Thursday, January 1, 2009

பண்டிகைச் சோறு



நான்கு தெருவாவது
சென்றால்தான்
ஒரு வேளை சோறு

இன்று
புத்தாண்டாம்
முதல் தெருவிலேயே
என் சோற்றுப்பாத்திரம்
நிரம்பி வழிகிறது

யாருக்குத் தெரியும்
நேற்று நான்
பட்டினி கிடந்தது !

பசிக்கு சோறுபோடக் கூட
பண்டிகை நாட்கள் வேண்டுமோ?
உழவன்

3 comments:

Think Why Not said...

Kadanthu pohum valaikaiyil
Alainthu thriyum pasipini thankum uyirkal
puluvena vilunthu thudikkum anradam katchikal..

Ivarkalukkum Pandikai vanthidumo..?

write more.. Keep up the good work...

Anonymous said...

பசிக்கு சோறுபோடக் கூட
பண்டிகை நாட்கள் வேண்டுமோ?

Pongal antu Kaakaai pola...

manithanin pasikkaka pichai iduvathai vida ingu... tharmam thalai kaakkum entu thaan pichai podukirarkal...bask

M. Thangarajan said...

உண்மைதாங்க, பண்டிகையன்று தேவைக்கதிகமாய் நிரம்பி வழிவதும், மற்ற நாட்களில் பட்டினியில் வாடுவதுமாய்..! சிந்திக்க வேண்டும்.