மாஸ்க்கைக் கீழ் இறக்கிவிட்டுச்
சாமி கும்பிடுகிறாள் யாழ்குட்டி.
ஏன் என வினவியதற்கு
அப்புறம் எப்படி
நான்தான் சாமி கும்பிடுகிறேன் என சாமிக்குத் தெரியும் என்கிறாள்.
சுற்றியிருப்பவர்கள் எல்லோரும்
சிரிக்கிறார்கள்.
சிரித்தால் நம்மை சாமியில்லை என்று
சொல்லிவிடுவார்களோ என சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்கிறது
சாமி.
1 comment:
அருமை.
Post a Comment