Monday, April 27, 2009

தங்கம் வாங்கலயோ தங்கம் - கவிதை

கட்ட வண்டி போட்டுக்கிட்டு
காடுமேடு உழுதுக்கிட்டு
கட்டையில போறவரை
கால் வயிறு குடிச்சதுபோக சேர்த்தாலும்
ஒரு சோடிக் கம்மல் கூட
ஒரே தவணையில வாங்கிடுவேனோ தெரியல!
சமைஞ்ச ரெண்டு பொண்ணுங்களுக்கும்
தாலி எப்போ ஏறுமோ தெரியல!

வானம் பார்த்த பூமியில
பொன்னு எங்க வெளயுது?
பொன்னு விலைதான் தினமிங்க ஏறுது!
கூலி வேலைக் காசுலதான்
குடும்பமே நடத்தும் போது
செய்கூலி சேதாரத்துக்கு
நாங்க எங்க போறது?

தலைப்புச் செய்தி கேட்டதில்லை
தங்க விலை கேட்க தவறுவதில்லை
விஷம் போல ஏறும் விலை கேட்டு
ரசம் தவிர வேறெதுவும் உண்டதில்லை!

மூத்தவளுக்கு வாங்குன மூக்குத்தியே
ஆயுள அடகுக் கடையில கழிக்கும்போது,
அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குனா
ஆண்டு முழுமைக்கும் செல்வம் பெருகுமென
கவர்ச்சி விளம்பரம் காட்டினாலும்,
கால் பவுனு வாங்கக்கூட
கடனுக்கு கைநீட்டும் வாழ்க்கையில
தங்கம் எங்க வாங்குறது!

பொன்னு வாங்க முடியாத எங்களுக்கு
வாங்குவதற்கும் இருக்குதோ நல்ல நாளு?
வாங்குகிற நாளே எங்களுக்கு நல்ல நாளு!

உழவன்

நன்றி: யூத்ஃபுல் விகடன்

15 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை.

//வாங்குவதற்கும் இருக்குதோ நல்ல நாளு?
வாங்குகிற நாளே எங்களுக்கு நல்ல நாளு!//

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள், அன்றாடக் கூலியில் காலம் தள்ளும் மக்கள் காணத் தவிக்கும் ‘நல்ல நாள்’ ஆசையை.

கார்த்திகைப் பாண்டியன் said...

அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிப்போன மக்களுக்கு அட்சய திருதியை ஒன்னு தான் மிச்சம்.. ஆதங்கம் சரிதான் நண்பா.. நல்ல கவிதை

சொல்லரசன் said...

//அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குனா
ஆண்டு முழுமைக்கும் செல்வம் பெருகுமென
கவர்ச்சி விளம்பரம் காட்டினாலும்,//

இந்த விளம்பரத்தை கண்டாலே நடுத்தரவர்க்கத்து குடும்ப‌தலைவனேக்கே அச்சம்.இதில் காடுமேடு உழுதுக்கிட்டு இருப்பவன் என்ன செய்யமுடியும்.

நல்ல கவிதை நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

//பொன்னு வாங்க முடியாத எங்களுக்கு
வாங்குவதற்கும் இருக்குதோ நல்ல நாளு?
வாங்குகிற நாளே எங்களுக்கு நல்ல நாளு!
//

சிந்திக்க தூண்டும் வரிகள்... ரசிக்கவா? இல்லை சிந்திக்கவா?..
விடியல் எப்பொழுது என்றுதான் தெரியவில்லை....

"உழவன்" "Uzhavan" said...

@ ராமலக்ஷ்மி
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள், அன்றாடக் கூலியில் காலம் தள்ளும் மக்கள் காணத் தவிக்கும் ‘நல்ல நாள்’ ஆசையை.//

@கார்த்திகைப் பாண்டியன்
அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிப்போன மக்களுக்கு அட்சய திருதியை ஒன்னு தான் மிச்சம்.. ஆதங்கம் சரிதான் நண்பா.. நல்ல கவிதை //

@சொல்லரசன்
இந்த விளம்பரத்தை கண்டாலே நடுத்தரவர்க்கத்து குடும்ப‌தலைவனேக்கே அச்சம்.இதில் காடுமேடு உழுதுக்கிட்டு இருப்பவன் என்ன செய்யமுடியும்.

நல்ல கவிதை நண்பரே//

ஆ.ஞானசேகரன்
சிந்திக்க தூண்டும் வரிகள்... ரசிக்கவா? இல்லை சிந்திக்கவா?..
விடியல் எப்பொழுது என்றுதான் தெரியவில்லை.... //

பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்.
சென்னை தி. நகரிலே அட்சய திருதியை அன்றுதான் தங்கம் வாங்கவேண்டும் என்று, லட்சக்கணக்கானவர்கள் இரவு பகலாக வரிசையில் நின்று தங்கத்தை முன் பதிவு செய்கிறார்கள். இருப்பவர்கள் வாங்கி விட்டுப் போகிறார்கள். அது அவர்களது நம்பிக்கை. ஆனால் இல்லாதவனும் கடன் வாங்கியாவது தங்கம் வாங்க வேண்டும் என எண்ணுகிற அளவிற்கு, அவனை யாரோ மாற்றியிருக்கிறார்கள். இது வேதனையளிக்கக் கூடிய இன்று.
மேலும் இந்த கவிதையின் வரிகள் கற்பனையல்ல.. எனது எட்டயபுரத்தைச் சுற்றிலும் உள்ள கிராமங்களிலே இன்றும் என் கண்ணில் படும் காட்சிகள்தன் இவைகள்.
இக்கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது.

Joe said...

அருமையான கவிதை உழவன் அண்ணே!

தங்கம் வாங்க முடியாத ஏழை மக்களின் எண்ணங்களை தெளிவாக பிரதிபலிக்கிறது உங்களது படைப்பு.

"உழவன்" "Uzhavan" said...

@ Joe
அருமையான கவிதை உழவன் அண்ணே!//

நன்றி தம்பி. அடிக்கடி நம்ம பக்கம் வந்து, தங்கள் கருத்தை சொல்லிட்டுப் போங்க :-)

Anonymous said...

தங்கமான குணம் கேட்டு இங்கு தாரம் தேடுவோர் உண்டோ....கொண்டுவந்தால் குணவதி கொடாது வந்தால் கொலை வலி தலைவலி.....அங்கம் அழகு கூட தங்கம் போட்டால் தான்...பார்த்து மட்டுமே பரவசபடும் பாமரக்கூட்டம் பக்கம் வர பயப்படும் பாட்டாளிகள் கூட்டம் பகட்டுக்கு வாங்கும் நடுத்தரகூட்டம் பாதுகாக்க வாங்கும் பணக்காரகூட்டம்...உண்மையை உரிய நேரம் பார்த்து சொல்லியிருக்கிங்க....

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா சொன்னீங்க நாளா பார்த்து?

எங்க இங்க தங்கம் வாங்குற மாதிரியா இருக்கு

"உழவன்" "Uzhavan" said...

@தமிழரசி
@அமிர்தவர்ஷினி

மிக்க நன்றி தோழிகளே..

மதுரை சரவணன் said...

atchaya thithi elaikalukku illai....nalla karuththu...vaalththukkal

rvelkannan said...

ஒரு தலைமுறையின் கோபத்தை/ இயலாமையை
எவ்வளவு எளிமையாக சொல்லியிருக்கீங்க உழவன்.
வாழ்த்துகளும் எனது அன்பும்

"உழவன்" "Uzhavan" said...

@ மதுரை சரவணன் - நன்றி

@ Vel Kannan - நன்றி

ஹுஸைனம்மா said...

ம்ம்.. ஒவ்வொரு வருஷமும் தங்கம் விலை ஏறும்போது, இந்த வருஷம் அக்‌ஷ்யதிரிதியைக்கெல்லாம் கூட்டம் இருக்காதுன்னு நினைச்சா, அதுவும் வருஷா வருஷம் ஏறிகிட்டே போகுது!!

நீங்கசொன்னமாதிரி, இருக்குறவன் வாங்கட்டும்; இல்லாதவனும் கடன்வாங்கியாவது வாங்கணுன்னு நினைக்க்றது தப்பு!!