Monday, December 7, 2009

உழவு காப்போம்!

தவளைச் சத்தம் கேட்டதும் போச்சு
கவலை நித்தம் படிந்தே போச்சு
கலப்பை பிடிக்கும் கைகள் குறைந்தே போச்சு
கணிணி மோகமே எங்கேயும் ஆச்சு

காடெல்லாம் கட்டிடமாய் ஆச்சு
கண்மாயோ வெற்றிடமாய் போச்சு
பொன் விளையும் பூமி - இப்போ
பொட்டலாதான் ஆச்சு

மும்மாரி பொழிந்ததெல்லாம்
மலையேறிப் போச்சு
எல்லாமே இப்போ விலையேறிப் போச்சு

சாதம் பிசைந்து
சாப்பிடும் நாளும் அழிந்திடுமோ
பாவம் மனித இனங்கள்
மாத்திரைகளாலே வாழ்ந்திடுமோ

விதைப்பவன் வாழ்க்கையெல்லாம்
விரைவில் கதையாகிப் போய்விடுமோ
காய்கனி உண்பதெல்லாம் - நாளை
கனவாகிப் போய்விடுமோ

மொட்டை மாடியிலாவது
செடியொன்று வளர்த்திடுவோம்
பட்டுப்போகிற பூமியை
பசுமையாக்க முயற்சித்திடுவோம்!

மழை காக்க மரம் வளர்ப்போம்
உயிர் காக்க உழவு காப்போம் !

உழவன்

34 comments:

SUFFIX said...

கருத்தாழமிக்க வரிகள் நண்பரே, ஆம் நாம் ஏதாச்சும் செய்யணும்!!

Vidhya Chandrasekaran said...

நிதர்சனம்.
கவிதை நல்லாருக்கு.

S.A. நவாஸுதீன் said...

உங்களுக்கே உண்டான இயல்பான உணர்வுகளே. அருமையா இருக்கு உழவரே

புஷ்பவனம் குப்புசாமி மெட் எடுத்து பாடினால் அருமையா இருக்கும் இது

க.பாலாசி said...

//காடெல்லாம் கட்டிடமாய் ஆச்சு
கண்மாயோ வெற்றிடமாய் போச்சு
பொன் விளையும் பூமி - இப்போ
பொட்டலாதான் ஆச்சு//

சிந்தனைக்கவிதை....

கமலேஷ் said...

அருமையான வரிகள்..

வாழ்த்துக்கள்...

கருத்து சொல்லும் கவிதை...

மாதேவி said...

"மொட்டை மாடியிலாவது
செடியொன்று வளர்த்திடுவோம்
பட்டுப்போகிற பூமியை
பசுமையாக்க முயற்சித்திடுவோம்!"

நல்ல சிந்தனை.முயற்சிப்போம்.

Anonymous said...

உங்கள் ஆதங்கம் அப்படியே வெளிப்பட்டு இருக்கு..கண்ணால் கண்டு மனம் வருந்தி எழுதியதைப்போல உணர்கிறேன்...

Vidhoosh said...

:(
என்ன செய்யறதுன்னு கையை பிசைகிறேன். வரும் சனி ஞாயிறு ஏறத்தாழ இருபது வருடம் கழித்து பிறந்த மண்ணுக்குப் போகிறேன். எப்படி இருக்கோன்னு இப்பயே யோசனை. இதில் உங்கள் கவிதை :(

கோவில் பூசாரியிடம் பேசினால், வரும் போது ஒரு விளக்கு வாங்கி வாங்க. கோவில்ல விளக்கே இல்லைன்னு அடிவயிற்றில் நெருப்பை வைக்கிறார்.

வயல்களுக்கு என்ன கதியோ தெரில.

நாம் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிரோம்னு யோசித்துக் கொண்டே இருக்கிறேன். :(

--வித்யா

நாடோடி இலக்கியன் said...

இதே ஆதங்கம்தான் எனக்கும், என்ன செய்யலாம்?

சொல்லரசன் said...

//கலப்பை பிடிக்கும் கைகள் குறைந்தே போச்சு
கணிணி மோகமே எங்கேயும் ஆச்சு//

இந்த மோகத்தால்தான் உழவனும் சென்னையில் பெட்டிதட்டுகிறீர்களோ?.என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என்பதைவிட, ‌கணிணி கலப்பை பிடிக்கமுடியுமா என்று யோசிப்போம்

கலகலப்ரியா said...

superb...

ராமலக்ஷ்மி said...

கவலைக்குரிய விஷயம் உழவன்.

//மொட்டை மாடியிலாவது
செடியொன்று வளர்த்திடுவோம்//

வளர்க்கிறேன் பால்கனியில். என்னால் முடிந்ததாய்.

ஆ.ஞானசேகரன் said...

//சாதம் பிசைந்து
சாப்பிடும் நாளும் அழிந்திடுமோ
பாவம் மனித இனங்கள்
மாத்திரைகளாலே வாழ்ந்திடுமோ//

ஆகா நல்ல வரிகள் நண்பா,... பராட்டுகள்,.. கவிதை உணர்வுள்ளது...

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை வரிகள் மனம் வருத்தச்செய்தாலும் நாம் என்ன செய்யமுடியும்னு யோசிக்கவும் வைக்கிறது

ஹேமா said...

எல்லோருமே ரொம்பக் காலமா இப்படியான சிந்தனைகளோடு மட்டுமே இருக்கிறோம்.இனி செய்லபட ஒன்றுசேரவேணும்.நல்ல கவிதை உழவன்.

"உழவன்" "Uzhavan" said...

@நாடோடி இலக்கியன் & சொல்லரசன்
 
என்ன செய்வது? விவசாயக் குடும்பத்திலிருந்து நான் பிரிந்து வந்துவிட்டேன். படிக்கின்ற காலத்தில் விவசாய வேலைகளைச் செய்த அனுபவமும் உண்டு. ஆனால் இப்போது என்னால் அந்த வேலைகளைச் செய்ய முடியுமா என்றால் சந்தேகமே.
இந்தப் படைப்பை எழுதும்போதே எனக்கு உள்ளுக்குள் ஒரு உறுத்தல் இருந்தது. நான் இதைச் சொல்ல சரியான ஆள் இல்லையே என்று. ஆனால் காலம் நம்மைக் கணிணிக்குள் கொண்டுவந்துவிட்டது. என்னுடைய இயலாமையை நான் ஒத்துக்கொள்கிறேன். என்னால் இந்தச் சென்னையில் வாடகைவீட்டில் செய்யமுடிந்தது, வீட்டு உரிமையாளரின் அனுமதிக்கேற்ப, கொஞ்சம் வாழையும் முருங்கையையும் வீட்டில் இருந்து கொண்டுவந்து வளர்ப்பதுதான். அதனால்தான் மொட்டை மாடியிலாவது அட்லீஸ்ட் ஒரு செடியையாவது வையுங்கள் என்று சொல்லியுள்ளேன். அதைவிடுத்து அண்ணாநகர் அபார்மெண்டில் இருப்போரிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?
ஊரில் எனக்குச் சொந்தமான விவசாய நிலத்தை, என்னால் முடியாவிட்டாலும், விவசாயம் பார்க்கின்ற எவருக்கேனும் நிலத்தை வாடகைக்காவது விடவேண்டுமே தவிர, வேறு எதற்கும் அதனைப் பயன்படுத்தக்கூடாது என்றே எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
நன்றி

"உழவன்" "Uzhavan" said...

நன்றி SUFFIX
 
நன்றி வித்யா
 
 
@S.A. நவாஸுதீன்
நன்றி.. புஷ்பவனம் குப்புசாமிய பாட வச்சிருவோம் :-)
 
நன்றி க.பாலாசி
 
நன்றி கமலேஷ்
 
நன்றி மாதேவி.. முயற்சி பண்ணுங்க :-)
 
நன்றி தமிழரசி.. நீங்க அப்படியா நினைக்குறீங்க :-)
 
@Vidhoosh
ஐயோ.. விதூஷ்.. என்ன இப்படி சொல்றீங்க.. ஊருக்குப் போய் 20 வருஷம் ஆச்சா.. அடக் கடவுளே :-(
 
//நாம் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிரோம்னு யோசித்துக் கொண்டே இருக்கிறேன். :(//
 
இப்படித்தான் நானும் சில நேரங்களில் நினைப்பதுண்டு. வேறு வழியில்லை :-(
 
 
நன்றி கலகலப்ரியா
 
@ராமலக்ஷ்மி
வளர்க்கிறேன் பால்கனியில். என்னால் முடிந்ததாய். //
 
மகிழ்ச்சியும் நன்றியும் :-)
 
 
நன்றி ஆ.ஞானசேகரன்
 
@அமிர்தவர்ஷினி அம்மா
கவிதை வரிகள் மனம் வருத்தச்செய்தாலும் நாம் என்ன செய்யமுடியும்னு யோசிக்கவும் வைக்கிறது //
 
உண்மைதான். முடிந்தால் ஒரு மரமோ, அதுவும் முடியவில்லையென்றால் ஒரு கறிவேப்பிலை செடியாவது வளருங்கள். அதுபோதும்.  நன்றி :-)
 
 
நன்றி ஹேமா
 
Thanks Tamilish

anujanya said...

நல்லா வந்திருக்கு கவிதை. நல்ல சிந்தனை. பின்னூட்டத்தில் உங்கள் நிலைப்பாடைப் படித்தேன். உங்களைப் போலவே நம்மில் பெரும்பாலோர் சூழலில் சிக்கிக் கொண்டுள்ளோம்.

அனுஜன்யா

சொல்லரசன் said...

//ஊரில் எனக்குச் சொந்தமான விவசாய நிலத்தை, என்னால் முடியாவிட்டாலும், விவசாயம் பார்க்கின்ற எவருக்கேனும் நிலத்தை வாடகைக்காவது விடவேண்டுமே தவிர, வேறு எதற்கும் அதனைப் பயன்படுத்தக்கூடாது என்றே எண்ணிக்கொண்டிருக்கிறேன். //

விவசாய நிலமுள்ள அனைவரும் இந்த குறைந்தபட்ச கொள்கையாவது கடைபிடித்தால் நாளையை தலைமுறையில் விவசாயம் செழிக்கும்.

நையாண்டி நைனா said...

நச்சு வரிகள்..
பின்னூடத்திலே...
கண்ணீர் வரிகள்...மிக அருமையான சிந்தனை...

ராமலக்ஷ்மி said...

//வீட்டு உரிமையாளரின் அனுமதிக்கேற்ப, கொஞ்சம் வாழையும் முருங்கையையும் வீட்டில் இருந்து கொண்டுவந்து வளர்ப்பதுதான். //

வாழ்த்துக்கள்.

//விவசாயம் பார்க்கின்ற எவருக்கேனும் நிலத்தை வாடகைக்காவது விடவேண்டுமே தவிர, வேறு எதற்கும் அதனைப் பயன்படுத்தக்கூடாது என்றே எண்ணிக்கொண்டிருக்கிறேன்.//

என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் உழவன்!

Thenammai Lakshmanan said...

உண்மைதான் உழவரே

மொட்டை மாடியிலாவது ஜன்னலோரத்துலேயாவது கொஞ்சம் பசுமை வளர்க்க வேண்டும் சுவாசிக்கவாவது

"உழவன்" "Uzhavan" said...

@அனுஜன்யா
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஜி :-)
 
@சொல்லரசன்
விவசாய நிலமுள்ள அனைவரும் இந்த குறைந்தபட்ச கொள்கையாவது கடைபிடித்தால் நாளையை தலைமுறையில் விவசாயம் செழிக்கும்.//
 
நிச்சயமாக.. நன்றி நண்பரே
 
@நையாண்டி நைனா
 
நைனா.. நலமா??
நன்றி நண்பா
 
@ராமலக்ஷ்மி
என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் உழவன்!
 
தலைகுனிந்து ஏற்றுக்கொள்கிறேன்.. நன்றி :-)
 
@thenammailakshmanan
மிக்க நன்றி..
 
thenammailakshmanan -- உங்க பேரைக் கொஞ்சம் என்னானுதான் சொல்லுறது??? :-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப அருமையான வரிகள்

உழவின் பெருமையை பறைசாற்றிய உழவனுக்கு நன்றி

கமலேஷ் said...

சிந்திக்க வேண்டிய கவிதை...
அழகு...

ஹுஸைனம்மா said...

வீட்டில் விவசாயம் செய்தபோது அதன் அருமை தெரியவில்லை. இப்ப ஆசை இருந்தும் இடம் இல்லாமல் வருந்துகிறேன்.

நல்ல கருத்து.

"உழவன்" "Uzhavan" said...

@Starjan ( ஸ்டார்ஜன் )
நன்றி
 
@கமலேஷ்
நன்றி
 
@ஹுஸைனம்மா
நன்றி ஹுஸைனம்மா.. உங்கள் ஆதங்கம் புரிகிறது :-(

பொன்னியின் செல்வன் said...

மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் உழவரே!

"உழவன்" "Uzhavan" said...

//பொன்னியின் செல்வன்
மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் உழவரே! //
 
மிக்க நன்றி.. தொடர்ந்து வாங்க

Kavinaya said...

உண்மையான, தேவையான ஆதங்கத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தனிமனிதர்கள் அவரவர் அளவில் உறுதியாக இருந்தால் இந்த நிலை மாறக் கூடிய சாத்தியம் இருக்கிறது.

"உழவன்" "Uzhavan" said...

//கவிநயா
உண்மையான, தேவையான ஆதங்கத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தனிமனிதர்கள் அவரவர் அளவில் உறுதியாக இருந்தால் இந்த நிலை மாறக் கூடிய சாத்தியம் இருக்கிறது.//
 
நீங்கள் சொன்னதுபோல் நம் உறுதிதான் முக்கியம். தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :-)

Keezhappatti said...

excellent lines, me too have the same feeling, for me the real worry would be next couple of decades only, no one available to look after our huge agri-lands. the same thought too have with me that the land must be used for agri at least until my death.
really excellent..........

Keezhappatti said...
This comment has been removed by the author.
Unknown said...

NANUM ATHATKU OTHULIPPAN