Monday, January 25, 2010

மழலை

யானையாய் பிளிறி
பூனையாய்க் கத்தி
நாயாய்க் குரைத்து
நரியாய் ஊளையிட்டு
கோழியாய்க் கூவி
குதிரையாய்க் கனைத்து
...
இப்படி விநாடிக்கொரு
பிராணியாய் மாறி
உன்னைச் சிரிக்க வைக்கிறேன்.
 
மனிதனாய்ப் பேசினால் மட்டும்
ஏன் சிரிப்பதேயில்லை
என எண்ணும்போதே
மழலை மொழி வரும் திசைநோக்கித்
திரும்பிப் பார்த்துச் சிரித்து
என் ஐயம் போக்குகிறாய்!
 
உழவன்

19 comments:

Vidhoosh said...

///மழலை மொழி வரும் திசைநோக்கித்
திரும்பிப் பார்த்துச் சிரித்து///

அருமை சார்.

PPattian said...

அருமை உழவன்.. ஒரு மழலை இன்னொரு மழலையைத்(தான்) தேடும்..

ராமலக்ஷ்மி said...

//மழலை மொழி வரும் திசைநோக்கித்
திரும்பிப் பார்த்துச் சிரித்து
என் ஐயம் போக்குகிறாய்!//

மழலையின் சிரிப்பைப் போலவே கவிதையும் கொள்ளை அழகு!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மழலை மொழி பேசும் போது தான் மனிதன் மனிதனாயிருக்கிறான் என்ற கருத்தையும் தருகிறது. கவிதை அழகு.
' கணைத்து' என்பதை ' கனைத்து என்று மாற்றிவிடுங்கள்.'

"உழவன்" "Uzhavan" said...

நன்றி ஜெஸ்வந்தி மேடம்

S.A. நவாஸுதீன் said...

///மழலை மொழி வரும் திசைநோக்கித்
திரும்பிப் பார்த்துச் சிரித்து
என் ஐயம் போக்குகிறாய்!///

சரிதான் மனிதம் முழுமையாக அப்பொழுதுதானே இருக்கிறது. அவன் வளர வளரத்தான் தேய்ந்துவிடுகிறது. அருமையான கவிதை நண்பா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

mmm நீங்களும் மழலையாகி மழலை பேச ஆரம்பிச்சுடுங்க உழவன் :)))

கவிதை நல்லா இருக்கு.

ஹேமா said...

கள்ளம் கபடம் இல்லாத அந்த நேரத்தில் வரும் வார்த்தைகள்தான் வெள்ளையாய் உண்மையாய் இருக்கும்.குழந்தைப் பேச்சு மனிதப் பேச்சாய் மாறுகையில் ...!கவிதையில் சொன்ன விதம் அழகு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

குழந்தைக்கு மனிதனைப் பிடிக்காது.
அதன் உலகமே தனி!

sathishsangkavi.blogspot.com said...

//மழலை மொழி வரும் திசைநோக்கித்
திரும்பிப் பார்த்துச் சிரித்து
என் ஐயம் போக்குகிறாய்!//

அழகு..

SUFFIX said...

அருமை நண்பா!!

"உழவன்" "Uzhavan" said...

@Vidhoosh
@PPattian : புபட்டியன்
@ராமலக்ஷ்மி
@ஜெஸ்வந்தி
@S.A. நவாஸுதீன்
@அமிர்தவர்ஷினி அம்மா
@ஹேமா
@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
@Sangkavi
@SUFFIX
அனைவருக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து இதுபோன்று உங்களின் கருத்துக்களையும், படைப்பிற்கான விமர்சனங்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
அன்புடன்
உழவன்

'பரிவை' சே.குமார் said...

நல்லாருக்கு. வாழ்த்துக்கள்...

Jaleela Kamal said...

மழலை பற்றின கவிதை மிக அருமை,


என் குழந்தைவளர்பு பகுதிக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..

ஜெனோவா said...

இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!! அருமை!

"உழவன்" "Uzhavan" said...

சே.குமார்
நன்றி நண்பரே
 
@Jaleela
மிக்க நன்றி
 
@ஜெனோவா
நன்றி ஜெனோ

vidivelli said...

மனிதனாய்ப் பேசினால் மட்டும்
ஏன் சிரிப்பதேயில்லை
என எண்ணும்போதே
மழலை மொழி வரும் திசைநோக்கித்
திரும்பிப் பார்த்துச் சிரித்து
என் ஐயம் போக்குகிறாய்!

"உழவன்" "Uzhavan" said...

நன்றி vidivelli

இரசிகை said...

:)

superb...