Monday, November 9, 2009

உன் விரல் பிடித்து ...

சாலைக் கிண்ணங்களில்
தேங்கிய மழை நீரில்
முகம் பார்த்தபடி

குதிகால் தூக்கி
தாவித் தாவி நீ செல்லும்போது

திருவிழாவில்
எங்கே தவறிவிடுவோமோ
என்ற பயத்தில்
விரலை இறுகப் பற்றி நடக்கும்
குழந்தை போல

உன் கட்டை விரல் பற்றி
உன்னோடு பயணிக்கிறது
செருப்பு!

உழவன்

38 comments:

Vidhoosh said...

எவ்ளோ ஈசியா எழுதிட்டீங்க சார். நான்தான் ரொம்ப நேரம் அதை கற்பனை செய்து பார்த்து பார்த்து மகிழ்ந்துக்கறேன். :)
--வித்யா

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு உழவரே.

மாதேவி said...

அருமை.

"எங்கே தவறிவிடுவோமோ
என்ற பயத்தில்
விரலை இறுகப் பற்றி நடக்கும்"...

ராமலக்ஷ்மி said...

எப்படிங்க யோசிக்கிறீங்க:))? ரொம்ப வித்தியாசமான அருமையான கவிதை. அப்படியே மழை பொழிந்து முடித்த சாலையில் கொண்டு விட்டுவிட்டது கவிதை.

தேவன் said...

அகல உழுவதை விட ஆழ உழு என்பார்கள். அது போல தாங்கள் நிறைய எழுதுவதை விட சுருங்க சொல்லி விளங்க வைத்து விட்டீர்கள் நன்றி உழவரே !!

S.A. நவாஸுதீன் said...

அழகு கவிதை உழவரே

SUFFIX said...

அழகான உவமை உழவரே, எங்கே பார்த்தாலும் 'பிடித்தது பிடிக்காது 10' ஓடிக்கிட்டு இருக்கு, இங்கே வந்து விதயாசமாக விரல் பிடித்தல் படித்ததில் மகிழ்ச்சி நண்பரே!!

கலகலப்ரியா said...

aahaa..! azhago azhagunga..!

சொல்லரசன் said...

வித்தியாசமான யோசனை உழவரே,அந்த உவமையை கவிதையாக்கியது அருமை

கலையரசன் said...

தலைப்பு அட்டகாசம்...

க.பாலாசி said...

//திருவிழாவில்
எங்கே தவறிவிடுவோமோ
என்ற பயத்தில்
விரலை இறுகப் பற்றி நடக்கும்
குழந்தை போல//

நச்சின்னு அடிச்சீங்க உழவரே....ரொம்ப ரசித்தேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா ரசிச்சு

நினைச்சு கூட பார்த்தேன்னா பார்த்துக்கோங்க இந்த கவிதையின் அழகை...

பிரவின்ஸ்கா said...

அருமை

- பிரவின்ஸ்கா

மதிபாலா said...

கவிதெ...கவிதெ....

பின்னுறீங்க பாஸு.

வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

//Vidhoosh
எவ்ளோ ஈசியா எழுதிட்டீங்க சார். நான்தான் ரொம்ப நேரம் அதை கற்பனை செய்து பார்த்து பார்த்து மகிழ்ந்துக்கறேன். :)
--வித்யா //

மிக்க மகிழ்ச்சிங்க.. ஆமா.. அதென்ன நேர்ல பார்த்த பின்பும் சார் எல்லாம்..ம்ம் .. சார் எல்லாம் ஒன்னும் வேண்டாம் :-)

"உழவன்" "Uzhavan" said...

//பா.ராஜாராம்
நல்லா இருக்கு உழவரே. //

நன்றி பாரா

"உழவன்" "Uzhavan" said...

//கேசவன் .கு
அகல உழுவதை விட ஆழ உழு என்பார்கள். அது போல தாங்கள் நிறைய எழுதுவதை விட சுருங்க சொல்லி விளங்க வைத்து விட்டீர்கள் நன்றி உழவரே !! //

மிக்க நன்றி.. தங்கள் முதல் வருகைக்கும்

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
எப்படிங்க யோசிக்கிறீங்க:))?

அதுவா வருது. எல்லாம் சென்னை மழையின் தாக்கம்தான் :-)

//ரொம்ப வித்தியாசமான அருமையான கவிதை. அப்படியே மழை பொழிந்து முடித்த சாலையில் கொண்டு விட்டுவிட்டது கவிதை.//

தங்களின் பாராட்டு கண்டு மகிழ்கிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

//ஷ‌ஃபிக்ஸ்/Suffix

அழகான உவமை உழவரே, எங்கே பார்த்தாலும் 'பிடித்தது பிடிக்காது 10' ஓடிக்கிட்டு இருக்கு, இங்கே வந்து விதயாசமாக விரல் பிடித்தல் படித்ததில் மகிழ்ச்சி நண்பரே!! //

ம்ம்.. நானும் அந்த பிடித்தது பிடிக்காதது எழுதனும் :-)

"உழவன்" "Uzhavan" said...

//கலகலப்ரியா
aahaa..! azhago azhagunga..! //
 
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி :)

"உழவன்" "Uzhavan" said...

//சொல்லரசன்
வித்தியாசமான யோசனை உழவரே,அந்த உவமையை கவிதையாக்கியது அருமை //
 
வாங்க. சொல்லரசன்.. எப்படி இருக்கீங்க? சீக்கிரம் அடுத்த இடுகை போடுங்க

"உழவன்" "Uzhavan" said...

//கலையரசன்
தலைப்பு அட்டகாசம்... //
 
இதை எழுத எடுத்துக் கொண்ட நேரத்தை விட, தலைப்பிற்குத்தான் அதிக நேரம் ஆனது.  அந்த வகையில் உங்கள் பாராட்டு கண்டு மகிழ்கிறேன். நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//க.பாலாசி
//திருவிழாவில்
எங்கே தவறிவிடுவோமோ
என்ற பயத்தில்
விரலை இறுகப் பற்றி நடக்கும்
குழந்தை போல//

நச்சின்னு அடிச்சீங்க உழவரே....ரொம்ப ரசித்தேன். //
 

//மாதேவி
அருமை.

"எங்கே தவறிவிடுவோமோ
என்ற பயத்தில்
விரலை இறுகப் பற்றி நடக்கும்"...//

S.A. நவாஸுதீன்
அழகு கவிதை உழவரே //

மூவருக்கும் நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//பிரியமுடன்...வசந்த்

நல்லா ரசிச்சு நினைச்சு கூட பார்த்தேன்னா பார்த்துக்கோங்க இந்த கவிதையின் அழகை... //
ஒரு காட்சியை உங்கள் மனதிற்குள் இவ்வரிகள் கொண்டு வந்தமை கண்டு வியக்கிறேன். மகிழ்ச்சி தோழா

"உழவன்" "Uzhavan" said...

//பிரவின்ஸ்கா
அருமை

- பிரவின்ஸ்கா //

நன்றி நண்பா

"உழவன்" "Uzhavan" said...

//மதிபாலா

கவிதெ...கவிதெ....

பின்னுறீங்க பாஸு.

வாழ்த்துக்கள். //

தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

நன்றி தமிலிஷ்

அமிர்தவர்ஷினி அம்மா said...

வர வர வித்தியாசமா கற்பனைல இறங்கி கவிதைக் களை கட்ட ஆரம்பிச்சுடுச்சு

ஆ.ஞானசேகரன் said...

//உன் கட்டை விரல் பற்றி
உன்னோடு பயணிக்கிறது
செருப்பு!//

ஆகா அருமை

அமுதா said...

/*திருவிழாவில்
எங்கே தவறிவிடுவோமோ
என்ற பயத்தில்
விரலை இறுகப் பற்றி நடக்கும்
குழந்தை போல
*/
அருமை

/*உன் கட்டை விரல் பற்றி
உன்னோடு பயணிக்கிறது
செருப்பு!*/
நினைக்கவேயில்லை இப்படி முடியும் என்று. அருமை

Anonymous said...

காதலாய் ஒரு கவிதை என எண்ணிய வேளயில் காலனிக்கு ஒரு கவிதை..அழகுப்பா...

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

மிக அற்புதமான உருவகம்.. அழகான கவிதை.

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா

வர வர வித்தியாசமா கற்பனைல இறங்கி கவிதைக் களை கட்ட ஆரம்பிச்சுடுச்சு//

நன்றி அமித்துமா.. எல்லாம் உங்களைப் போன்றோரின் ஊக்கமே :-)

"உழவன்" "Uzhavan" said...

நன்றி நண்பர் ஞானசேகரன் அவர்களே
நன்றி அமுதா மேடம்
நன்றி தமிழரசி
நன்றி கோபாலகிருஷ்ணன்

Unknown said...

ரொம்ப அழகு சார்.. நான் திரும்ப திரும்ப படிச்சி பாத்தேன்...

அன்புடன் நான் said...

அழகிய சிந்தனை... புதிய கோணம் அருமை. மிக ரசித்தேன்.

விஜய் said...

ரொம்ப பிடிச்சிது நண்பா

விஜய்

"உழவன்" "Uzhavan" said...

பேநா மூடி ---> மிக்க நன்றி.. அது என்னய்யா பேநா மூடி? :-) வித்தியாசமாவும் நல்லாவும் இருக்கே
 
சி. கருணாகரசு ---> மகிழ்ச்சி நண்பரே
கவிதை(கள்) ---> நன்றி