Monday, August 31, 2009

"சுதந்திரம்" சிறுகுறிப்பு வரைக - உயிரோசையில் வெளியான கவிதை

பேரிலோவன்பட்டி
நல்லழகு நாடார் பள்ளியிலிருந்து
எங்கள் ஊரான
வேலிடுபட்டிக்கு நடந்து வருகையில்
ஒரேயொரு கழுதை மட்டும்
பொதியோடு தனியாகப்
போய்க்கொண்டிருப்பதைக்
கண்டோம்.

நானும், என்னோடு
எட்டாம் வகுப்பு பயிலும்
சுந்தரும்
ஏழாம் வகுப்பு கணேசனும்
கழுதையை மடக்கிப் பிடித்து
பொதியைத் தள்ளிவிட்டு
அதன் வாலில்
பனையோலையைக் கட்டிவிட
சிட்டாய்ப் பறந்த
கழுதையைக் கண்டு
மகிழ்ந்து கொண்டு,

காலையில்
சுதந்திர தின விழாவில்
வாங்கி டவுசரில்
போட்ட மிட்டாய்களின்
மீதத்தைத்
தின்று கொண்டே
கழுதைக்கு சுதந்திரம்
வாங்கித் தந்த பெருமையுடன்
வீடு வருகையில்,

என் அப்பா
அக்காவைத் திட்டிக்கொண்டிருந்தார்.
"பொம்பளப் புள்ளைகளுக்கு
இதுக்கு மேல என்ன
படிப்பு வேண்டிக்கெடக்கு
இன்னும் ரெண்டு மூனு மாசத்துக்குள்ள
நல்ல இடமா பார்க்கனும்"
என்று!

உழவன்

31.08.2009 அன்று உயிரோசையில் வெளியான கவிதை. உயிரோசைக்கு நன்றி


27 comments:

S.A. நவாஸுதீன் said...

எளிய வரிகளில் எதார்த்தம். நல்லா இருக்கு உழவரே

உயிரோசைக்கு வாழ்த்துக்கள்.

anujanya said...

உழவன்,

நல்லா இருக்கு. இனி மென்மேலும் நிறைய கவிதைகள் எழுதுங்கள். வாழ்த்துகள்.

அனுஜன்யா

தேவன் மாயம் said...

இன்னும் விழிப்புணர்வு வரவில்லை!!! வருத்தம்தான்!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை, அந்த படம் இரண்டுமே அருமை, அழகு

சரியான சிறுகுறிப்புதான் :(

SUFFIX said...

அழகு!! தலைவரே!!

// S.A. நவாஸுதீன் said...
எளிய வரிகளில் எதார்த்தம். நல்லா இருக்கு உழவரே

உயிரோசைக்கு வாழ்த்துக்கள்.//

ஆம் எளிமையான் வரிகளில், வலிமையான கருத்து, எதார்த்தம்.

க.பாலாசி said...

//என் அப்பா
அக்காவைத் திட்டிக்கொண்டிருந்தார்.
"பொம்பளப் புள்ளைகளுக்கு
இதுக்கு மேல என்ன
படிப்பு வேண்டிக்கெடக்கு
இன்னும் ரெண்டு மூனு மாசத்துக்குள்ள
நல்ல இடமா பார்க்கனும்"
என்று!//

சமுதாயத்தின் அவலமான நிலையை கூறும் வரிகள்...

நன்றாக உள்ளது தோழரே....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் கவிதை அழகாக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ரசித்தேன். ஒருமுறை என் வலயத்திற்கு வந்து விருதை எடுத்துக் கொள்ளுங்களேன்.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா,... எதார்த்தமான வரிகளில் அழகாக படைத்துள்ளீர்கள்

"உழவன்" "Uzhavan" said...

//S.A. நவாஸுதீன்
எளிய வரிகளில் எதார்த்தம். நல்லா இருக்கு உழவரே
உயிரோசைக்கு வாழ்த்துக்கள். //
 
மிக்க நன்றி நவாஸ்.

"உழவன்" "Uzhavan" said...

//அனுஜன்யா
உழவன்,
நல்லா இருக்கு. இனி மென்மேலும் நிறைய கவிதைகள் எழுதுங்கள். வாழ்த்துகள்.
அனுஜன்யா //
 
மிக மகிழ்வாய் உணர்கிறேன். உயிரோசையில் படித்துவிட்டு தகவல் சொன்னமைக்கும், உங்களின் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா
கவிதை, அந்த படம் இரண்டுமே அருமை, அழகு
சரியான சிறுகுறிப்புதான் :( //
 
மிக்க நன்றி அமித்துமா. உங்களின் தொடர்வருகையும், வாழ்த்துக்களும் மிக்க மகிழ்வைத் தருகின்றன.
இக்கவிதைகாக இந்த இடுகையில் போட்டுள்ள படம், உயிரோசையில் இருந்தே எடுக்கப்பட்டது.

"உழவன்" "Uzhavan" said...

//தேவன் மாயம்
இன்னும் விழிப்புணர்வு வரவில்லை!!! வருத்தம்தான்!! //
 
வரவேண்டும் என்பதுதான் சார் எல்லோரின் விருப்பமும். மகிழ்ச்சியும் நன்றியும் :-)

"உழவன்" "Uzhavan" said...

ஷ‌ஃபிக்ஸ்
அழகு!! தலைவரே!!

// S.A. நவாஸுதீன் said...
எளிய வரிகளில் எதார்த்தம். நல்லா இருக்கு உழவரே

உயிரோசைக்கு வாழ்த்துக்கள்.//

ஆம் எளிமையான் வரிகளில், வலிமையான கருத்து, எதார்த்தம். //
 
ரொம்ப நன்றி தலைவரே.

"உழவன்" "Uzhavan" said...

//க.பாலாஜி
//என் அப்பா
அக்காவைத் திட்டிக்கொண்டிருந்தார்.
"பொம்பளப் புள்ளைகளுக்கு
இதுக்கு மேல என்ன
படிப்பு வேண்டிக்கெடக்கு
இன்னும் ரெண்டு மூனு மாசத்துக்குள்ள
நல்ல இடமா பார்க்கனும்"
என்று!//
சமுதாயத்தின் அவலமான நிலையை கூறும் வரிகள்...
நன்றாக உள்ளது தோழரே....//
 
இந்த அவலம் மாற்ற முயல்வோமாக. நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//ஜெஸ்வந்தி
உங்கள் கவிதை அழகாக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ரசித்தேன். ஒருமுறை என் வலயத்திற்கு வந்து விருதை எடுத்துக் கொள்ளுங்களேன். //
 
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
நீங்கள் அளித்த அன்பான அந்த விருதை மகிழ்வோடு பெற்றுக்கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி. என் நன்றிகளும்!

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.ஞானசேகரன்
வாழ்த்துகள் நண்பா,... எதார்த்தமான வரிகளில் அழகாக படைத்துள்ளீர்கள் //
 
நன்றி நண்பா. எப்படி இப்படி எதார்த்தமாக அமைந்தது என்று எனக்கே தெரியவில்லை :-)

மண்குதிரை said...

nalla irukku nanbaree

uyirosaiyil vaasiththeen arumai

eliya azhaliyal

innum ithu poonru ezhutha vaazhththukkal

"உழவன்" "Uzhavan" said...

மண்குதிரை
nalla irukku nanbaree
uyirosaiyil vaasiththeen arumai
eliya azhaliyal
innum ithu poonru ezhutha vaazhththukkal //

தங்களின் முதல் வருகையையும் வாழ்த்துக்களையும் கண்டு மகிழ்கிறேன் மண்குதிரை. மிக்க நன்றி

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்க்கையின் முரணை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். உயிரின் ஆழம் வரை தொடர்கிறது.

ஹேமா said...

உழவன்,வாழ்வின் யதார்த்தம் சொல்லியிருக்கிறீர்கள்.பெண்களின் சுதந்திரம் இந்த அளவோடுதான் இருக்கிறது என்பது உங்கள் கவிதையே சாட்சி.

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

பிரவின்ஸ்கா said...

கவிதை அருமை .
வாழ்த்துக்கள்

- ப்ரியமுடன் ,
பிரவின்ஸ்கா

"உழவன்" "Uzhavan" said...

SUMAZLA/சுமஜ்லா, ஹேமா, தமிழ் முல்லை, பிரவின்ஸ்கா
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

பா.ராஜாராம் said...

அழகியல் மிளிரும் மலரும் நினைவுகள் உழவன்!கொஞ்ச நேரம் எதுவும் ஓடலை!அற்புதம்!

ராமலக்ஷ்மி said...

//என் அப்பா
அக்காவைத் திட்டிக்கொண்டிருந்தார்.
"பொம்பளப் புள்ளைகளுக்கு
இதுக்கு மேல என்ன
படிப்பு வேண்டிக்கெடக்கு
இன்னும் ரெண்டு மூனு மாசத்துக்குள்ள
நல்ல இடமா பார்க்கனும்"
என்று!//

:(!

யதார்த்தத்தை அழகா சொல்லிட்டீங்க. உயிரோசையில் வெளிவந்திருப்பதற்கு என் வாழ்த்துக்கள்!

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
யதார்த்தத்தை அழகா சொல்லிட்டீங்க. உயிரோசையில் வெளிவந்திருப்பதற்கு என் வாழ்த்துக்கள்!
 
ரொம்ப நன்றி மேடம்.. வெல்கம் பேக் :-)

"உழவன்" "Uzhavan" said...

பா.ராஜாராம்
அழகியல் மிளிரும் மலரும் நினைவுகள் உழவன்!கொஞ்ச நேரம் எதுவும் ஓடலை!அற்புதம்!
 
மகிழ்ச்சி.. மிக்க நன்றி