பத்து ரூபாய்
தோசைக்கு
முப்பதும்,
பதினைந்து ரூபாய்
பழச்சாறுக்கு
நாற்பதும் கொடுத்ததோடு
பகட்டுக்காக
டிப்ஸ் வேறு கொடுத்துவிட்டு,
வாசல்முன் வந்து நிற்கும்
காய்கறிகாரனிடமும்
அறுந்துபோன செருப்பைத்
தைத்துக் கொடுப்பவனிடமும்
இரண்டு ரூபாயாவது
பேரம் பேசாவிட்டால்
மனம் அடங்காது
போவது ஏனோ?
உழவன்
இக்கவிதை முத்துக்கமலம் மின்னிதழில் ஏப்ரல் 2009 ல் வெளியாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
நல்ல பதிவு நண்பா.. ஒரு சராசரி மனிதனின் வாழ்வு நிலையை சொல்லி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்
முந்தைய பதிவை இப்போதுதான் நண்பா படித்தேன்.. அப்பா ஆனதற்கு வாழ்த்துக்கள்.. அமுதா.. அமிர்தவள்ளி.. இவை எனக்கு பிடித்த பெயர்கள்
நல்ல பதிவு நண்பா..
ஆமாம் சரியான உண்மை இவர்கள் கெளரவ பிச்சைகாரர்கள்...இச்சம்பவம் நம் அன்றாட வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் ஒன்றே...இதே பேரம் ஏழை ஒருவன் இன்னொரு ஏழையிடம் பேசமாட்டான் என்பதும் உண்மையே.....
ஏனோ எனக்கும் தெரியவில்லை.அங்கே அடங்கிபோகும் நாம்,
இங்கே அதிகாரத்தை காட்டுவது ஏனோ?
@கார்த்திகைப் பாண்டியன், சொல்லரசன், கடையும் ஆனந்த், தமிழரசி
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!
நல்லா இருக்குங்க
@மண்குதிரை
நல்லா இருக்குங்க//
நன்றி. தொடந்து வருகை தாரீர்.
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே.. அப்புறம்.. கொழந்தைக்கு என்ன பேரு முடிவு பண்ணி இருக்கீங்க?
@கார்த்திகைப் பாண்டியன்
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே.. அப்புறம்.. கொழந்தைக்கு என்ன பேரு முடிவு பண்ணி இருக்கீங்க? //
மிக்க நன்றி நண்பரே.. நண்பர் சொல்லரசன் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்னு கொஞ்சம் கூட எதிர்பார்கல. மகிழ்ச்சி :-)
குழந்தைக்கு " அகமதி வெண்பா " என்றுதான் பெயர் சூட்ட இருக்கிறேன். 30வது நாளில் அதாவது மே 2ம் நாள் சூட்ட இருக்கிறோம் :-)
வாழ்த்துகள் நண்பரே! பட்டாம்பூச்சி விருதுக்கும். குழந்தைக்கும்...
அகமதி வெண்பா பெயர் நன்றாக உள்ளது....
@ஆ.ஞானசேகரன்
வாழ்த்துகள் நண்பரே! பட்டாம்பூச்சி விருதுக்கும். குழந்தைக்கும்...
அகமதி வெண்பா பெயர் நன்றாக உள்ளது.... //
நன்றி. தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
ஓ.. இப்பெயர் நன்றாக உள்ளதா.. நிறைய நண்பர்களும் நன்றாக உள்ளதாகச் சொல்லிவிட்டார்கள்.. மிக்க மகிழ்ச்சி.
தங்கள் வருகை தொடர வேண்டுகிறேன்.
Post a Comment