மியாவ் என்ற ஒரு அழைப்பிலேயே
வாசல் முன் வந்து நின்ற
பூனையைக் காட்டி
"நீ சாப்பிடவில்லையெனில்
பூனைக்குக் கொடுத்திடுவேன்"
என ஏமாற்றிச் சோறூட்ட
இன்றும் தயாரானாள் அவள்
தனைநோக்கி சோற்றுக்கை நீளும்
ஒவ்வொரு முறையும்
கழுத்து நீட்டி வாய்திறந்து
கையின் போக்கிலேயே கண்பதித்து
சோற்றையும் குழந்தையையுமே
பார்த்துக்கொண்டிருக்கிறது பூனை
கடைசிவரை வாய்திறக்காது
பூனையின் எதிர்பார்ப்பை
குழந்தை பூர்த்தி செய்துகொண்டிருக்கையில்
சலிப்புற்று
குழந்தையின் குமட்டில் இடித்து
கையிலிருந்த சோற்றுருண்டையைத்
தன் வாயில் போட்டு
நடக்க யத்தனித்தபோது
ஓவென அழுத குழந்தையை
எப்படித் தேற்றுவதென்பது தெரியாது
மலங்க மலங்க
விழித்துக்கொண்டிருக்கிறது பூனை!
உழவன்
"உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை"
Friday, January 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
47 comments:
கலகிட்டிங்க உழவரே...
கவிதை நிச்சயமாய் வெற்றிபெறும்
வாழ்த்துக்கள்...
ஒட்டுமொத்தாமா கலக்குறதுக்குத்தான் இவ்ளோ நாள் தாமதமா நண்பா. கலக்கிட்டிங்க போங்க.
போட்டியில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா.
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
அருமை உழவரே, நல்ல கற்பனை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அருமைங்க...நிச்சயம் வெற்றிதான்...வாழ்த்துக்கள்
வெற்றி பெற வாழ்த்துகள்.
மியாவ்
மூன்றே எழுத்தில் முன்னாடி ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் பூனை.
மலங்க மலங்க விழித்தபடி
மற்ற பூனைகள்!
அருமை உழவன்! மிகவும் ரசித்தேன்:).
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
Hey Poet,
I saw your Poem in aganazhigai. Quit nasty yaar.
நல்லாருக்கு நண்பரே தங்கள் கவிதை... வெற்றிபெற வாழ்த்துகள்.
கலக்கிட்டிங்க.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
// கையின் போக்கிலேயே கண்பதித்து
எனக்கென்னவோ வேறப் பிரச்சனையைப் பத்தி பேசறதாத்தான் தெரியுது :)
arumai thalaivare
ரொம்ப நல்லாயிருக்குங்க.. வாழ்த்துகள்
அருமையான கவிதை
நல்ல வரிகள்
நடையும் சிறப்பாக உள்ளது.
பாராட்டுகள்
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
படித்தகணம் பூனையாக மாறியிருந்தேன்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள் நவநீத கிருஷ்ணன்
வெற்றிக்கு வாழ்த்துக்கள் :)
நல்ல கவிதை, நன்றி
ரசித்தேன் உழவன்...
வெற்றி பெற வாழ்த்துகள்!
-ப்ரியமுடன்
சேரல்
இயல்பாய், மிக அழகாய் எழுதியிருக்கி
றீர்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்
கலங்கடிச்சிடீங்க...
தன்னையும் அறியாமல் லேசாய் சிலிர்த்துக் கொண்டது. :) ரொம்ப ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்றாக நிச்சயம் இருக்கும்ங்க.
-வித்யா
கவிதை எனக்கு பிடித்திருக்கிறது நவநீதகிருஷ்ணன். வெற்றிக்கு வாழ்த்துகள்.
- பொன்.வாசுதேவன்
அருமையான உண்ர்வுக் கவிதை.
வெற்றிக்கு வாழ்த்துகள்.
அருமை...
/*ஓவென அழுத குழந்தையை
எப்படித் தேற்றுவதென்பது தெரியாது
மலங்க மலங்க
விழித்துக்கொண்டிருக்கிறது பூனை!*/
:-)
@kamalesh
மிக்க நன்றி கமலேஷ்
@S.A. நவாஸுதீன்
அப்படியெல்லாம் இல்ல தலைவா.. இவ்வளவு நாளா எந்தக் கவிதையும் தோணல. அதான் லேட் :-)
நன்றி
@அண்ணாமலையான்
மிக்க நன்றி நண்பா..
@SUFFIX
நன்றி ஷஃபி
@புலவன் புலிகேசி
நன்றி புலவரே
@வித்யா
நன்றி
@ராமலக்ஷ்மி
உங்களின் பின்னூட்டம் ரசித்தேன் :-)
எந்தப் பூனை முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது இப்போது தெரியாது. பார்க்கலாம்.
நன்றி
@கிருஷ்ண பிரபு
அவுட் ஆப் செலபஸ்.. செல்லாது செல்லாது :-)
@குடந்தை அன்புமணி
மகிழ்ச்சி நண்பா.. வேலைப் பளு சற்றுக் குறைந்துள்ளது போலும்
@KaveriGanesh
இதுவும் அவுட் ஆப் செலபஸ்.. இருப்பினும் தகவலுக்கு நன்றி. செய்தித்தாள் பார்க்காதவ்ர்களுக்குப் பயன்பட்டிருக்கும்.
@சே.குமார்
நன்றி
@Ganesh Gopalasubramanian
எதையாவது ஒன்ன கவுஜ பேசுனா சரி. நன்றி
@பாலா
நன்றி தலைவரே
@D.R.Ashok
மகிழ்ச்சி நண்பரே.. என்னைத் தொடர்வதற்கும் நன்றி
@தியாவின் பேனா
மிக்க மகிழ்ச்சி.. நன்றி :-)
@காயத்ரி மகாதேவன்
ரொம்ப ரொம்ப நன்றி :-)
@பிரியமுடன்...வசந்த்
நன்றி வசந்த்
@நிலாரசிகன்
மிக்க மகிழ்ச்சி. நன்றி நிலா :-)
@பித்தனின் வாக்கு
உங்க வாக்கு பலிக்கட்டும். நன்றி :-)
@சேரல்
நன்றி சேரல் :-)
@அமிர்தவர்ஷினி அம்மா
நன்றி அமித்துமா.
@Vidhoosh
மிக்க நன்றி வித்யாஜி :-)
@அகநாழிகை
மிக மகிழ்வாய் உணர்கிறேன். மிக்க நன்றி
@ஹேமா
நன்றி ஹேமா
@அமுதா
நன்றி அமுதா மேடம்
அண்ணே , மிகவும் ரசித்து இரண்டு மூன்று முறை படித்தக் கவிதை ... கண்டிப்பாக வெற்றி பெரும் , பெற வாழ்த்துக்கள் !
//ஜெனோவா
அண்ணே , மிகவும் ரசித்து இரண்டு மூன்று முறை படித்தக் கவிதை ... கண்டிப்பாக வெற்றி பெரும் , பெற வாழ்த்துக்கள் ! //
இந்தப் பாராட்டே போதும் தம்பி. ரொம்ப மகிழ்வா இருக்கு :-)
ஐயோ!
எப்படி உழவரே இதை மிஸ் பண்ணேன்?
கண்டிப்பா ஜெயிக்கும் மக்கா.ஜெயிக்கணும்.வாழ்த்துக்கள் உழவரே!
//பா.ராஜாராம்
ஐயோ!
எப்படி உழவரே இதை மிஸ் பண்ணேன்?
கண்டிப்பா ஜெயிக்கும் மக்கா.ஜெயிக்கணும்.வாழ்த்துக்கள் உழவரே! //
மிக்க நன்றி :-)
//thenammailakshmanan
மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன் //
வாழ்த்துக்கு மிக்க நன்றி
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்
நன்றி சக்திவேல்
கவிதை மிகவும் சிறப்பாக இருக்கிறது. கடைசி வரிகள் வெகு சிறப்பு.
வெற்றி பெறுவீர்கள்.
//வெ.இராதாகிருஷ்ணன்
கவிதை மிகவும் சிறப்பாக இருக்கிறது. கடைசி வரிகள் வெகு சிறப்பு.
வெற்றி பெறுவீர்கள். //
தங்களின் வருகைக்கும், கவிதையை ரசித்தமைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் உழவரே! :-)
//ஜெனோவா said...
அண்ணே , மிகவும் ரசித்து இரண்டு மூன்று முறை படித்தக் கவிதை ... கண்டிப்பாக வெற்றி பெரும் , பெற வாழ்த்துக்கள் ! //
இது நான் முன்னாடி சொன்னது :)
இப்ப பின்னாடி சொல்றது - வாழ்த்துக்கள் சார் !! :)
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் உழவன்!
-ப்ரியமுடன்
சேரல்
தலைவரே வாழ்த்துக்கள். :-)
//மியாவ்
மூன்றே எழுத்தில் முன்னாடி ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் பூனை.
மலங்க மலங்க விழித்தபடி
மற்ற பூனைகள்!
அருமை உழவன்! மிகவும் ரசித்தேன்:).
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!//
ஜெனோவோ போலவே ‘இது நான் முன்னாடி சொன்னது’:)!
இப்ப பின்னாடி சொல்றது-மேலும் பல வெற்றிகள் பெற, உயரங்கள் தொட வாழ்த்துக்கள்!
வெற்றி பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள் நண்பரே !
congrats sir
வாழ்த்துகள் உழவன் :)
வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
பா.ராஜாராம்
ஜெனோவா
சேரல்
கமலேஷ்
முரளிகுமார் பத்மநாபன்
ராமலக்ஷ்மி
எம்.ரிஷான் ஷெரீப்
பத்மா
D.R.Ashok
கவிநா...
வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் :-)
Post a Comment