Thursday, August 27, 2009

சம்பள சாபம்

பால் விலையேற்றம்; பருப்பு விலையேற்றம்.. என எல்லா விலையேற்றங்களும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருப்பதிலிருந்தே, அது எப்படியெல்லாம் ஒவ்வொரு நாளையும் ஆட்டிப் படைப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது என்பது தெரியும்.

இப்போது உலகப் பொருளாதாரம் ஒருபக்கம் நம் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்க, இந்த விலையேற்றங்கள் அதன் தீவிரத்தை அதிகப்படுத்திவிட்டன. வாங்குகிற இதே மாதச் சம்பளம் இன்னும் ஒரு ஆண்டிற்கு அப்படியே இருந்தாலே போதும். அதற்குள்ளாக இந்தக் கடனை அடைத்துவிடலாம் என நம்பிக்கையோடு, வாங்கிய கடனுக்கு மாதத் தவணை கட்டவே தடுமாறும் நிலை இப்போது.

மாதத்தில் சில நாட்கள் சம்பளமில்லா கட்டாய விடுமுறை; சில அலவன்சுகள் நீக்கம்; பக்கத்து சீட்டில் நேற்றுவரை வேலை பார்த்தவன் இன்று இல்லா நிலை.. இப்படி ஒவ்வொரு தினத்தையும் நாம் வலிந்து கடந்துகொண்டிருக்க, எந்தச் சலனமுமில்லாமல் இந்த விலையேற்றங்கள் மட்டும் விஷமாய் ஏறிக்கொண்டேயிருக்கிறது.

வானம் பார்த்த பூமிகளடங்கிய குக்கிராமங்கள் கொண்ட தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தலைநகரத்தில் இலவச வீடு வேண்டுமாம். ஆனால் விலையேற்ற அனலில் புழுவாய் துடித்துக்கொண்டிருக்கும் தின / மாதக் கூலிகள் தலைநகரைவிட்டே தொலைதூரமாய் சட்டி, பானைகளைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டேயிருக்கும் நிலை.

டீசல், பால் போன்ற அத்திவாசிய பொருள்களின் விலையேற்றச் செய்திகளும், சுவிஸ் வங்கிகளின் கறுப்பு பணச் செய்திகளும் ஒரே பக்கத்தில். என்ன ஒரு கொடுமை! இவற்றை காதிலே போட்டுக்கொண்டு வெறும் உச் மட்டும் கொட்டிவிட்டு ஒவ்வொரு தினத்தையும் கடத்த நாம் முயன்று கொண்டிருக்கிறோம்.

விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாததுதான். ஆனால் இந்த விலையேற்றச் சுமைகளனைத்தும் தின/மாதச் சம்பளக்காரன் தலையில் வந்துதானே பெரும்பாலும் விழுகிறது. உதாரணமாக பால் விலையேறுகிறது. உடனடியாக டீக்கடைக்காரன் டீயின் விலையை, தன் லாப விழுக்காடு குறையாமல் உயர்த்திக்கொள்கிறான். இப்படி ஒவ்வொரு பொருளின் விலையும், உற்பத்தியாளர்களால் லாப விழுக்காடு குறையாமல் உயர்த்தப்படுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் வாங்கி பயன்படுத்தும் மாதச் சம்பளக்காரனின் ஊதியம், விலையேற்றத்திற்குத் தகுந்தவாறு உயர்த்தப் படுகிறதா? வேலை தொடர்ந்தாலே போதும் என்கிற இன்றைய நிலையில் யாரிடம் போய்க் கேட்பது ஊதிய உயர்வை?

தின/மாத சம்பளக்காரர்களாகிய நாம் என்ன சாபம் பெற்று வந்தோமோ தெரியவில்லை. எல்லா விலையேற்றச் சுமைகளும் நம் தலையில்தான் வந்து அதிகமாய் விழுகிறது.

உழவன்

31 comments:

தினேஷ் said...

அண்ணே அப்படியே கொஞ்சம் கூலி விவசாய தொழிலாளியே நினைச்சு மனச ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்

தினேஷ் said...

இன்னும் என் ஊர்ல் கூலி வேலை வயலில் செய்பவர்களுக்கு 70 ரூ தான் சம்பளம்

நான் said...

மதர பக்கம் கூலி 180ருபாய் தெரியுமா?

க.பாலாசி said...

//மாதக் கூலிகள் தலைநகரைவிட்டே தொலைதூரமாய் சட்டி, பானைகளைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டேயிருக்கும் நிலை.//

உண்மையான ஆதங்கம்...

இது மாத சம்பளக்காரர்கள் என்றில்லை... நடுத்தர மற்றும் ஏழைக்குடும்பங்களையே வெகுவாக பாதிக்கக்கூடியது...

ஆ.ஞானசேகரன் said...

//இவற்றையெல்லாம் வாங்கி பயன்படுத்தும் மாதச் சம்பளக்காரனின் ஊதியம், விலையேற்றத்திற்குத் தகுந்தவாறு உயர்த்தப் படுகிறதா? வேலை தொடர்ந்தாலே போதும் என்கிற இன்றைய நிலையில் யாரிடம் போய்க் கேட்பது ஊதிய உயர்வை?//

சரியான கேள்வி,....
ஆனாலும் நம்மை விட கீழெ உள்ளவர்கள் நிலை இன்னும் மோசம்..

இதேல்லாம் உலகமயமாக்கலில் கிடைத்த பலன்

ஆ.ஞானசேகரன் said...

சரியான நேரத்தில் சரியான இடுகை

ஆ.ஞானசேகரன் said...

இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகின்றது

பித்தனின் வாக்கு said...

athan ottuku panam kodutham, neengalum vakkanaiya vangininga illa, appuram summa polampna enna artham. ok adutha electionla serthu tharam. athu varaiku ithan thalai vithi.

முரளிகண்ணன் said...

ஆம் உழவன்.

Vidhya Chandrasekaran said...

இன்னும் கொஞ்ச நாள்ல சமைக்க வேண்டாம் அப்படியே சாப்பிடனும்ங்கற நிலை வந்துடும் போலிருக்கு:(

"உழவன்" "Uzhavan" said...

//சூரியன்
இன்னும் என் ஊர்ல் கூலி வேலை வயலில் செய்பவர்களுக்கு 70 ரூ தான் சம்பளம்

அண்ணே அப்படியே கொஞ்சம் கூலி விவசாய தொழிலாளியே நினைச்சு மனச ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்//

மிக்க நன்றி சூரியன். அலுவலகத்திலே மாதச் சம்பளம் வாங்குபவர்களை விட, இந்தப் பாதிப்பு தினக் கூலிகளை அதிகமாகவே பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

"உழவன்" "Uzhavan" said...

கிறுக்கன்
மதர பக்கம் கூலி 180ருபாய் தெரியுமா? //

180 ரூபாய் என்பது ஓரளவு நல்ல ஊதியம் தான். ஆனால் இந்த மாதம் முழுக்க வேலை இருக்குமா என்பது சந்தேகமே. சரிதானே நண்பா?

"உழவன்" "Uzhavan" said...

//க.பாலாஜி
//மாதக் கூலிகள் தலைநகரைவிட்டே தொலைதூரமாய் சட்டி, பானைகளைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டேயிருக்கும் நிலை.//
உண்மையான ஆதங்கம்...
இது மாத சம்பளக்காரர்கள் என்றில்லை... நடுத்தர மற்றும் ஏழைக்குடும்பங்களையே வெகுவாக பாதிக்கக்கூடியது... //

ஆம் நண்பா.. நான் மாதச் சம்பளக்காரர்களை மட்டுமே சொல்லவில்லை. தின/வார/ மாத.. எதுவாயினும் அடுத்தவரிடம் கூலிக்கு வேலை பார்க்கும் அனைவரின் நிலையும் இதுதான்.
இந்த நிலையில் இன்றைய செய்தியைப் பார்த்தீரா? சோனியா அவர்கள் பிரதமருக்கு விலைவாசி உயர்வைத் தடுக்க வலியுறுத்தி கடிதம் எழுதினாராம். வர வர எல்லாரும் கடிதம் எழுதுவதில் மட்டும் திறமை பெற்றவர்களாக மாறிவருகின்றனர்.

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.ஞானசேகரன்
சரியான நேரத்தில் சரியான இடுகை//

அப்படியா சொல்றீங்க. மிக்க நன்றி நண்பா.

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.ஞானசேகரன்
இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகின்றது //

நானும் அப்படித்தான் நண்பா எண்ணுகிறேன். இதற்கான காரணங்கள் என்னென்ன, அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் முறைகேடுகள்.. இப்படி முடிந்தால் அடுத்த பாகமாக தொடரலாம்.

"உழவன்" "Uzhavan" said...

//PITTHAN
athan ottuku panam kodutham, neengalum vakkanaiya vangininga illa, appuram summa polampna enna artham. ok adutha electionla serthu tharam. athu varaiku ithan thalai vithi. //

நீங்க சொல்றதும் சரிதான். மக்கள் என்று மாறப்போகிறார்களோ தெரியவில்லை.
இலவச வேட்டி சேலையை உடுத்திக்கொண்டு, இலவச அரிசியை பொங்கி சாப்பிட்டு, இலவச தொலைக்காட்சியில் இந்தியத் தொலைக்காட்டி வரலாற்றில் முதன்முறையாக போடப்படும் சினிமாக்களைப் பார்துக்கொண்டு, விட்டத்தைப் பார்த்து படுப்பதில்தான் சுகம் என்று இப்போது மக்கள் எண்ணத் துவங்கிவிட்டனரோ என்ற ஐயமும் இபோது.

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.ஞானசேகரன்
//இவற்றையெல்லாம் வாங்கி பயன்படுத்தும் மாதச் சம்பளக்காரனின் ஊதியம், விலையேற்றத்திற்குத் தகுந்தவாறு உயர்த்தப் படுகிறதா? வேலை தொடர்ந்தாலே போதும் என்கிற இன்றைய நிலையில் யாரிடம் போய்க் கேட்பது ஊதிய உயர்வை?//

சரியான கேள்வி,....
ஆனாலும் நம்மை விட கீழெ உள்ளவர்கள் நிலை இன்னும் மோசம்..

இதேல்லாம் உலகமயமாக்கலில் கிடைத்த பலன்//

அப்படியா. உலகமயமாக்கல்தான் காரணமா? ஏழைகளின் பாடு மிகக் கொடுமையே.

"உழவன்" "Uzhavan" said...

//முரளிகண்ணன்
ஆம் உழவன்//

நன்றி தலைவா.

"உழவன்" "Uzhavan" said...

வித்யா
இன்னும் கொஞ்ச நாள்ல சமைக்க வேண்டாம் அப்படியே சாப்பிடனும்ங்கற நிலை வந்துடும் போலிருக்கு:( //

விலையேற்ற பூதம் நம்மை விழுங்கிவிடும் நிலையில் நம் நிலை பரிதாபத்திற்குரியதுதான். நன்றி வித்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

:(

உண்மை நிலைய சொல்லியிருக்கீங்க உழவன்

சந்தனமுல்லை said...

உண்மையான ஆதங்கம்...

நல்லா எழுதியிருக்கீங்க!! ஹ்ம்ம்!

SUMAZLA/சுமஜ்லா said...

எல்லா பாரமும் நம்மை போன்ற நடுத்தர வர்க்கத்துக்கு தான்! ஒன்னும் சமாளிக்க முடியல! வருமானம் அதே அளவு, ஆனா விலைவாசி டபுள்! கரெக்டா சொல்லியிருக்கீங்க!

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா
:(
உண்மை நிலைய சொல்லியிருக்கீங்க உழவன்//
 
//சந்தனமுல்லை
உண்மையான ஆதங்கம்...
நல்லா எழுதியிருக்கீங்க!! ஹ்ம்ம்! //
 
மிக்க நன்றி

S.A. நவாஸுதீன் said...

நல்ல இடுகை உழவன். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல இதில் அதிகம் பாதிக்கப்படுவோர் நடுத்தர வர்க்கத்தினர்தான்.

SUFFIX said...

உண்மை தான் நண்பரே, என்ன செய்வது, நாம் தான் சமாளிக்க வேண்டும், முடிந்த அளவு செலவுகளை குறைத்து, சொகுசான சிலவற்றை தியாகம் செய்தே ஆக வேண்டும். பகிர்விற்க்கு நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

/S.A. நவாஸுதீன்
நல்ல இடுகை உழவன். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல இதில் அதிகம் பாதிக்கப்படுவோர் நடுத்தர வர்க்கத்தினர்தான். //

SUMAZLA/சுமஜ்லா
எல்லா பாரமும் நம்மை போன்ற நடுத்தர வர்க்கத்துக்கு தான்! ஒன்னும் சமாளிக்க முடியல! வருமானம் அதே அளவு, ஆனா விலைவாசி டபுள்! கரெக்டா சொல்லியிருக்கீங்க! //
 
ஷஃபிக்ஸ்
உண்மை தான் நண்பரே, என்ன செய்வது, நாம் தான் சமாளிக்க வேண்டும், முடிந்த அளவு செலவுகளை குறைத்து, சொகுசான சிலவற்றை தியாகம் செய்தே ஆக வேண்டும். பகிர்விற்க்கு நன்றி.//
 
கருத்துகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
 

மாதேவி said...

"நடுத்தர மற்றும் ஏழைக்குடும்பங்களையே வெகுவாக பாதிக்கக்கூடியது..."

வருத்தத்திற்குரியது.

sakthi said...

வருத்தப்படவேண்டிய விஷயம் தான்

உங்கள் ஆதங்கம் புரிகின்றது

"உழவன்" "Uzhavan" said...

@மாதேவி
@சக்தி
 
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

sms said...

Better all we can join in Politics to earn money in crores. But be careful..!!!!! Join in Ruling party only...!!!!

நான் said...

அதுக்கே ஆள் கிடைக்கல