ரயிலோ பேருந்தோ
சக பயணியுடன்
சகஜமாகப் பேசிப் பயணிக்கவேண்டும்
என்ற எனது எண்ணம்
ஒவ்வொரு பயணத்தின் போதும்
ஏதோ ஒரு காரணத்தால்
நிறைவேறாமலே போகிறது
அருகினில் பயணித்தவன்
கவிஞனெனில்
இந்நேரம் இதுபற்றிக்
கவிதையொன்று எழுதியிருப்பான்
இல்லையேல்
என்னைப்போல் இப்படி
எல்லோரிடமும் புலம்பிக்கொண்டிருப்பான்.
உழவன்
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
அருமை! புரிகிறது:)! பக்கத்தில் இருந்தவன் உங்களிடம் புலம்பியதுதானே:))))))))?
எத்தனைத் புலம்பல்களை கேட்பது???
கவிதை அருமை....
ஒரு அனுபவம் கவிதையாக்கப்பட்டதோ?
கவிதையாகவே யோசிப்பீங்க போல!
:) அருமை
ம்ம் சூப்பர்!!
நல்லாருக்கு.
பயணங்கள் போரடிக்கக் கூடாதே என்று தனியே பயணிக்க நேரிடும்போது அருகிலிருப்பவரிடம் பேச்சுக் கொடுப்பதுண்டு... பிறகு அவரிடம் ஏன் பேச்சுக் கொடுத்தோம் என்று நினைத்ததும் உண்டு...
நல்லாருக்கு...
நல்லாருக்கு ..
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
:-)))))))
உண்மைதான்.அனுபவ வரிகள்.
ஹா ஹா என்னை மாதிரி ஆளுகிட்ட உக்காந்து நீங்க சின்ன புன்னகை புரிந்தால் போதும்,உங்க ஊரு,பேரு,ஆளு சகலமும் கேட்டு சொல்லித்தான் வண்டியை விட்டு இறங்குவேம். பேசாமல் மரங்களையும்,ஊரையும் பார்த்துப் போகலாம் என்றாலும், பேசிக்கொண்டு போவது ஒரு சுகம்.நன்றி.
//ராமலக்ஷ்மி
பக்கத்தில் இருந்தவன் உங்களிடம் புலம்பியதுதானே:))))))))?//
கண்டுபிடிச்சிட்டீங்களே மேடம் கண்டுபிடிச்சிட்டீங்களே :-)
நன்றி
//க.பாலாசி
எத்தனைத் புலம்பல்களை கேட்பது???//
யாராவது ஒருத்தர் கேட்டுத்தான ஆகவேண்டும் :-)
நன்றி பாலாஜி
//தமிழரசி
ஒரு அனுபவம் கவிதையாக்கப்பட்டதோ?//
ஆமாம் தோழி.. மிக்க நன்றி :-)
//Vidhoosh
கவிதையாகவே யோசிப்பீங்க போல!
:) அருமை//
அப்படியெல்லாம் இல்ல; நாலு வரிக்கு மேல எழுதத் தெரியல. அவ்வளவுதான் :-) நன்றி
நன்றி SUFFIX
நன்றி வித்யா
நன்றி பிரவின்ஸ்கா.. ரெம்ப நாளா ஆளக் கானோம்.
நன்றி கார்த்திகைப் பாண்டியன்.. எத நினைச்சு பாண்டியா இப்படி சிரிக்கிறீங்க? ;-)
நன்றி ஹேமா
//குடந்தை அன்புமணி
பயணங்கள் போரடிக்கக் கூடாதே என்று தனியே பயணிக்க நேரிடும்போது அருகிலிருப்பவரிடம் பேச்சுக் கொடுப்பதுண்டு... பிறகு அவரிடம் ஏன் பேச்சுக் கொடுத்தோம் என்று நினைத்ததும் உண்டு...
நல்லாருக்கு...//
பேசாமல் இருப்பதற்கு ரெண்டு பேருக்குமே நிறைய காரணங்கள் இருக்கும்.. நன்றி
//பித்தனின் வாக்கு
ஹா ஹா என்னை மாதிரி ஆளுகிட்ட உக்காந்து நீங்க சின்ன புன்னகை புரிந்தால் போதும்,உங்க ஊரு,பேரு,ஆளு சகலமும் கேட்டு சொல்லித்தான் வண்டியை விட்டு இறங்குவேம். பேசாமல் மரங்களையும்,ஊரையும் பார்த்துப் போகலாம் என்றாலும், பேசிக்கொண்டு போவது ஒரு சுகம்.நன்றி.//
நீங்க அடுத்து எப்ப போறிங்கனு சொல்லுங்க நானும் வரேன். நம்ம இப்படியெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டா, பக்கத்தில் இருப்பவருக்கு நம்ம மேல டவுட் வந்திருமே தலைவா.. மயக்க பிஸ்கட் குடுத்திருவானோனு நினைக்க ஆரம்பிச்சிடுவாங்களே :-)
நன்றி
அருமை
:)))))))))
நல்லாயிருக்குங்க... வாழ்த்துக்கள்.
நன்றி திகழ்
நன்றி சே.குமார்
நல்லாயிருக்குங்க கவிதை.
நல்ல கவிதை. வாழ்த்துகள்.
- பொன்.வாசுதேவன்
உழவு கவிஞன் எழுதிய கவி அருமை.
உயிரோடை லாவண்யா, அகநாழிகை வாசு, மாதேவி - அனைவருக்கும் நன்றி
:)
உண்மையான விசயம்..
நல்ல கவிதை..
//முத்துலெட்சுமி/muthuletchumi
:)
உண்மையான விசயம்..
நல்ல கவிதை.. //
மிக்க நன்றி :-)
Post a Comment