ஊருக்கும் சாவுண்டு
உலகுக்கும் சாவுண்டு
பேருக்கும் சாவுண்டு
பெருமைக்கும் சாவுண்டு
காருக்கும் சாவுண்டு
கடமைக்கும் சாவுண்டு
பருவத்துக்கும் சாவுண்டு
பதவிக்கும் சாவுண்டு
ஏருக்கும் சாவுண்டு
எங்களுக்கும் சாவுண்டு
எவனுக்கும் சாவுண்டு
எமனுக்கும் சாவுண்டு
இரு அடியால் புவியளந்த
தமிழுக்கும் சாவுண்டோ ?
No comments:
Post a Comment