Sunday, October 11, 2009

அன்புள்ள அகமதிக்கு,

சென்னை
12.10.2009

அன்புள்ள அகமதிக்கு,

வழக்கமா ஆபீஸ் முடிஞ்சதுக்கப்புறம், கொஞ்ச நேரம் டேபிள் டென்னிஸ் விளையாடிட்டு, ஏதோ நம்மளால முடிந்த ஒரு நாலைந்து ஃபோர், சிக்ஸ் எல்லாம் அடிச்சு, நானும் பிளேயர்தான் நானும் பிளேயர்தான்னு காட்டிட்டு, அப்படியே அங்க இருக்கிற நியூஸ்பேப்பர்ஸ், குமுதம், ஆ.விகடன்னு எல்லாத்திலயும் அங்க அங்க கொஞ்ச நேரம் மேஞ்சிட்டு, ஒரு ஏழு ஏழரைக்குக் கெளம்பித்தான் வீட்டுக்குப் போறது வழக்கம். வீடு ஆபிசுக்குப் பக்கத்தில்தான்; ஐந்து நிமிஷத்துல வீட்டுக்குப் போயிரலாங்குறது கூடுதல் சவுகரியம். இதுதான் போனமாசம் உன்ன சென்னைக்குக் கூட்டிட்டு வருகிற வரைக்கும் பெரும்பாலும் வழக்கமா நடந்துக்கிட்டு இருந்தது.

ஆனா இப்ப நிலமை தலைகீழ். ஆபிசில இருந்து எப்படா கெளம்புவோம்னு இருக்கும். TT, கேரம், பேப்பர்ஸ் எல்லாத்துக்கும் நோ சொல்லிட்டு எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுவேன். கதவைத் திறந்து மதி....னு உன்னைக் கூப்பிடும்போது உன் சிரிப்பைப் பார்க்கனுமே..அடடா.. இந்த இடத்துல உன் சிரிப்புக்கு ஒரு உவமை சொல்லனும்னு நினைக்கிறேன். சில நிமிஷம் யோசிச்சதுக்கப்புறமா அதுக்கு ஈடா எந்த உவமையும் சொல்லமுடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு, எதுவும் சொல்லாமலேயே உன்னுடைய சிரிப்ப அசை போட்டுக்கிட்டே இந்த மடலை எழுதுகிறேன்.

இப்பெல்லாம் நீ ஓ..ஓ.. ஆ..னு கையக் கால ஆட்டிக்கிட்டே சத்தமிட இல்லையில்லை பேச ஆரம்பிச்சிட்ட. உன்கூடவே சேர்ந்து நாங்களும் பேசனும். அப்பதான் நீ தொடர்ந்து இப்படி பேசிக்கிட்டே இருப்ப.

பாலில் ஊறவைத்த இட்லி, பருப்பு சாதம், கேரட் சாதம், பருப்பு வேகவைத்த தண்ணி என உனக்கான உணவுகளைப் பட்டியலிட்டு இப்போது ஊட்டத் துவங்கியிருக்கிறார் உன் அம்மா. சமத்தா சாப்பிட்டுக்கிட்டு இருந்த நீ, இப்போதெல்லாம் சாப்பிட மறுக்கிறாய். பெரிய பிள்ளையாய் ஆவாதால் தான் இப்படி அடமோ? ம்..ம்

"நாலு மாதம் வரைக்கும் புள்ளையை நாய் கூட வளர்க்கும்"னு ஊர்ல சொல்வாங்க. அது சரியாத்தான் இருக்கு. முன்னெல்லாம் கட்டில்ல போட்டா, அமைதியா கையக் கால ஆட்டிக்கிட்டு அப்படியே படுத்திருப்ப. ஆனா இப்ப உன்னைச் சுத்தி எத்தனை தலையனை வைச்சாலும் எல்லாத்தயும் உதைச்சுத் தள்ளிவிட்டுட்டு தவழ்ந்து கட்டிலோட நுனிக்கு வந்திடுற. அதனால இப்ப பெரும்பாலும் தரையிலதான் உன்ன படுக்க போடுறோம். இருந்தாலும் நீ, தவழுறதுல காட்டும் ஆர்வத்தைவிட, எழுந்து உட்காருவதில்தான் அதிக ஆர்வம் காட்டுற. நீ தவழ்ந்து போவதையும், பாதிக்கு மேல் எழுந்து உட்காருவதையும் நம்ம வீட்டுக் கேமராவும், என்னோட மொபைலும் படம் பிடிச்சுக்கிட்டே இருக்கு.

தூக்கம் வரும்போதும், அப்புறம் பசி எடுக்கும்போதும் விரல் சூப்புற கெட்ட பழக்கம் இப்ப உன்ட இருக்கு. அதுவும் பசிக்கும்போது விரலை எடுத்துவிட்டாபோதும், ஒரே அழுகைதான். சில சமயங்களில் பால் புட்டியை நீயே கையில் பிடித்துக்கொண்டு பால் குடிப்பதைக் காணும்போது உள்ளம் ஆர்ப்பரிக்கிறது.

முக்கியமா, இந்த ஆறு மாதகாலமாக உன்னை நல்ல ஆரோக்கியதுடன் பார்த்துக்கொண்ட உன் அம்மாவுக்கும், இறைவனுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

அப்புறம்.. நான் உன்னை எப்போதெல்லாம் தூக்கி வைத்துள்ளேனோ, அப்போதெல்லாம் என் மீது அடிக்கடி ஒன்ஸ் போகிறாய். அதற்கு உன் அம்மா, குழந்தைஙக யார் மீது அடிக்கடி ஒன்ஸ் போறாங்களோ அவங்க மேலதான் ரொம்ப பாசமா இருப்பாங்களாம்னு சொல்றாங்க. அப்படியா அகமதி?

அன்புடன்,
அப்பா

32 comments:

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

//கொஞ்ச நேரம் டேபிள் டென்னிஸ் விளையாடிட்டு, ஏதோ நம்மளால முடிந்த ஒரு நாலைந்து ஃபோர், சிக்ஸ் எல்லாம் அடிச்சு, நானும் பிளேயர்தான் நானும் பிளேயர்தான்னு காட்டிட்டு,//

புரியலயே!

ஆ.ஞானசேகரன் said...

//அப்புறம்.. நான் உன்னை எப்போதெல்லாம் தூக்கி வைத்துள்ளேனோ, அப்போதெல்லாம் என் மீது அடிக்கடி ஒன்ஸ் போகிறாய். அதற்கு உன் அம்மா, குழந்தைஙக யார் மீது அடிக்கடி ஒன்ஸ் போறாங்களோ அவங்க மேலதான் ரொம்ப பாசமா இருப்பாங்களாம்னு சொல்றாங்க. அப்படியா அகமதி?//

வாழ்த்துகள் நண்பா...... மகிழ்ச்சி பொங்க என் வாழ்த்துகள். குழந்தையை பற்றி சொல்லுபோதே மகிழ்ச்சியும் தானாக வ்ந்துவிடுகின்றது. சும்மாவா சொன்னார்கள்...

S.A. நவாஸுதீன் said...

அகமதி அப்டேட்ஸ் அழகு உழவரே. சிலாகித்து எழுதி இருக்கின்றீர்கள். படிக்க படிக்க மனசு இலேசாகிறது.

ராமலக்ஷ்மி said...

//இந்த ஆறு மாதகாலமாக உன்னை நல்ல ஆரோக்கியதுடன் பார்த்துக்கொண்ட உன் அம்மாவுக்கும், இறைவனுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.//

அகமதிக்கும் அன்பான பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்:)!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்.

கலக்கல் அப்டேட்ஸ்

அப்புறம்.. நான் உன்னை எப்போதெல்லாம் தூக்கி வைத்துள்ளேனோ, அப்போதெல்லாம் என் மீது அடிக்கடி ஒன்ஸ் போகிறாய். //

கொடுத்து வெச்சிருக்கனும்ங்க இதுக்கெல்லாம் :)

க.பாலாசி said...

//ஆனா இப்ப உன்னைச் சுத்தி எத்தனை தலையனை வைச்சாலும் எல்லாத்தயும் உதைச்சுத் தள்ளிவிட்டுட்டு தவழ்ந்து கட்டிலோட நுனிக்கு வந்திடுற. //

ஒரு தகப்பனின் ஸ்தானத்தில் உங்களின் கடிதம் அருமை. அணுவனுவாய் ரசித்து எழுதியிருக்கிறீர்கள்....நன்று

ஹேமா said...

வாழ்த்துகள்.இந்தப் பருவத்தைப் பதிவாக்க நினைத்த உங்களுக்குப் பாராட்டுக்கள்.அருமை.மதிக்குட்டியின் படம் ஒன்றைப் போட்டிருக்க்லாமே.
பார்க்க ஆசைதான்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்ல ஒரு உணர்ச்சிப் பதிவு. பொறித்து வைத்து விட்டீர்கள் நெஞ்சிலும் இதயத்திலும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

பாசக்கார அப்பாண்ணே நீங்க.. அகமதி கொடுத்து வச்சவ.. அப்படியே நம்ம குட்டிப்புள்ள படமும் போடுங்கண்ணே..:-)))

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

உங்களை "அப்பா" வாக ப்ரோமோஷன் கொடுத்த அகமதி குட்டி பாப்பாவுக்கு ஆசிர்வாதங்கள்! உங்களுக்கு + மிசஸ் உழவனுக்கு வாழ்த்துக்கள்!!

SUFFIX said...

அழகிய பாச மடல், பிள்ளை மனம் போல மிருதுவாக இருக்கு.

ரவி said...

சூப்பர்.

ஓட்டு போட்டுட்டேன் !!!

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.ஞானசேகரன்
//கொஞ்ச நேரம் டேபிள் டென்னிஸ் விளையாடிட்டு, ஏதோ நம்மளால முடிந்த ஒரு நாலைந்து ஃபோர், சிக்ஸ் எல்லாம் அடிச்சு, நானும் பிளேயர்தான் நானும் பிளேயர்தான்னு காட்டிட்டு,//

புரியலயே! //

என்ன பாஸ் நீங்க :-) TT லயும் நாங்க 4, 6 எல்லாம் அடிப்போம் :-)

"உழவன்" "Uzhavan" said...

S.A. நவாஸுதீன்
அகமதி அப்டேட்ஸ் அழகு உழவரே. சிலாகித்து எழுதி இருக்கின்றீர்கள். படிக்க படிக்க மனசு இலேசாகிறது. //

மிக்க நன்றி நண்பரே

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.ஞானசேகரன்
வாழ்த்துகள் நண்பா...... மகிழ்ச்சி பொங்க என் வாழ்த்துகள். குழந்தையை பற்றி சொல்லுபோதே மகிழ்ச்சியும் தானாக வ்ந்துவிடுகின்றது. சும்மாவா சொன்னார்கள்...//

வாழ்த்துக்கு நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
//இந்த ஆறு மாதகாலமாக உன்னை நல்ல ஆரோக்கியதுடன் பார்த்துக்கொண்ட உன் அம்மாவுக்கும், இறைவனுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.//
அகமதிக்கும் அன்பான பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்:)! //

வாழ்த்துக்கும் உங்கள் அன்புக்கும் நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

//க.பாலாஜி
ஒரு தகப்பனின் ஸ்தானத்தில் உங்களின் கடிதம் அருமை. அணுவனுவாய் ரசித்து எழுதியிருக்கிறீர்கள்....நன்று //

மகிழ்ச்சி பாலாஜி

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா
இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்.
கலக்கல் அப்டேட்ஸ்
அப்புறம்.. நான் உன்னை எப்போதெல்லாம் தூக்கி வைத்துள்ளேனோ, அப்போதெல்லாம் என் மீது அடிக்கடி ஒன்ஸ் போகிறாய். //
கொடுத்து வெச்சிருக்கனும்ங்க இதுக்கெல்லாம் :) //

ஓ இதுக்கு கொடுத்துவேற வைச்சிருக்கனுமா :-))
முதலில் உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும். இப்படியொரு பதிவு எழுத நீங்களே காரணம் :-)

"உழவன்" "Uzhavan" said...

ஹேமா
வாழ்த்துகள்.இந்தப் பருவத்தைப் பதிவாக்க நினைத்த உங்களுக்குப் பாராட்டுக்கள்.அருமை.மதிக்குட்டியின் படம் ஒன்றைப் போட்டிருக்க்லாமே.
பார்க்க ஆசைதான். //
அடுத்த முறை போட்டிரலாம் :-)

"உழவன்" "Uzhavan" said...

//ஜெஸ்வந்தி
நல்ல ஒரு உணர்ச்சிப் பதிவு. பொறித்து வைத்து விட்டீர்கள் நெஞ்சிலும் இதயத்திலும். //

நன்றி மேடம்

"உழவன்" "Uzhavan" said...

//கார்த்திகைப் பாண்டியன்
பாசக்கார அப்பாண்ணே நீங்க.. அகமதி கொடுத்து வச்சவ.. அப்படியே நம்ம குட்டிப்புள்ள படமும் போடுங்கண்ணே..:-))) //

நாமெல்லாம் யாரு.. பாசக்கார பயலுக தானே :-)

"உழவன்" "Uzhavan" said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
உங்களை "அப்பா" வாக ப்ரோமோஷன் கொடுத்த அகமதி குட்டி பாப்பாவுக்கு ஆசிர்வாதங்கள்! உங்களுக்கு + மிசஸ் உழவனுக்கு வாழ்த்துக்கள்!! //

வாங்க கவிஞரே.. மிக்க மகிழ்ச்சி

"உழவன்" "Uzhavan" said...

//ஷஃபிக்ஸ்/Suffix
அழகிய பாச மடல், பிள்ளை மனம் போல மிருதுவாக இருக்கு. //

ரசித்தமைக்கு நன்றி ஷஃபி

"உழவன்" "Uzhavan" said...

//செந்தழல் ரவி
சூப்பர்.
ஓட்டு போட்டுட்டேன் !!! //

வாங்க தலைவா.. மிக்க நன்றி

நாடோடி இலக்கியன் said...

அகமதி வளர்ந்த பின் இந்த கடிதத்தை படிக்கும் போது என்ன ரியாக்‌ஷன் கொடுக்கிறார் என்பதை நினைவில் வைத்து எனக்கு சொல்லிவிடுங்கள்.

அற்புதம்.

"உழவன்" "Uzhavan" said...

//நாடோடி இலக்கியன்
அகமதி வளர்ந்த பின் இந்த கடிதத்தை படிக்கும் போது என்ன ரியாக்ஷன் கொடுக்கிறார் என்பதை நினைவில் வைத்து எனக்கு சொல்லிவிடுங்கள்.

அற்புதம்.//
 
நிச்சயமாக.. மிக்க நன்றி இலக்கியன்ஜி

"உழவன்" "Uzhavan" said...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

SUFFIX said...

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

Anonymous said...

அகமதியால் நீங்க பெற்ற சந்தோஷம் படிக்கும் போதே சந்தோஷத்தில் கண் கலங்கிப்போனது உண்மை..

அமுதா said...

அகமதி அப்டேட்ஸ் அழகு