Wednesday, July 1, 2009

காளியாத்தா...

நடை ரசித்து
உடை உடுத்தி
ஊட்டி விட்டு
சடை பின்னி பொட்டிட்டு
புத்தகப்பை சுமந்து
விடைபெற்றுச் சென்றவளோ
வீடு இன்னும் திரும்பலையே

கடிகார முள்ளுபோல
கணக்குப் பார்க்காம
அடிபட்ட நாய்போல
ஒரு இடத்திலும் நிற்காம
அடிவயித்துல அனலோடு
அங்கே இங்கேனு
எங்கெங்கோ தேடியலஞ்சேனே

வெடவெடத்துப்போன நான்
படபடப்போடு தேட
பாவிப்பய ஒருத்தன்
பணத்துக்காக கடத்திய செய்தி - என்
ஆவிக்குள்ள
அணுகுண்டாய் வந்து விழுந்ததே

அறிவியல் நான் படிச்சு
அப்துல்கலாம் ஆவேன்னு
அடிக்கடி சொல்லுவியே
என் செல்லமே

ஓட்டைப் பானை வாழ்க்கையில
கேட்ட பணம் புரட்டுமுன்ன
பொட்டலமாய் கெடக்குறீயே
என் செல்லமே

சவமாகக் கெடப்பவளை
தவமிருந்து வேண்டியமையால்
கருவாக எனக்குத் தந்த காளியாத்தா
காக்காமல் விட்டுட்டேயே - உன்
கண்ணவிஞ்சு போச்சா சொல்லாத்தா


பள்ளிக்குழந்தைகள் பணத்திற்காகக் கடத்தப்படுவதோடு கொலையும் செய்யப்படுகிறார்கள் என்ற சமீபத்திய செய்திகள் எல்லோரின் மனதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும். இப்படிப்பட்ட கொடூரச் செயல்களைக் கண்டித்தும், நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும் எழுதவேண்டும் என ஆரம்பித்த எழுத்தானதுதான் மேற்கண்டவாறு முடிந்ததது. ஆதலால் இது பற்றிய விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான பதிவை யாரேனும் எழுதினால் வரவேற்கிறேன்.

அன்புடன்
உழவன்

25 comments:

S.A. நவாஸுதீன் said...

சமீப காலமாக நடந்து வரும் கொடுமை இது. பெற்றோர்கள் மட்டுமல்லாது பள்ளிக்கூடத்திலேயும் குழந்தைகளுக்கு இதுபற்றி சொல்லிக்கொடுத்து உஷார்படுத்த வேண்டும்.

நையாண்டி நைனா said...

அண்ணே... கவுஜை எழுவது எப்படின்னே....???

குடந்தை அன்புமணி said...

உங்கள் உணர்வுகள் புரிகிறது... காலங்கள் தோறும் இந்த கடத்தல்கள், மிரட்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்களும் சரி, பள்ளியிலும் சரி குழந்தைகளிடம் இது பற்றிய விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.

SUMAZLA/சுமஜ்லா said...

கவிதை கொஞ்சம் மிரட்டலா இருக்குன்னு பயத்தோட படிச்சா, படமும்!!!

புது விட்ஜெட் நன்று!

அகநாழிகை said...

நல்ல பகிர்வு. ஏன் நீங்களே கூட இதைப்பற்றி எழுதலாமே நண்பா ?

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஆ.சுதா said...

நல்ல வலியுருத்தல்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

சமுக உணர்வுடனான, தேவையான பதிவு .. உங்கள் கவிதையில் ஒரு தாய்(தந்தை????) ஏக்கம் தெரிகிறது ...வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

//இது பற்றிய விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான பதிவை யாரேனும் எழுதினால் வரவேற்கிறேன்.//

நீங்களே எழுதுங்கள் நண்பா.... கவிதையும் நன்றாக உள்ளது

ராமலக்ஷ்மி said...

உருக்கம்.

இது போன்ற நிகழ்வுகள் சமீபகாலமாய் நிறைய நடக்கின்றன உழவன்:(!

"உழவன்" "Uzhavan" said...

//S.A. நவாஸுதீன்
சமீப காலமாக நடந்து வரும் கொடுமை இது. பெற்றோர்கள் மட்டுமல்லாது பள்ளிக்கூடத்திலேயும் குழந்தைகளுக்கு இதுபற்றி சொல்லிக்கொடுத்து உஷார்படுத்த வேண்டும்.//
 
கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

"உழவன்" "Uzhavan" said...

//நையாண்டி நைனா
அண்ணே... கவுஜை எழுவது எப்படின்னே....??? //
 
அடடா... நைனா.. இந்த கேள்விய யாராவது கவுஜை எழுதுறவங்ககிட்டதான கேட்டிருக்கனும்? எண்ட போயி கேட்டுட்டீங்களே

"உழவன்" "Uzhavan" said...

//குடந்தை அன்புமணி
உங்கள் உணர்வுகள் புரிகிறது... காலங்கள் தோறும் இந்த கடத்தல்கள், மிரட்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்களும் சரி, பள்ளியிலும் சரி குழந்தைகளிடம் இது பற்றிய விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.//
 
நிறைய "உஷார்" களையும் பிள்ளைகளுக்கு கற்றுத்தரவேண்டும்

"உழவன்" "Uzhavan" said...

//வித்யா
:(  //
 
வருத்தமாகத்தான் இருக்கிறது.. என்ன செய்வது வித்யா.

"உழவன்" "Uzhavan" said...

//SUMAZLA/சுமஜ்லா
கவிதை கொஞ்சம் மிரட்டலா இருக்குன்னு பயத்தோட படிச்சா, படமும்!!!//
 
உங்களையே கவிதை மிரட்டுதா? :-)

"உழவன்" "Uzhavan" said...

//"அகநாழிகை"
நல்ல பகிர்வு. ஏன் நீங்களே கூட இதைப்பற்றி எழுதலாமே நண்பா ?//
 
நிச்சயம் முயற்சிக்கிறேன் நண்பரே. நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.முத்துராமலிங்கம்
நல்ல வலியுருத்தல்.//
 
நன்றி.. இன்னும் விழிப்புணர்வு தேவை.

"உழவன்" "Uzhavan" said...

//நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார்
சமுக உணர்வுடனான, தேவையான பதிவு .. உங்கள் கவிதையில் ஒரு தாய்(தந்தை????) ஏக்கம் தெரிகிறது ...வாழ்த்துக்கள் //
 
இதுபோன்ற நேரங்களில் தந்தையை விட தாயின் புலம்பல்களே அதிகமா இருப்பதால்தான். தந்தை அத்தனை வலிகளையும் மனதினுள்ளேதான் பெரும்பாலும் வைத்திருப்பான். மிக்க நன்றி உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.ஞானசேகரன்
நீங்களே எழுதுங்கள் நண்பா.... கவிதையும் நன்றாக உள்ளது//
 
சரி தோழரே.. மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
உருக்கம்.
இது போன்ற நிகழ்வுகள் சமீபகாலமாய் நிறைய நடக்கின்றன உழவன்:(! //
 
ஆமாம்.. பூச்சாண்டி வருவான் கண்னைக் குத்துவான் என்றெல்லாம் கதைகள் சொல்வதுபோல், இதுபோன்ற நிகழ்வுகளிலிருந்தும் நம் குழந்தைகளைக்காக்கவும் நாம் ஏதாவது கதைகளைச் சொல்லவேண்டிய நிலையில்தான் நாம் இன்று உள்ளோம்.

sakthi said...

வெடவெடத்துப்போன நான்
படபடப்போடு தேட
பாவிப்பய ஒருத்தன்
பணத்துக்காக கடத்திய செய்தி - என்
ஆவிக்குள்ள
அணுகுண்டாய் வந்து விழுந்ததே

படிக்கின்ற போதே வருத்தமாயிருக்கின்றது

அனுபவித்தவர்களுக்கு எத்தனை கொடுமையாக இருந்திருக்கும்....

Anonymous said...

ஆம்..பொற்றோர் உற்றார் உறவினர் வலியை கவிதை வாயிலாக கொட்டிவிட்டீர்கள்..இத்தகைய கொடுடிய நிகழ்வுகள் இனி நிகழாமல் இருக்கனும்மா..திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் கதைத் தான்..ஏன் என்றால் நம் அரசாங்கத்துக்கு குடும்பத்துக்கு உழைக்கவே நேரம் போதவில்லை இது போன்று கொடுமை இழைக்கும் ஒருவனை கடுமையாக தண்டித்தால் அடுத்தவன் அதை நிகழ்த்த அஞ்சுவான் இதைப் பற்றி விரைவில் நான் எழுதுகிறேனுங்க...

"உழவன்" "Uzhavan" said...

//sakthi
படிக்கின்ற போதே வருத்தமாயிருக்கின்றது
அனுபவித்தவர்களுக்கு எத்தனை கொடுமையாக இருந்திருக்கும்.... //
 
நினைக்கயிலேயே நெஞ்சு பதறுகிறதல்லவா :-(

"உழவன்" "Uzhavan" said...

//தமிழரசி
ஆம்..பொற்றோர் உற்றார் உறவினர் வலியை கவிதை வாயிலாக கொட்டிவிட்டீர்கள்..இத்தகைய கொடுடிய நிகழ்வுகள் இனி நிகழாமல் இருக்கனும்மா..திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் கதைத் தான்..ஏன் என்றால் நம் அரசாங்கத்துக்கு குடும்பத்துக்கு உழைக்கவே நேரம் போதவில்லை இது போன்று கொடுமை இழைக்கும் ஒருவனை கடுமையாக தண்டித்தால் அடுத்தவன் அதை நிகழ்த்த அஞ்சுவான் இதைப் பற்றி விரைவில் நான் எழுதுகிறேனுங்க... //
 
எழுதினால் மிக்க மகிழ்ச்சி.. வரவேற்கிறேன் தோழி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அகநாழிகை" said...
நல்ல பகிர்வு. ஏன் நீங்களே கூட இதைப்பற்றி எழுதலாமே நண்பா ?

வழிமொழிகிறேன் உழவன்.

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா
அகநாழிகை" said...
நல்ல பகிர்வு. ஏன் நீங்களே கூட இதைப்பற்றி எழுதலாமே நண்பா ?
வழிமொழிகிறேன் உழவன்//

நீங்களுமா.. ரொம்ப மகிழ்ச்சி :-)