Tuesday, August 18, 2009

கார்பரேட் உலகம்


தாய்மாமனாய் இருக்கவேண்டிய
தங்கை மகள் காதணி விழா

உடன்பிறந்தவனாய் முன் நிற்கவேண்டிய
சித்தி மகள் திருமணவிழா

மஞ்சள் நீரூற்றி விளையாடும்
அம்மன் கோவில் பொங்கல் விழா

கட்டிப்பிடித்து அழுததுபோக
கண்துடைத்து ஆறுதல் சொல்லவேண்டிய
பள்ளித் தோழனின் தந்தை மரணம் .......

இப்படி எத்தனையோ
நல்லவை கெட்டவைகளுக்குப்
போகமுடியாமல் போனது!

மரணமும் ஜனனமும் கூட
வார இறுதிகளில் மட்டுமே
வரட்டுமென மனம் வேண்டினாலும்
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை
இந்தக்
கார்பரேட் உலகில்!

உழவன்
கீற்று மின்னிதழில் ஆகஸ்டு 2009ல் வெளியான கவிதை

20 comments:

PPattian said...

//மரணமும் ஜனனமும் கூட
வார இறுதிகளில் மட்டுமே
வரட்டுமென மனம் வேண்டினாலும்//

படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்.. பாழாய்ப் போன கார்ப்பரேட் உலகத்தை..

ஆ.ஞானசேகரன் said...

//மரணமும் ஜனனமும் கூட
வார இறுதிகளில் மட்டுமே
வரட்டுமென மனம் வேண்டினாலும்
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை
இந்தக்
கார்பரேட் உலகில்!//

ஆகா.. அருமையான் எதார்த்த வரிகள்... நாம் இருக்கும் உலகம் அப்படிதான் என்று நினைக்கின்றேன் நண்பா

அமிர்தவர்ஷினி அம்மா said...

//மரணமும் ஜனனமும் கூட
வார இறுதிகளில் மட்டுமே
வரட்டுமென மனம் வேண்டினாலும்//


:( வருத்தப்படவேண்டிய உண்மை

இன்றைய நடைமுறைக்கு ஏற்றவாறு மரணத்துக்குப் பின்னர் செய்யப்படும் காரியங்களை முடிந்தமட்டும் வார இறுதிகளில் வருமாறு பார்த்துக்கொள்கிறார்கள்

சிசில் said...

அருமை

sakthi said...

மரணமும் ஜனனமும் கூட
வார இறுதிகளில் மட்டுமே
வரட்டுமென மனம் வேண்டினாலும்
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை
இந்தக்
கார்பரேட் உலகில்

அருமை உழவரே

SUFFIX said...

எதார்த்தம் நண்பரே, என்ன செய்ய, நாம இப்படி ஆயிட்டோமே!!

கோமதி அரசு said...

//இப்படிஎத்தனையோ நல்லவை கெட்டவைகளுக்குப் போகமுடியாமல்
போனது!//

இப்படி எத்தனை நல் உள்ளங்கள் ஏங்கி

கிடக்கின்றனவோ?

துபாய் ராஜா said...

//மரணமும் ஜனனமும் கூட
வார இறுதிகளில் மட்டுமே
வரட்டுமென மனம் வேண்டினாலும்//

உண்மையான உண்மை.

நையாண்டி நைனா said...

அண்ணே... இங்கே தான் சுத்திகிட்டு இருக்கீங்களா?

அட்டகாசம் போங்கோ... எங்களோட நிலமைய அப்படியே அச்சடிச்சு சொல்லிட்டீங்க...

"உழவன்" "Uzhavan" said...

நையாண்டி நைனா
அண்ணே... இங்கே தான் சுத்திகிட்டு இருக்கீங்களா?
அட்டகாசம் போங்கோ... எங்களோட நிலமைய அப்படியே அச்சடிச்சு சொல்லிட்டீங்க... //
 
ஆமா நைனா இங்கதான் சுத்திக்கிட்டு இருக்கேன். வேற எங்க போறது? ஒரு 10 நாள் லீவைப்போட்டு ஊருப்பக்கம் போயிட்டுவந்தேன். அதுக்குள்ள ஒரேயடியா போய்த்தொலைஞ்சான்னு நினைச்சிட்டியா தம்பி. உங்களெல்லாம் ஒரு வழி பண்ணாம போவமா :-)
எல்லார் நிலைமையும் இப்ப இப்படித்தான் இருக்கு. ஊருக்கு போனா அவனவன் திட்டுறான் எங்களையெல்லாம் மறந்திட்டேனு சொல்லி.

சி.கருணாகரசு said...

மிக அழுத்தமான கவிதைங்க... மனதை தைத்தது. நன்று.

S.A. நவாஸுதீன் said...

///மரணமும் ஜனனமும் கூட
வார இறுதிகளில் மட்டுமே
வரட்டுமென மனம் வேண்டினாலும்
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை
இந்தக்
கார்பரேட் உலகில்///

அருமை உழவரே. உண்மையை அப்பட்டமாய் சொல்லிவிட்டீர்.

SUMAZLA/சுமஜ்லா said...

//மரணமும் ஜனனமும் கூட
வார இறுதிகளில் மட்டுமே
வரட்டுமென மனம் வேண்டினாலும்
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை
இந்தக்
கார்பரேட் உலகில்!//

எல்லார்க்கும் இந்த வரி பிடித்திருப்பதைப்போல எனக்கும். ஊருக்கு போய் வந்தீரே, அகமதி சௌக்கியமா?

கார்த்திகைப் பாண்டியன் said...

பொட்டில் அறையும் வார்த்தைகள்.. கவலை தரும் உண்மை..

Btc Guider said...

கவிதை அருமை நண்பரே

"உழவன்" "Uzhavan" said...

//SUMAZLA/சுமஜ்லா
எல்லார்க்கும் இந்த வரி பிடித்திருப்பதைப்போல எனக்கும். ஊருக்கு போய் வந்தீரே, அகமதி சௌக்கியமா? //
 
அகமதி நன்றாக இருக்கிறாள். அவளை அழைப்பதற்காகத்தான் சென்றேன். அகமதி இப்போது சென்னையில் என்னுடன் :-))
அகமதி பற்றிய விசாரிப்பிற்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :-)

"உழவன்" "Uzhavan" said...

PPattian : புபட்டியன், ஆ.ஞானசேகரன், அமிர்தவர்ஷினி அம்மா, சிசில், sakthi, ஷஃபிக்ஸ், கோமதி அரசு, துபாய் ராஜா, சி.கருணாகரசு, S.A. நவாஸுதீன், கார்த்திகைப் பாண்டியன், ரஹ்மான்
 
அனைவருக்கும் நன்றி!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அகமதி நன்றாக இருக்கிறாள். அவளை அழைப்பதற்காகத்தான் சென்றேன். அகமதி இப்போது சென்னையில் என்னுடன் :-))

அப்போ அடுத்த பதிவு அகமதி அப்டேட்ஸா இருக்கும்..

கேட்டதாக சொல்லுங்க மேடத்தை :)-

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா
அப்போ அடுத்த பதிவு அகமதி அப்டேட்ஸா இருக்கும்..
கேட்டதாக சொல்லுங்க மேடத்தை :)-//
 
ஹா ஹா.. ரொம்ப மகிழ்ச்சி அமித்துமா. கண்டிப்பா சொல்றேன் :-)
அப்டேட்ஸ்தான போட்ரலாம். ஆனா என்ன இவளோடு விளையாடுவதற்கே இப்போது நேரம் சரியாக உள்ளது.

"உழவன்" "Uzhavan" said...

ஆ.ஞானசேகரன்
நண்பரே உங்களுக்கான பரிசை எடுத்து செல்லுங்கள்... //

மிக்க நன்றி நண்பா.. Scrumptious blog award கொடுத்து மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்