரு அப்பா வேண்டும் என்பதுதான்!//
பளார்.....
சின்னத் திருத்தம் பாக்கெட்டில் பணம் வைத்துருக்கும் அப்பா வேணும்.
நல்ல கவிதை. நன்றி. அகமதி எப்படி இருக்கா?
நன்றி SUFFIX
நன்றி padma
நன்றி டிவிஆர் ஸார்
நன்றி டாக்டர் தேவன் மாயம்
நன்றி ஐயா வானம்பாடிகள்
//தமிழரசி
ஆமாம் தாத்தா மாமா வாழ்ந்த நாடு இப்ப அப்பாவும் வேணும்...//
எழுதும்போது தாத்தா மாமாவை எல்லாம் நான் யோசிக்கவேயில்லை :-)
நன்றி தமிழ்
//ராமலக்ஷ்மி
பிழைப்புக்கென வேறுவழியில்லாமல் இப்படி ஆட வருகிறவர்கள் ஒருவகையில் கருணைக்குரியவர்கள். ஆனால் அரசியல் ஆட்டம் போட்டு மாலை வாங்கி சூட்டிக் கொள்கிறவர்கள் கண்டனத்துக்குரியவர்கள். //
ஆமாம்.. அவர்கள் பிழைபுக்காக ஆடுகிறார்கள்; இவர்கள் கொழுத்துப்போய் ஆடுகிறார்கள்
நன்றி க.பாலாசி
நன்றி ஹுஸைனம்மா
நன்றி Chitra
நன்றி ச.முத்துவேல்
நன்றி ஆ.ஞானசேகரன்
//என்.விநாயகமுருகன்
கவிதை அருமை. ஆனால் கடைசி இரண்டு வரிகள் கருத்துச்சொல்வது போல இருப்பதாக படுகிறது. கடைசி இரண்டு வரிகளை எடுத்துவிட்டாலும் கவிதை இயல்பாய் இருக்குமே //
ஆலோசனைக்கு நன்றி. கடைசி வரிகளை எடுத்துவிட்டால், புரிதலில் சற்று சிரமம் இருக்கும் என எண்ணினேன். நன்றி விநய்
//வித்யா
ஆட்டோ??!! //
ஆகா.. கெளம்பியாச்சா??போலாம் ரைட்.
உ.பி வரைக்குமா ஆட்டோல போறீங்க.. குட் :-)
//பித்தனின் வாக்கு
சின்னத் திருத்தம் பாக்கெட்டில் பணம் வைத்துருக்கும் அப்பா வேணும். //
ஓ.. இப்படி வேற ஒன்னு இருக்கோ :-)
அகமதி எப்படி இருக்கா//
நல்லா இருக்கா.. விசாரிப்புக்கு நன்றி :-)
''இந்தியாவுக்கு ஒரு அப்பா வேண்டும்''
அப்பாக்கள் குடும்பத்தை வாழ்விக்கிறார்கள்...
அம்மாக்கள் ஆணவத்தில் இருக்கிறார்கள்..
நம் போன்றோருக்கு அடி கொடுத்தாலும் நல் அப்பா கிடைத்தது போல நாட்டிற்கும் வேண்டும் நல்ல அப்பாக்கள்:
அருமையான கவிதை.
நல்ல கவிதை!
ஆழமான கருத்து!!
//ஆணியில் ஆடிக்கொண்டிருந்த சட்டைப் பையில்
ஐம்பது ரூபாய் காணாமல் போன
கடுப்பிலிருந்த அப்பா//
same blood
//இப்போது என் ஆசையெல்லாம்
இந்தியாவுக்கு ஒரு அப்பா வேண்டும் என்பதுதான்!//
அடிச்சு சொல்லனும்ன்னு சொல்றீங்க. அடிச்சாதான் திருந்துவாங்களா என்ன? மொத்தத்துல இளம் சமூகத்தை கண்டிக்க ஆள்வேண்டும் என்பது சரியே!
அன்புடன்
ராம்
www.hayyram.blogspot.com
நச் வரிகள்..
நன்றி..
அழகான கருத்தை ஆழமாக சொல்லிவிட்டீர்கள். சூப்பர்..
நன்றி சே.குமார்
நன்றி ஜெஸ்வந்தி மேடம்
நன்றி அமைச்சரே
நன்றி hayyram
நன்றி சாமக்கோடங்கி
நன்றி அன்புடன் மலிக்கா
nachunu oru touch !
நன்றி ரோகிணி மேடம்
Post a Comment