Monday, October 26, 2009

ஒற்றைக் குருவி



தென்னங்கீற்று
பனையோலை
கம்மந்தட்டை
சோளத்தட்டை
ஓடு
சிமெண்ட்
பிளாஸ்டிக்
என
பலவிதமான
வீட்டுத் தலைகளில்
தாளமிட்டுப் பெய்யும்
மழையின் புதுயிசையை
உள் பூட்டிய வீட்டின்
மாடக்குழியிலிருந்து
ரசித்துக்கொண்டிருக்கிறது
ஒரேயொரு
சிட்டுக் குருவி மட்டும்!
 
உழவன்

32 comments:

மணிஜி said...

அந்த வீட்டுல செல்போன் இல்லை போலும்.கொடுத்து வைத்த குருவி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான கற்பனை நண்பரே.

S.A. நவாஸுதீன் said...

அருமை உழவரே.

க.பாலாசி said...

உங்களிடமிருந்து மற்றுமொரு அழகான கவிதை அன்பரே...ரசித்தேன்.

SUFFIX said...

வர்ணனைகள் அருமை!!

சொல்லரசன் said...

//மாடக்குழியிலிருந்து
ரசித்துக்கொண்டிருக்கிறது
ஒரேயொரு
சிட்டுக் குருவி மட்டும்!//

மாடக்குழிகளையும் காணமுடிவதில்லை சிட்டுக்குருவியும் பார்க்கமுடிவதில்லை
எனவேதான் இது கற்பனையாகிவிட்டது உங்களுக்கு

பித்தனின் வாக்கு said...

கிராமியத்தின் மீது பெய்யும் மழையின் வர்ணனை மிக அழகு. குருவி மட்டும் அல்ல இந்தக் கடுவனும் இரசித்தேன். கவிதையின் மழையை. நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்பவே அழகா இருக்கு நண்பா..

Vidhya Chandrasekaran said...

ரசனை..

ஹேமா said...

அந்தச் சிட்டுக்குருவியை தனிமையிலிருந்து ரசித்த நீங்கள்.

இவன்தான் கவிஞன் என ரசித்திருக்கும் சிட்டுக்குருவியும் இப்போ நானும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இங்கே (www.amirdhavarshini.blogspot.com) உங்களுக்கு ஒரு அழைப்பு.

அன்புடன் நான் said...

நல்ல கவிதை .... பராட்டுக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம்..

அழகா சொல்லியிருக்கீங்க..

படமும்...

ஆ.ஞானசேகரன் said...

அழகான கற்பனை... பாராட்டுகள் உழவன்

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை சிட்டுக் குருவியைப் போலவே. நாம ரசிக்க மறப்பவற்றை குருவியாவது ரசிக்கிறதே.

வாழ்த்துக்கள் உழவன்.

"உழவன்" "Uzhavan" said...

//தண்டோரா ......
அந்த வீட்டுல செல்போன் இல்லை போலும்.கொடுத்து வைத்த குருவி //
 
வாங்க மணிஜி அவர்களே.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

ஜெஸ்வந்தி
அழகான கற்பனை நண்பரே. //
 
S.A. நவாஸுதீன்
அருமை உழவரே. //
 
க.பாலாசி
உங்களிடமிருந்து மற்றுமொரு அழகான கவிதை அன்பரே...ரசித்தேன். //
 
ஷ‌ஃபிக்ஸ்/Suffix
வர்ணனைகள் அருமை!! //
 
மிக்க நன்றி ஜெஸ்வந்தி, S.A. நவாஸுதீன், க.பாலாசி, ஷ‌ஃபிக்ஸ்/Suffix

"உழவன்" "Uzhavan" said...

ஜெஸ்வந்தி
அழகான கற்பனை நண்பரே. //
 
S.A. நவாஸுதீன்
அருமை உழவரே. //
 
க.பாலாசி
உங்களிடமிருந்து மற்றுமொரு அழகான கவிதை அன்பரே...ரசித்தேன். //
 
ஷ‌ஃபிக்ஸ்/Suffix
வர்ணனைகள் அருமை!! //
 
மிக்க நன்றி ஜெஸ்வந்தி, S.A. நவாஸுதீன், க.பாலாசி, ஷ‌ஃபிக்ஸ்/Suffix

"உழவன்" "Uzhavan" said...

//சொல்லரசன்
//மாடக்குழியிலிருந்து
ரசித்துக்கொண்டிருக்கிறது
ஒரேயொரு
சிட்டுக் குருவி மட்டும்!//

மாடக்குழிகளையும் காணமுடிவதில்லை சிட்டுக்குருவியும் பார்க்கமுடிவதில்லை
எனவேதான் இது கற்பனையாகிவிட்டது உங்களுக்கு //
 
ரொம்ப சரியாச் சொன்னீங்க சொல்லரசன்ஜி

"உழவன்" "Uzhavan" said...

//பித்தனின் வாக்கு
கிராமியத்தின் மீது பெய்யும் மழையின் வர்ணனை மிக அழகு. குருவி மட்டும் அல்ல இந்தக் கடுவனும் இரசித்தேன். கவிதையின் மழையை. நன்றி. //
 
ரசித்தமை கண்டு மகிழ்கிறேன் பித்தன்ஜி

"உழவன்" "Uzhavan" said...

கார்த்திகைப் பாண்டியன்
ரொம்பவே அழகா இருக்கு நண்பா.. //
 
வித்யா
ரசனை.. //
 
அமிர்தவர்ஷினி அம்மா
nice //

மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன், வித்யா, அமிர்தவர்ஷினி அம்மா

"உழவன்" "Uzhavan" said...

//ஹேமா
அந்தச் சிட்டுக்குருவியை தனிமையிலிருந்து ரசித்த நீங்கள்.
இவன்தான் கவிஞன் என ரசித்திருக்கும் சிட்டுக்குருவியும் இப்போ நானும்.//
 
உங்கள் பின்னூட்டத்தை நான் இப்போது ரசிக்கிறேன் ஹேமாஜி :-)

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா has left a new comment on your post "ஒற்றைக் குருவி":

இங்கே (www.amirdhavarshini.blogspot.com) உங்களுக்கு ஒரு அழைப்பு. //

ரொம்ப சந்தோசமா இருக்கு அமித்துமா. நன்றினு ஒரு வார்த்தையில சொன்னா மட்டும் போதாது. அதை வேறு ஏதாவது வகையில் காட்டவேண்டும். அதற்கான தருணம் வரட்டும் :-)
 
மிக்க மகிழ்ச்சி

"உழவன்" "Uzhavan" said...

//சி. கருணாகரசு
நல்ல கவிதை .... பராட்டுக்கள் //
 
//பிரியமுடன்...வசந்த்
ம்ம்..
அழகா சொல்லியிருக்கீங்க..
படமும்... //
 
ஆ.ஞானசேகரன்
அழகான கற்பனை... பாராட்டுகள் உழவன்//
 
நன்றி சி. கருணாகரசு அவர்களே.. உங்களின் முதல் வருகை கண்டு மகிழ்கிறேன்
நன்றி பிரியமுடன்...வசந்த், ஆ.ஞானசேகரன்

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
அழகான கவிதை சிட்டுக் குருவியைப் போலவே. நாம ரசிக்க மறப்பவற்றை குருவியாவது ரசிக்கிறதே.
வாழ்த்துக்கள் உழவன். //
 
இது என் ஊரில் நான் கண்ட காட்சிதான் ராமலட்சுமி மேடம். ஆனால் நகரில் மாடக்குழியே இல்லை. கார்த்திகை தீபத்தன்று மாடக்குழியில் ஏற்றிவைக்கப்படும் விளக்குகளை கண்டவர்கள்தானே நாம். நன்றி :-)

மண்குதிரை said...

nalla kavithai

விஜய் said...

மிக அழகாக இருக்கிறது

உங்கள் கவிதை வடிவம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது

விஜய்

விக்னேஷ்வரி said...

அழகா இருக்கு.

"உழவன்" "Uzhavan" said...

//மண்குதிரை
nalla kavithai //
 
//கவிதை(கள்)
மிக அழகாக இருக்கிறது
உங்கள் கவிதை வடிவம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது
விஜய் //
 
//விக்னேஷ்வரி
அழகா இருக்கு//
 
மிக்க நன்றி மண்குதிரை, விஜய், விக்னேஷ்வரி

அமுதா said...

அழகு...

பிரவின்ஸ்கா said...

அருமை

-பிரவின்ஸ்கா

"உழவன்" "Uzhavan" said...

நன்றி பிரவின்ஸ்கா. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க நண்பா.. அப்பப்ப மட்டும் வந்து தலையைக் காட்டிட்டு போறீங்க :-)
 
நன்றி அமுதா மேடம்.. வேலைப் பளு குறைஞ்சிருச்சா?