Wednesday, November 18, 2009

பிடித்ததெல்லாம் பிடித்ததுமல்ல; பிடிக்காததெல்லாம் பிடிக்காததுமல்ல

இப்போதெல்லாம் எதுவும் எழுதப்பிடிக்கவில்லை; எதுவும் எழுதத் தோணவுமில்லை. அப்படியே எழுதினாலும் அவைகளையெல்லாம் ஒரு படைப்பாக ஏற்றுக்கொள்ள மனம் இசையவில்லை. எனக்குப் பிடித்த என்னுடைய சில படைப்புகளெல்லாம் இப்போது எனக்குப் பிடிக்காமல் போய் அப்படியே தூங்கிக்கொண்டிருக்கின்றன. என் வாசிப்பு வட்டம் மைக்ரான் அளவிலாவது பெரிதாகிக் கொண்டே போகிறதோ; அதுதான் இதற்குக் காரணமோ என்ற எண்ணமும் கூட வருகிறது.

வாரத்திற்கொரு பதிவாவது போடவேண்டும் என்று தனக்குத்தானே போட்டுக்கொண்ட கட்டளையினால் எனக்குப் பிடிக்காமல் போன ஒரு சிலவற்றை வேறுவழியில்லாமல் பதிவிடும் சில சமயங்களில், நண்பர்கள் சிலருக்கு அது பிடித்தும் போகிறது. நண்பர்களாக இருப்பதனால்தான் அவர்களுக்குப் பிடிக்கிறதோ? இல்லை எனக்காக அவ்வாறு சொல்கிறார்களா? எந்த வாசகனுக்கு எது பிடிக்கும் என்ற சூத்திரம் தெரிந்தவன்தான் சிறந்த எழுத்தாளனாகிறான். அது எனக்கு எப்போது பிடிபடப் போகிறது?

சாத்தியமில்லாத ஒன்றைத் தன் கற்பனையால், அப்படி இப்படி என்று எழுதுவதெல்லாம் ஒரு கவிதையா? வாழ்க்கையை எழுதாமல் வேறு எதையெதையோ எழுதுகிறார்களே என்றெல்லாம் ஒரு கட்டத்தில் எண்ணியதுண்டு. அப்படிப்பட்ட படைப்புகளின் மீது மனம் லயிக்காமல் போனது. ஆனால் இப்போதெல்லாம் அவைகள் மிகப் பிடித்துப்போயின. அவைகளை எழுதுவதற்கு எவ்வளவு பெரிய கற்பனை வளம் வேண்டும். அவற்றையெல்லாம் வியக்கிறேன் இப்போது.

எனக்குத் தெரிந்த ஒரு பெண், பார்ப்பதற்கு அழகாக இருக்கமாட்டார். நனைந்த பனைமர நிறம். உடல்வாகும் ஒரு வடிவத்திற்குள் அடங்காது. அழகு என்பது இவருக்கு சற்று அதிகமான தூரம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அவரைப் பார்க்கும்போது, இவளுக்கெல்லாம் எப்படி திருமணம் நடக்கப் போகிறதோ என்று எண்ணியதுண்டு. ஆனால் அவருக்கும் திருமணம் நடந்தது. அதுவும் காதல் திருமணம். மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். அந்தப் பெண்ணை ஒருவன் ஆண்டுக் கணக்கில் காதலித்திருக்கிறான். அப்படியென்றால் ஒருவனுக்குப் பிடிக்காது போன ஒன்று, வேறு எவருக்கோ பிடிக்கிறது என்றுதானே பொருள்.

எனது அலுவலகத்தில் இரண்டு வேளை உணவு இலவசம்தான். மதிய உணவு 45 பைசா/ஒரு இட்லி 7 பைசா என்றால் இலவசம்தானே. ஒருநாள் காலையில் ஆபீஸ் கேண்டீனில் இட்லி சாப்பிட்டபோது, எனது நண்பனொருவன் இட்லிக்குத் தொட்டுக்கொள்ள வெறும் சர்க்கரை மட்டுமே வாங்கிக் கொண்டான். ஏனெனில் அவனுக்கு வடைகறி பிடிக்காதாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வந்தமர்ந்த இன்னொரு நண்பன் வடைகறியைக் கூடுதலாக வாங்கினான். அவனுக்கு வடைகறி ரொம்பப் பிடிக்குமாம். என்னடா இது! அவனுக்குப் பிடிப்பது இவனுக்குப் பிடிக்கவில்லை; இவனுக்குப் பிடிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

இப்படி நிறைய ....

அதனால என்ன சொல்லவர்றேன்னா.. தலைப்ப இப்ப படியுங்க :-))

டிஸ்கி: யப்பா.. அமிர்தவர்ஷினி அம்மாவும், ஆ.ஞானசேகரன் அவர்களும் "பிடித்தது பிடிக்காதது" பற்றி ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் இருவரும் என்னை மன்னித்து, இதையே தொடர்பதிவாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். :-)
என்ன எழுதுறதுனே தெரியல; அதனாலதான் இப்படியொரு மொக்கை!!!

கடந்த வாரம் யூத்ஃபுல் விகடனின் முதல் மாத மின்னிதழ் வெளியானது அனைவரும் அறிந்ததே. அதில் என்னுடைய "சென்னை கிரிக்கெட்" எனும் கவிதையையும் வெளியிட்டமைக்கு யூத் விகடனுக்கு என் நன்றி! அக்கவிதையைப் படிக்க "இங்கே" கிளிக்கவும்.

உழவன்

27 comments:

ராமலக்ஷ்மி said...

இந்தப் பதிவு ரொம்பப் பிடித்திருக்கிறது:)!

Vidhya Chandrasekaran said...

பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு தெரியல:)

க.பாலாசி said...

இப்ப கமெண்ட் எப்படிபோடுறதுன்னு ஒரே கொழப்பமா இருக்கு உழவரே.... தலைப்பை ஒருமுறை நீங்களே படிச்சிக்கோங்க....

Anonymous said...

ஆஹா விஷயத்தை சொன்ன மாதிரியும் இருந்தது பதிவு போட்ட மாதிரியும் ஆயிட்டது...ஆனால் நீங்க சொன்னது மாதிரி தாங்க நானும்
//இப்போதெல்லாம் எதுவும் எழுதப்பிடிக்கவில்லை; எதுவும் எழுதத் தோணவுமில்லை. அப்படியே எழுதினாலும் அவைகளையெல்லாம் ஒரு படைப்பாக ஏற்றுக்கொள்ள மனம் இசையவில்லை. எனக்குப் பிடித்த என்னுடைய சில படைப்புகளெல்லாம் இப்போது எனக்குப் பிடிக்காமல் போய் அப்படியே தூங்கிக்கொண்டிருக்கின்றன. //

இப்படி தான் உணர்கிறேன் நானும் இப்படி என்றோ எழுதி வைத்ததை தான் இன்று பதிவிட்டு இருக்கிறேன்..

மின்னிதழ் முதல் பதிவில் என்னுடைய கவிதையும் ஹிஹிஹி வந்திருக்குப்பா...

கலகலப்ரியா said...

//ஆண்டுக் கணக்கில் காதலித்திருக்கிறான். அப்படியென்றால் ஒருவனுக்குப் பிடிக்காது போன ஒன்று, வேறு எவருக்கோ பிடிக்கிறது//

Perspective.. that matters.. ! நேசிக்கத் தெரிந்தால் எல்லாம் அழகாகி விடும்..! உங்கள் பதிவு அழகாக இருக்கிறது... =)

S.A. நவாஸுதீன் said...

இந்தத் தொடரை வித்தியாசமா கொண்டுப்பொயிட்டீங்க.

உங்க அப்ரோச் ரொம்ப நல்லா இருக்கு

விக்னேஷ்வரி said...

ஒரு ஃபார்ம்ல தான் இருக்கீங்க.

goma said...

முதல் மூன்று பாரக்ராஃபும் என் மன ஓட்டத்தோடு ஒத்துப் போகின்றன.
எதுவும் எழுதத்தோன்றாமல் இன்று ஒரு மொக்கை சமையல் குறிப்பு இட்டிருக்கிறேன்

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
இந்தப் பதிவு ரொம்பப் பிடித்திருக்கிறது:)!//

இதுதான் திருநெல்வேலிக் குசும்போ? :)))

"உழவன்" "Uzhavan" said...

//வித்யா
பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு தெரியல:)//

யப்பா.. இதுதான் இந்தப் பதிவோட வெற்றி :-))

அமிர்தவர்ஷினி அம்மா said...

வெளிப்படையாக இருப்பதனால் இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

"உழவன்" "Uzhavan" said...

// க.பாலாசி
இப்ப கமெண்ட் எப்படிபோடுறதுன்னு ஒரே கொழப்பமா இருக்கு உழவரே.... தலைப்பை ஒருமுறை நீங்களே படிச்சிக்கோங்க....//

என்னையே குழப்ப பார்க்குறீங்களா? ம்ஹூம் முடியாது :- )

"உழவன்" "Uzhavan" said...

// தமிழரசி
மின்னிதழ் முதல் பதிவில் என்னுடைய கவிதையும் ஹிஹிஹி வந்திருக்குப்பா...//

மகிழ்ச்சி. பின்ன கவிதாயினியின் கவிதை வராமல் இருக்குமா? நான் இன்னும் அந்த மின்னிதழைப் படிக்கவில்லை தமிழ். :- (
என் கவிதையின் பக்கத்தை மட்டும் நண்பன் ஒருவன் மின்னஞ்சல் செய்தான்.

"உழவன்" "Uzhavan" said...

// கலகலப்ரியா
//ஆண்டுக் கணக்கில் காதலித்திருக்கிறான். அப்படியென்றால் ஒருவனுக்குப் பிடிக்காது போன ஒன்று, வேறு எவருக்கோ பிடிக்கிறது//

Perspective.. that matters.. ! நேசிக்கத் தெரிந்தால் எல்லாம் அழகாகி விடும்..! //

கரெக்ட்டாங்க.

//உங்கள் பதிவு அழகாக இருக்கிறது... =)//

நம்பிட்டேன் :- ) நன்றி

"உழவன்" "Uzhavan" said...

// S.A. நவாஸுதீன்
இந்தத் தொடரை வித்தியாசமா கொண்டுப்பொயிட்டீங்க.
உங்க அப்ரோச் ரொம்ப நல்லா இருக்கு//

அப்படியா.. ரொம்ப நன்றி

"உழவன்" "Uzhavan" said...

// விக்னேஷ்வரி
ஒரு ஃபார்ம்ல தான் இருக்கீங்க.//

அதுவா வருது :- )

"உழவன்" "Uzhavan" said...

// goma
முதல் மூன்று பாரக்ராஃபும் என் மன ஓட்டத்தோடு ஒத்துப் போகின்றன.//

பரவாயில்லையே.. நம்மள மாதிரி நிறைய பேரு இருக்காங்க போல :- )

//எதுவும் எழுதத்தோன்றாமல் இன்று ஒரு மொக்கை சமையல் குறிப்பு இட்டிருக்கிறேன்//

குறிப்பு மொக்கையா இருந்தா என்ன.. சமைக்குறது யாருங்கிறதப் பொறுத்துதான் ருசியே :- )

நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//டிஸ்கி: யப்பா.. அமிர்தவர்ஷினி அம்மாவும், ஆ.ஞானசேகரன் அவர்களும் "பிடித்தது பிடிக்காதது" பற்றி ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் இருவரும் என்னை மன்னித்து, இதையே தொடர்பதிவாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். :-)
என்ன எழுதுறதுனே தெரியல; அதனாலதான் இப்படியொரு மொக்கை!!!//


இதுவும் நல்லாயிருக்கே...

ஆ.ஞானசேகரன் said...

//அதில் என்னுடைய "சென்னை கிரிக்கெட்" எனும் கவிதையையும் வெளியிட்டமைக்கு யூத் விகடனுக்கு என் நன்றி!//
வாழ்த்துகள் நண்பரே

ஹேமா said...

அழகான பதிவு.சங்கடமான கேள்விகளையும் பதில்களையும் தவிர்த்திருக்கீங்க.ஞானசேகரனும்,
பா.ரா அண்ணா கேட்டுக்கொண்டும் நானும் இன்னும் பதிவு போடல.இதே சங்கடம்தான் காரணம்.

மண்குதிரை said...

நல்ல எழுதிட்டீங்க

ம்ம்ம் நல்லா இருக்கு

"உழவன்" "Uzhavan" said...

அமிர்தவர்ஷினி அம்மா --> மிக்க நன்றி.

ஆ.ஞானசேகரன் ---> மிக்க நன்றி
 
ஹேமா - எனக்கு சங்கடம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. பொதுவாக எனக்குப் பிடிக்காதது என்று எதுவும் இருக்காது. எனக்குப் பிடித்த வண்ணம்/உணவு/இடம்...... என்று எதுவும் கிடையாது. எல்லாவற்றையுமே நான் பிடித்ததாக்கிக் கொள்வேன். அதனால்தான் என்னால் கேள்வி பதில் போல எழுத இயலவில்லை. சீக்கிரமா நீங்களும் ஒரு இடுகை போடுங்க.
 
மண்குதிரை ---> நன்றி நண்பா :-)

PPattian said...

One Man's trash is another man's treasure.... :)

ராமலக்ஷ்மி said...

சரியாப் போச்சு, நிஜம்மாவே பிடித்திருந்தது. அப்புறம் க.பாலாசியின் கமெண்டை இந்தப் பக்கமாக அரைமணி கழிந்து வந்தபோது பார்க்கையில், ஆகா உங்க தலைப்பு என் பின்னூட்டத்தை புரட்டிப் போடப் போவுதேன்னு புரிஞ்சுது:)!

"உழவன்" "Uzhavan" said...

@PPattian : புபட்டியன்
நன்றி
 
@ராமலக்ஷ்மி
//உங்க தலைப்பு என் பின்னூட்டத்தை புரட்டிப் போடப் போவுதேன்னு புரிஞ்சுது:)! //
 
ஹாஹா.. அப்பவே புரிஞ்சதா :-)
 
//சரியாப் போச்சு, நிஜம்மாவே பிடித்திருந்தது//
 
ரொம்ப சந்தோசம் :-)

anujanya said...

திறந்த மனதுடன் ஆரம்பித்த இடுகை, பிறகு மற்ற விஷயங்களையும் தொட்டுச் செல்கிறது. உண்மையாக எழுதுவது போன்ற திருப்தி வேறெதிலும் கிடைக்காது. மற்றவர்களை எளிதில் சென்றடையவும் செய்யும். ஆனால், வாசிக்க வாசிக்க, எழுத்தின் விசாலமும், விலாசமும் மாறிக்கொண்டே போகும். போகட்டுமே :)

வாழ்த்துகள் உழவன். இந்த இடுகை எனக்கு உண்மையிலேயே மிகவும் பிடிக்கிறது.

அனுஜன்யா

"உழவன்" "Uzhavan" said...

//அனுஜன்யா
இந்த இடுகை எனக்கு உண்மையிலேயே மிகவும் பிடிக்கிறது.
அனுஜன்யா //
 
மகிழ்ச்சி :-)