Wednesday, July 15, 2009

காதலித்துப் பார் !

முந்தானை
சரிந்து கிடந்தாலும்
கண்கள்
காண மறுக்கின்றன !

எதிர்ப்படும்
பெண்களோடெல்லாம்
வாழ்ந்து பார்த்த
ஒரு வினாடிப்
பகல் கனவுகள்
இப்போதெல்லாம்
வரமறுக்கின்றன !

ஆபாசக் கதைகள்
படித்ததையும்
நீலப் படங்கள்
பார்த்ததையும்
பாவம் என்றே
சொல்கின்றன
என் மனங்கள் !

பல்லைக் காட்டி
படுக்கைக்கு அழைக்கும்
பரத்தையரைக் காணும்போது
இதயத்தில்
இரக்கமே
மேலோங்கி நிற்கிறது !

எதேச்சையாகக் கூடக்
கவர்ச்சிப் படங்களைக்
காணக் கூடாதென
கண்கள் வேண்டுகின்றன !

இவ்வாறெல்லாம்
மாறுபட்டிருக்கும்
மனதிடம் கேட்டேன்
காரணம் என்னவென்று!

மனம் சொன்னது
நீயொன்றும் யோக்கியனல்ல;
காதலிக்க ஆரம்பித்துவிட்டாயென்று !

ஆம் ...
காதலித்துப் பார்
காமம் கூட செத்துப்போகும் !

உழவன்

நன்றி: யூத்ஃபுல் விகடன்

28 comments:

சொல்லரசன் said...

நல்ல கவிதை உழவன், ஆனால் இன்றயைகாதலில் காமம் இல்லை என்று ஒத்துகொள்வது சற்று கடினம்தான்

ஐந்திணை said...

நல்லா சொன்னீங்க!

குடந்தை அன்புமணி said...

// சொல்லரசன் said...
நல்ல கவிதை உழவன், ஆனால் இன்றயைகாதலில் காமம் இல்லை என்று ஒத்துகொள்வது சற்று கடினம்தான்//

இன்றைய காதலில் மட்டுமல்ல... அன்றைய காதலில் இலைமறையாக இருந்தது. அவ்வளவுதான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை நல்லா இருக்கு.

ஆனா சொல்லரசன் கருத்துதான் எனக்கும்.

S.A. நவாஸுதீன் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு உழவன்.

சந்தனமுல்லை said...

:-)

பாலா said...

அய்யா காதலின் மூலதனமே காமம் தானே ???????????
கவிதை அழகு
ஆனால் ஏற்று கொள்ள முடியாததது

சொல்லரசன் சொன்ன இன்றைய காதல் மட்டுமல்ல்
பொதுவாக எந்த காலகட்டத்திலும் உள்ளின்று இயக்குவது காமமாகத்தான் இருக்கும்

சில சமயம் தோன்றலாம் உங்கள் கவிதைப்போல ஒத்துக்கொள்கிறேன்
ஆயினும் மூலம் காமமே

தவறு இருப்பின் மன்னிக்க

ஆபிரகாம் said...

கடைசி வரிகள் நச்

Anonymous said...

என்னங்க விகடன் சான்றிதளோடு தான் பதிவா? இந்த கவிதையை நாங்க நேத்தே பார்த்து படிச்சிட்டோமே.... நல்லாயிருக்குங்க...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

கவிதை சூப்பர்! ...உருவம் தானே முதலில் காதலை அறிமுகம் செய்கிறது...அதன் பின் தானே மற்றவைகள் ... அன்பின் அடுத்த பரிணாமம் தான் பாலுணர்வு .. காமம் என்ற வார்த்தை வந்த போது தான் அது அசிங்கப்பட்டு போனது ... உங்கள் கவிதை கூட காதல் உணர்வு வந்தபோது முறையற்ற காமம் செத்துபோனதாகத்தான் இருக்கிறது.. அங்கு காதல் உணர்வுடன் இருக்கிறது ...

அமுதா said...

நன்றாக இருக்கிறது. கடைசி வரிகள் அருமை

தினேஷ் ராம் said...

:D

"உழவன்" "Uzhavan" said...

//சொல்லரசன்
நல்ல கவிதை உழவன், ஆனால் இன்றயைகாதலில் காமம் இல்லை என்று ஒத்துகொள்வது சற்று கடினம்தான்//
 
குடந்தை அன்புமணி
இன்றைய காதலில் மட்டுமல்ல... அன்றைய காதலில் இலைமறையாக இருந்தது. அவ்வளவுதான்//
 
//அமிர்தவர்ஷினி அம்மா
கவிதை நல்லா இருக்கு.
ஆனா சொல்லரசன் கருத்துதான் எனக்கும். //
 
உங்களின் மனம் திறந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

//ஐந்திணை
நல்லா சொன்னீங்க!//
 
தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

//S.A. நவாஸுதீன்
கவிதை ரொம்ப நல்லா இருக்கு உழவன். //
 
//சந்தனமுல்லை
:-)
 
 
நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

//பாலா
தவறு இருப்பின் மன்னிக்க//

ஐயோ.. இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது தோழரே.. இந்த அளவிற்கு உரிமையோடு சொன்னதிற்காக நான் தான் அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும்.

"உழவன்" "Uzhavan" said...

//ஆபிரகாம்
கடைசி வரிகள் நச் //
 
//அமுதா
நன்றாக இருக்கிறது. கடைசி வரிகள் அருமை//
 
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வருகை தாரீர். :-)

"உழவன்" "Uzhavan" said...

//தமிழரசி
என்னங்க விகடன் சான்றிதளோடு தான் பதிவா? இந்த கவிதையை நாங்க நேத்தே பார்த்து படிச்சிட்டோமே.... நல்லாயிருக்குங்க...//
 
சான்றிதழோடுதான் பதிவிடவேண்டும் என்பதற்காக அல்ல தோழி. பதிவிட்டவர்களுக்கு நாம் கட்டும் ஒரு நன்றியுணர்வு :-)

"உழவன்" "Uzhavan" said...

//சாம்ராஜ்ய ப்ரியன்
:D//
 
வணக்கம் நண்பரே..
 
உங்களது மின்னஞ்சலையும் பார்த்தேன். மகிழ்ச்சியும் நன்றியும். உங்களின் காமெடி என்ன என்று முதலில் சொல்லுங்கள். முதலில் நாம் அதை ரசிப்போம் :-)
உலகத் திரைப்படம் பார்க்க கடந்த இரு முறையும் வந்திருக்கிறேன். இனிமேலும் வருவேன். தாங்கள் கடந்த முறை வந்தீர்களோ?

"உழவன்" "Uzhavan" said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
கவிதை சூப்பர்! ...உருவம் தானே முதலில் காதலை அறிமுகம் செய்கிறது...அதன் பின் தானே மற்றவைகள் ... அன்பின் அடுத்த பரிணாமம் தான் பாலுணர்வு .. காமம் என்ற வார்த்தை வந்த போது தான் அது அசிங்கப்பட்டு போனது ... உங்கள் கவிதை கூட காதல் உணர்வு வந்தபோது முறையற்ற காமம் செத்துபோனதாகத்தான் இருக்கிறது.. அங்கு காதல் உணர்வுடன் இருக்கிறது ...//
 
மிக்க நன்றி :-)

நையாண்டி நைனா said...

அண்ணே... நல்லா...இருக்கு.....

(அதனாலே உல்ட்டா பண்ண கை பர பரங்குது....)

Anonymous said...

" உழவன் " " Uzhavan " said...
//தமிழரசி
என்னங்க விகடன் சான்றிதளோடு தான் பதிவா? இந்த கவிதையை நாங்க நேத்தே பார்த்து படிச்சிட்டோமே.... நல்லாயிருக்குங்க...//

சான்றிதழோடுதான் பதிவிடவேண்டும் என்பதற்காக அல்ல தோழி. பதிவிட்டவர்களுக்கு நாம் கட்டும் ஒரு நன்றியுணர்வு :-)

ஹேய் விளையாட்டுக்கு சொன்னேன்ப்பா...எழுத்தோசைக்கு வரவும்....

நசரேயன் said...

வயசாகிப் போச்சுங்க

SUFFIX said...

ஆம் நன்பரே!! காதலினால் காமமும் மெருகூட்டப்படுகிறது.

"உழவன்" "Uzhavan" said...

//நையாண்டி நைனா
அண்ணே... நல்லா...இருக்கு.....
(அதனாலே உல்ட்டா பண்ண கை பர பரங்குது....) //
 
ரொம்ப நன்றி நைனா.. உங்களின் உல்ட்டாவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

//தமிழரசி
ஹேய் விளையாட்டுக்கு சொன்னேன்ப்பா...எழுத்தோசைக்கு வரவும்.... //
 
என்ன தோசை??? எழுத் தோசையா?? :-))) தோசை ரொம்ப நல்லாருக்கு.
 
உங்கள் விருதுக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி தோழி :-)

"உழவன்" "Uzhavan" said...

//நசரேயன்
வயசாகிப் போச்சுங்க//
 
அடடா... காதலுக்கு வயசெல்லாம் ஒரு தடையா?

"உழவன்" "Uzhavan" said...

//ஷ‌ஃபிக்ஸ்
ஆம் நன்பரே!! காதலினால் காமமும் மெருகூட்டப்படுகிறது. //
 
நன்றி ஷஃபி